மகாகவி பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டு, காயத்ரி மந்திரம் உபதேசம் பெற்ற ஹரிஜன இளைஞர் ரா.கனகலிங்கம், ‘என் குருநாதர்’ என்ற நூலில் எழுதியது இது.
Category: பாரதி இலக்கியம்
ரெயில்வே ஸ்தானம் – சிறுகதையும் மறுப்பும்
மகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில் ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்கும் வகையிலும், முஸ்லிம் மாதரின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதாகவும் இக்கதையை எழுதியுள்ளார் பாரதி. எனினும், இக்கதையில் சிறு தகவல் பிழை இருப்பதாக அவரது இஸ்லாமிய நண்பர் கூறியதையும் ‘சுதேசமித்திரன்’ இதழில் 'முகமதிய ஸ்திரீகளின் நிலைமை' என்ற கட்டுரையாக வெளியிட்டு, தனது பிழைக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார். என்றபோதும், முஸ்லிம் மாதரின் உரிமைக்காக தனது இஸ்லாமிய நண்பரிடம் தொடர்ந்து வாதிடுகிறார். சமூக மாற்றத்துக்காகத் துடித்த மகாகவி பாரதியின் இதயம், மதம் கடந்து சிந்தித்ததையும் இந்த சிறுகதை மற்றும் கட்டுரையில் காண முடிகிறது.
‘சுப்ரமண்ய’ வேதம்
வர்ணம் வேறு ஜாதி முறை வேறு. வர்ணத்தை ஏற்றுக்கொள்ளும் பாரதி ஜாதி முறையை ஏற்க மறுக்கிறார். வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணத்தால் ஏற்படும் பிரிவுகளை அவர் வெறுக்கிறார்.
பாரதியின் பாஞ்சாலி
வியாச முனிவரின் மூலநூலான பாரதத்தை அடியொற்றி, அதன் ஒரு பகுதியான பாஞ்சாலியின் சபதத்தை மகாகவி பாரதி கவிதையில் வடித்துத் தந்திருக்கிறான். இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டது; எழுபத்து மூன்று தலைப்புகளைக் கொண்டது; முன்னூற்றியெட்டு பாடல்களை உள்ளடக்கியது. பாஞ்சாலியைத் தன் கதையின் நாயகியாக பாரதி தேர்ந்தெடுத்தது ஏன்? அவளை அடிமைப்பட்ட பாரத தேசத்தின் உருவகமாக, பாரத தேவியாக பாவித்ததன் விளைவா? அல்லது அடிமைப் பட்டுக் கிடந்த பெண் இனத்தை விடுவிக்க வந்த எழுச்சிக் குரலா?
பகவத் கீதை- பதினேழாம் அத்தியாயம்
அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப்படுகின்றன; அவற்றின் பலன்களும் அவ்வாறே. சாத்விகம், ராஜசம், தாமசம் என்னும் இம்முன்று வகைப்பாட்டில் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளே தான் ஆகிறான் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா...
பகவத் கீதை- பதினாறாம் அத்தியாயம்
கடவுளை அறிந்தர்கள் தானே கடவுளின் இன்னொரு படிமம் (அஹம் பிரம்மாஸ்மி) என்பதை அறிவார்கள். கடவுள் இல்லை என்று இறுமாப்புடன் கூறுவோரோ கடவுளை அறியாத, அசுரத்தன்மை கொண்ட பதர்கள் (அஹம் நாஸ்தி). ஹிரண்யனின் வீழ்ச்சியைக் கண்ட பிறகும் மனமயக்கில் ஆணவத்துடன் இருக்கும் இவர்களுக்கு மீட்பு இல்லை என்கிறான் தேரோட்டியாம் கிருஷ்ணன் இந்த அத்தியாயத்தில்…
பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஒரு விளக்கம்
மகாகவி பாரதியாரின் ‘கண்ணன் பாட்டு’ தொகுதியில் ‘கண்ணம்மா என் குலதெய்வம்’ என்ற தலைப்பில் உள்ளது இந்தப் பாடல் (23-ஆவது பாடல்). 2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாரதி’ திரைப்படத்தில் இளையராஜாவின் சிலிர்ப்பூட்டும் இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீ & இளையராஜாவின் உள்ளத்தைத் தீண்டும் குரல்களின் வழியாக இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகி விட்டது. சரளமான வரிகளுடன் எளிமையாக உள்ள இந்தப் பாடலின் தத்துவ ஆழமும் ஆன்மிக உச்சமும் பிரமிப்பூட்டுபவை. ....
பகவத் கீதை- பதினைந்தாம் அத்தியாயம்
அநாதியான இந்த பிரபஞ்சம் இயற்கையின் பேருரு. இங்கு வாழும் அனைத்தும் ஆன்மாவின் பேருரு. இவ்விரண்டும் தானாக நிற்பவன் கடவுள். அவனே புருஷோத்தமன். இந்தப் பேருண்மையை அறிந்தவனே என்னை அறிந்தவன் என்கிறான் இந்த அத்தியாயத்தில், பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனின் அவதாரமான பார்த்தசாரதி…
பகவத் கீதை- பதினான்காம் அத்தியாயம்
சத்வ, ரஜஸ், தமோ குணங்கள் எனப்படும் முக்குணங்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இறைவன். இக்குணங்களைக் கடந்தவனே இறவாப்புகழ் அடைகிறான் என்பது கண்ணன் வாக்கு...
பகவத் கீதை- பதின்மூன்றாம் அத்தியாயம்
நாம் தேகத்தையே (க்ஷேத்ரம்) பிறவி என நம்புகிறோம். அது இயற்கையின் ஒரு வடிவமே. இதனுள் இருந்து நம்மை ஆட்டுவிப்பது ஆத்மா. இதை அறிந்தவன் க்ஷேத்திரக்ஞன். “பிரகிருதி (இயற்கை), புருஷன் (ஆத்மா) இவ்விரண்டும் அநாதி என்றுணர். காரிய காரணங்களை ஆக்கும் ஏது இயற்கை; சுக துக்கங்களை உணரும் ஏது ஆத்மா” என்கிறான் கண்ணன், இந்த அத்தியாயத்தில்….
பகவத் கீதை- பனிரெண்டாம் அத்தியாயம்
இதுவரையிலான அத்தியாயங்களில் வில்விஜயனை சிறுகச் சிறுகச் செதுக்கிவந்த பரந்தாமன், இந்த அத்தியாயத்தில் பக்தி யோகத்தை மட்டுமே நாடுமாறு அறிவுறுத்துகிறான். “எப்போதும் மகிழ்ச்சியுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய் என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து என் தொண்டனாகிய யோகி எனக்கினியவன்” என்று வழிகாட்டுகிறான்…
பகவத் கீதை- பதினொன்றாம் அத்தியாயம்
விபூதி யோகத்தில் இறைவனின் அம்சங்களை விவரித்த கண்ன்ன், இந்த அத்தியாயத்தில் தனது விஸ்வரூப தரிசனம் காட்டி, தனது அன்புத் தோழனை பரவசம் அடையச் செய்கிறான். அப்போது, “ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள். நான் இவர்களை ஏற்கனவே கொன்றாகி விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக்காரணமாக மட்டும் நின்று தொழில் செய்” என்று விஜயனை வழிநடத்துகிறான் பரந்தாமன்…
பகவத் கீதை- பத்தாம் அத்தியாயம்
பகவத் கீதை பத்தாவது அத்தியாயம், இறைவனின் பெருமையை வியக்கும் வகையில் இறைவனே உரைப்பதாக அமைந்திருக்கிறது. ”ஒளிகளில் ஞாயிறு... ருத்திரர்களில் நான் சங்கரன்... வீரர்களுள் ராமன்... எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான்” என்கிறார் கண்ணன். இறைவனின் புகழ் பாடும் யோகம் இது…
பகவத் கீதை- ஒன்பதாம் அத்தியாயம்
“நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா! உள்ளதும் யான்; இல்லதும் யான்” என்று இந்த ஒன்பதாவது அத்தியாயத்தில் கண்ணன் கூறுகிறார். “நீ எது செய்யினும், குந்தி மகனே! கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்” என்றும் கூறுகிறார்….
பகவத் கீதை- எட்டாம் அத்தியாயம்
பிறவி, மறுபிறவி குறித்து எட்டாம் அத்தியாயத்தில் விவரிக்கும் கண்ணன் “என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை” என்று உறுதி அளிக்கிறார். அதாவது தான் கூறியபடி, பலனை இறைவனுக்கு அர்ப்பணித்து கடமையைச் செய் என்பதே இதன் உட்பொருள்....