மிருகங்களைச் சீர்திருத்தல்

"சீமையில் சில குரங்குகளை சில ஸர்க்கஸ் கம்பெனியார் கால் சட்டை, கோட், தொப்பி, கண்ணாடி, பூட்ஸ் வகையறா மாட்டி, சாராயம் கொடுத்து, ஸிகரெட்டுப் பிடிக்கச் சொல்லி, உடுப்பு மாட்டி, உடுப்புக் கழற்றி, மேஜையிற் தீனி தின்று, அமளிப் படுத்தும்படி கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைக் காட்டி காசு வாங்கி மனிதன் பிழைத்திருக்கிறான். ..."     

சனாதன தர்மம் மற்றும் ஹிந்து மதத்தின் பரிமாணங்கள்

அமெரிக்காவைச் சார்ந்த இந்தியாவின் தோழரும், ஹிந்துத்துவஇயலில் ஆராய்ச்சியாளருமான திரு. டேவிட் ஃப்ராலே இணையதளம் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது...

தொன்மையான பண்பாடே சனாதனம்!

சனாதன தர்மத்தின் சிறப்புக் குறித்து பிரபல தமிழ் எழுத்தாளர் திருமதி. வித்யா சுப்பிரமணியம் எழுதிய கட்டுரை இது...

மகாகவி பாரதியாரின் முதல் பத்திரிகை ‘சக்கரவர்த்தினி’

பாரதியின் புகழ் பரப்பிய முன்னோடிகளில் ஒருவர் அமரர் தொ.மு.சி.ரகுநாதன். மகாகவியின் நூற்றாண்டு விழாவையொட்டி இவர் எழுதி வெளியிட்ட நூல்  ‘பாரதி - காலமும் கருத்தும்’ என்பது. மகாகவி பாரதி முதன்முதலில் ஆசிரியராக இருந்து பணியாற்றிய  ‘சக்கரவர்த்தினி’ இதழ் பற்றிய ஆராய்ச்சியை இந்த நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். இந்த அரிய நூலிலிருந்து பாரதியின்  ‘சக்கரவர்த்தினி’ பற்றிய பகுதி இது…

புனர்ஜன்மம் (1)

காலம் மாறமாற,பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதியபதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்க வேண்டும். அருமையான உள்ளக்காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை.

தைரியம்

பாரதவாசிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம் பெறுவதற்குக் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். நாம் 'துணிவு வேண்டும்' என்கிறோம். துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன.

நம்பிக்கை

பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்ப வேண்டும். இரவிலும் பகலிலும், இன்பத்திலும் துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம் தெய்வ அருளைப்பற்றி நினைக்க வேண்டும். நோய் வந்தால், அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணிய வேண்டும்.

உண்மை – ரத்தினக் களஞ்சியம்

...மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மை விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுகிறது. நமது பாட்டன்மாரும் பூட்டன்மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்ப வேண்டுமென்ற விஷயமானது, குழந்தையாக இருக்கும்போது தைத்த உடுப்புக்களையே பெரியவனான போதும் போட்டுக்கொள்ள வேண்டுமென்பதற்கு ஒப்பாகும்...

நாடாளுமன்றத்தில் செங்கோல்

விரைவில் வெளியாக உள்ள ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ நூலில் இடம்பெறவுள்ள குறிப்பு இது...

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்?

வெறும் அரசியல் லாபங்களுக்காக இலக்கியம் பேசும் சுயநலவாதிகளையெல்லாம்  தமிழின் முகவரி என்று சுயநலத்துக்காக கொண்டாடுவதைப் பார்க்கும் பொழுது, மகாகவி பாரதியின்  “விதியே விதியே தமிழச்சாதியை என் செய்ய நினைத்தாய் எனக் குரையாயோ” என்ற மனக்குமுறல் தான் நினைவுக்கு வருகிறது.

தமிழ் கூறும் சநாதனம்!

சநாதன தர்மம் என்பது ஹிந்து வாழ்வியல் அறம். இங்கே தமிழ் இலக்கியங்கள் கூறும் சநாதன வாழ்வியல் அறங்கள் பதமாக எடுத்துக்காட்டப்படுகின்றன...

சநாதன தர்மம்: அமுத மொழிகள் சில…

சநாதன தர்மத்தின் சிறப்புக் குறித்து சான்றோர் பெருமக்கள் சிலரது அமுதமொழிகள் இவை...

சநாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்

கடலுார் மாவட்டம், வடலுாரில் 2023  ஜூன் 21-இல் நடைபெற்ற  வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி பேசிய உரையின் சுருக்கமான தொகுப்பு இது…

அகல் விளக்கு- 27

சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். "நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு" என்றான்.... மு.வ.வின் அகல் விளக்கு- நிறைவு....

அகல் விளக்கு- 26

“என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவுகொண்டு பழகவில்லையா? நீங்கள் ஆண்கள் இருவர் பழகும்போதும் அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பழகும்போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம் ஏமாற்றம் எல்லாம்?" என்றாள். அந்த வினாவுக்கு விடையாக நான் ஒன்றும் கூறவில்லை. அவர் என்னிடம் விடை எதிர்பார்க்கவும் இல்லை. படைத்தவனையே கேட்ட வினாவாக இருந்தது அது....