அந்தப் பெண்ணுக்கு அதிகமானிடத்திலும் அவனைச் சேர்ந்தோரிடத்திலும் கட்டுக்கடங்காத வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பும் உண்டாயிற்று. யாரேனும் அதிகமானைப் புகழ்ந்தால் அவள் அங்கே நிற்பதில்லை. 'கற்பின் பெருமையை உணராத, பெண்மையின் உயர்வைக் காப்பாற்றாத, அரசன் அரசனா? அரக்கன் அல்லவா?' என்று எண்ணி எண்ணிப் பொருமினாள். பாவம்! யாருக்கும் நினைந்து தீங்கு புரியாத அதிகமான் ....அந்தப் பெண்ணளவில் பொல்லாதவன் ஆகி விட்டான். அதை ஊழ்வினைப் பயன் என்று சொல்வதையன்றி வேறு என்ன வென்பது? (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 12வது அத்தியாயம்)...
Author: vamumurali
பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-3
பிரிட்டனில் தொழிலாளர் கட்சித் தலைவராக இருந்தவர் ராம்சே மெக்டொனால்ட்; 1929- 1935இல் அந்நாட்டுப் பிரதமர் ஆனவர். 1914-இல் அவர் எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தபோது, இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு மககவி பாரதி எழுதிய கடிதம் இது. இக்கடிதம் ‘தி ஹிண்டு’ பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. பிரிட்டீஷ் இந்தியாவிலிருந்து தப்பி பாண்டிச்சேரி செல்ல வேண்டிய கட்டாயம் தனக்கு ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும், தன்னை பொய்வழக்குகளில் கைது செய்யத் துடிக்கும் பிரிட்டீஷ் இந்திய அரசு குறித்தும் இக்கடிதத்தில் பாரதி குறிப்பிட்டிருக்கிறார். ஆங்கிலேய அரசுக்கு கடிவாளமாக இருக்கக் கூடிய தொழிலாளர் கட்சித் தலைவரின் கவனத்துக்கு இந்த விஷயங்கள் செல்லுமானால் நற்பயன் கிடைக்கும் என்று மகாகவி பாரதி நம்பியிருப்பதை, கடித வாசகங்கள் காட்டுகின்றன. அந்நிய ஆட்சியை எதிர்த்து, பிரிட்டீஷார் தலையிட இயலாத பாண்டிச்சேரியில் அரசியல் அடைக்கலம் புகுந்த நிலையிலும், பாரதி சுதந்திர தாகத்துடன் தனது எழுத்து வன்மையுடன் போராடியதற்கான சான்றே இக்கடிதம்...
நவதந்திரக் கதைகள்
கதைக்குள்ளே கதை சொல்கிற பான்மையில் அமைந்தவை இந்த நவதந்திரக் கதைகள். பஞ்சதந்திரக் கதைகளைப் போன்ற கதைப் போக்குக் கொண்டது என்றும் கொள்ளலாம். மகாகவி பாரதியின் கதை சொல்லும் வன்மைக்கு இக்கதைகள் மிகச் சிறந்த சான்று. இவை, தொடராக முதன்முதலாக ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் 10-8-1916ஆம் தேதியிட்ட இதழில் பிரசுரமாகத் தொடங்கியது. இடையிடையே சில சமயங்களில் கதைத் தொடர் பிரசுரமாகாமல் இருந்ததும் உண்டு. கதைத் தொடர் நிறைவு பெறவில்லை; 26-2-1918ஆம் தேதிய இதழோடு நின்று விடுகின்றது. இந்தக் கதைகள் 1928 ஆம் வருஷம் பாரதி பிரசுராலயத்தாரால் நூலாக்கம் செய்யப்பட்டன....
கண்ணன் பாட்டு- 1
‘முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்படும் மகாகவியின் பாடல்கள்: கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவை. இவற்றில் கண்ணன் பாட்டு மிகவும் அலாதியானது. பக்திப் பேருவகையின் உச்சத்துக்கு இப்பாடல்கள் உதாரணம்....‘கண்ணன் பாட்டு’ என்ற தலைப்பில் பாரதியார் 23 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே, கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார். ...மற்ற தலைப்புகளில் எல்லாம் ஒவ்வொரு பாட்டு வீதம் எழுதிய பாரதி, காதலன் எனும் தலைப்பில் 5 பாடல்களையும், காதலி எனும் தலைப்பில் 6 பாடல்களையும் எழுதியிருக்கிறார். ... (இப் பாடல், ’கண்ணன் - என் தோழன்’ என்ற முதல் பாடலாகும்).
அதிகமான் நெடுமான் அஞ்சி-11
ஒளவையார் சிறிது பேசாமல் இருந்தார். உவமையை எதற்காகச் சொன்னார் என்று முன் இருந்தவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப் புலமைப் பிராட்டியாரே உவமையை விளக்க முன்வந்தார்: "அந்தத் தீக் கடைகோல் வீட்டின் இறப்பிலே செருகி யிருக்கும்போது தன் ஆற்றல் தோன்றாமல் வெறும் கோலாக இப்பதுபோல, மிடுக்கு அற்றவனைப் போல் அமைந்திருக்கும் இயல்பும் நம் அரசனிடம் உண்டு. தான் தோன்றாமல் இருக்கவும் வல்லவன் அவன். செவ்வி நேர்ந்தபோது அந்தக் கடைகோலில் எரி முறுகி எழுந்து கொழுந்து விட்டுப் புறப்படுவது போல் அவன் புறப்படவும் வல்லவன். இன்ன காலத்தில் இது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவன் அவன். கிடக்கும்போது கிடந்து பாயும்போது நன்றாகப் பாயவல்ல பெரு வீரனை யல்லவா நாம் மன்னனாகப் பெற்றிருக்கிறோம்?" பேச்சை முடித்த மூதாட்டியார் பொருள் செறிந்த பாடல் ஒன்றைச் சொன்னார்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 11வது அத்தியாயத்திலிருந்து)...
பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-2
மகாகவி பாரதி தனது அரசியல் குருநாதர் திலகருக்கு எழுதிய கடிதம், நியூ இண்டியா, தி ஹிண்டு பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன....
சின்னச் சங்கரன் கதை
முற்றுப் பெறாமல் நமக்குக் கிடைத்த மகாகவி பாரதியின் கதைப் பொக்கிஷங்களுள் ‘சின்னச் சங்கரன் கதை’யும் அடங்கும். இந்தக் கதைத் தொடர் தியாகசீலர் சுப்பிரமணிய சிவம் நடத்திய ‘ஞானபாநு’ மாதப் பத்திரிகையிலே 1913 மே மாத இதழில் முதன்முதலாக வெளிப்பட்டது; 1914 மார்ச் மாத இதழுடன் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை. அதாவது, நான்கு அத்தியாயங்களே பிரசுரமாகி உள்ளன. இந்தக் கதையை பாரதி தமது சொந்தப் பெயரில் எழுதாமல், ‘சாவித்திரி’ என்ற புனைபெயரில் எழுதினார். கதையின் தொடர்ச்சியைப் பாரதி எழுதத் திட்டமிட்டிருந்தார் என்பதை அவர் எழுதிய குறிப்பொன்றால் தெரிந்துகொள்ள முடிகின்றது. பாரதியின் அதீத நையாண்டித் திறனுக்கு அற்புதமான உதாரணம், இந்த முற்றுப் பெறாத புதினம்....
லஜ்ஜா: நூல் மதிப்புரை
பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1993-இல் வங்கமொழியில் எழுதிய ‘லஜ்ஜா’ புதினம், அவரை தனது தாய்நாட்டிலிருந்தே விரட்டியடித்தது. 1994-இல் நாடுகடத்தப்பட்ட அவர், இந்தியாவில் விருந்தினராகவும் அரசின் பாதுகாப்பிலும் இருப்பதால்தான் இன்னமும் உயிருடன் உள்ளார். அப்படி என்ன அந்தப் புதினத்தில் எழுதி விட்டார்? அவருக்கு பத்வா விதித்து, கொலை செய்யத் தேடி அலையும் மதத் தீவிரவாதிகள், எதற்காக அவ்வாறு செய்கின்றனர்? அவரை அந்நாட்டு அரசு ஏன் பாதுகாக்க முற்படவில்லை? இக்கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், இந்த நூலைப் படிக்க வேண்டும்..... ‘லஜ்ஜா’ என்றால் வங்க மொழியில் ‘அவமானம்’ என்று பொருள். அவமானம் யாருக்கு? வங்க மொழி அடிப்படையில் மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்கத்துக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து போராடிப் பெற்றது தான் பங்களாதேஷ். ... ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியா செல்வதற்கு வாய்ப்புகள் இருந்தபோதும், உள்ளூர் முஸ்லிம்களின் சகோதரத்துவத்தை நம்பி கிழக்கு பாகிஸ்தானிலும், பின்னாளில் பங்களாதேஷிலும் தங்கிய ஹிந்துக்களை, அந்நாட்டு முஸ்லிம் மக்கள் வஞ்சித்துவிட்டதை தீராக்கோபத்துடன் எழுதிய தஸ்லிமா, அதுவே அவமானம் என்கிறார்.
பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-1
மகாகவி பாரதி தனது மனவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதம், அவரது தன்னிலை விளக்கம். தவிர, தமிழறிஞர் மு.ராகவையங்காரைப் பாராட்டி எழுதிய கடிதம், தம்பி விசுவநாதனுக்கும், அன்புத் தோழன் நெல்லையப்பருக்கும், எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கும் எழுதிய கடிதங்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...
காற்றிடைச் சாளரம் -3
பயணிகளின்
கனிவான கவனத்திற்கு…
தயாராக இருக்கவும்.
தலையில் பறவையிடும் எச்சமாய்,
கிளையில் வந்தமரும் பறவையாய்,
கூட்டத்தில் வெடிக்கும் வன்முறையாய்,
வழியில் எதிர்ப்படும் கந்துக்காரனாய்,
உங்களுக்கான தடத்தில்
உங்களுக்கான வண்டி
எப்போதும் வரலாம்.
ஞானரதம் (9- 11)
ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை, ஸாரமில்லை, ஸத்துக் கிடையாது: உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாய் இருக்கும் வாழ்க்கை; ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகின்றான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிறான், ஆனால், “நான் ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லையே” என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லையென்றெண்ணி ஏமாற்றுகிறான். ஐயோ மூடா நீ ஏமாற்றுவதனால், முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம். (மகாகவி பாரதியின் ஞானரதத்தில் இருந்து)...
அதிகமான் நெடுமான் அஞ்சி-10
அதிகமான் தனக்கு அவசியமாக இருந்தால் வேண்டிய மன்னர்களைத் துணையாகக் கூட்டிக்கொள்ளலாம் என்று கருதினான். சோழ மன்னனுக்கும் பாண்டியனுக்கும் ஆள் அனுப்பினான். பெருஞ்சேரல் இரும்பொறை போருக்கு வரப் போகிறானென்றும், தான் கோட்டையிலிருந்தபடியே போர் செய்யப் போவதாகவும் தெரிவித்தான். ’கோட்டைக்குள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு ஊறுபாடு யாதும் நேராது. ஒருகால் கோட்டைக்கு வெளியே வந்து போரிட வேண்டிய நிலை வந்தால் அப்போது உங்கள் உதவியை எதிர்பார்ப்பேன்' என்றும் எழுதியனுப்பினான். ஒளவையார் தூது சென்று நட்பு உண்டாக்கிய தொண்டைமானுக்கும் இப்படி ஓர் ஓலை போக்கினான். அவர்களிடமிருந்து இசைவான விடையே வந்தது. பாண்டிய சோழ மன்னர்களுக்குச் சேரனிடம் நட்பு இல்லை. ஆதலின் இந்தப் போர் பெரிதானால் தாமும் சேர்ந்து இரும்பொறையை வீழ்த்த வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 10வது பகுதி)...
ஞானரதம் (1-8)
மகாகவி பாரதியின் ’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை; குறும் புதினம்; அற்புதமான தத்துவ விசாரணை. ஆங்காங்கே தேசத்தின் வீழ்ச்சி குறித்த புலம்பலுடன் விழிப்புணர்வூட்டும் கடமையுணர்வும் உண்டு.... வாழ்வின் உன்னதக் கணமொன்றைத் தேடியலையும் பாரதியின் ஆன்மா, தன்னையே கதையின் நாயகனாக்கி, மன ரதமேறி வெவ்வேறு உலகங்களில் சஞ்சாரம் செய்கிறது. கற்பனைகளுக்கும், நினைவுகளுக்கும் தூரம் என்பது ஒரு பொருட்டாகுமா, என்ன? துன்பங்களை ஊடறுத்துச் சென்றுவர பாரதி தேர்வு செய்த ஐந்து உலகங்களும் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கானவையே....தற்காலத்தில் ‘டைம் மெஷின்’ (கால இயந்திரம்) என்ற கருதுகோளுடன் புதினங்கள் புனையப்படுகின்றன. இதற்கு ஒப்பான ஒரு சிந்தனையை நூறாண்டுகளுக்கு முன்னமே தமிழ் இலக்கியத்தில் தனது ஞானரதம் வாயிலாக அறிமுகப்படுத்தியவர் பாரதி என்று சொல்லலாம். அதிலும் தன்னையே கதையின் நாயகன் ஆக்கிக்கொண்டு, சுய எள்ளலுடன் எதையும் அணுகும் சமநிலைப் பார்வை, இந்தப் படைப்பை பேரிலக்கியம் ஆக்குகிறது.....
கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் ‘திருக்குறள்’ என்ற ஒப்பற்ற நூலைத் தந்திருக்கிறார். இன்றும் திருக்குறளின் மூலம் வாழ்ந்து, திருவள்ளுவர் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்....சுவாமி விவேகானந்தர் தாம் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு தன் சொந்தக் கல்வியை இழந்து, அறியாமையிலும் வறுமையிலும் சிக்கித் தவித்த எண்ணற்ற மக்களின் உள்ளத்தில் தன் சாகாவரம் பெற்ற சொற்களின் மூலம் எழுச்சி தீபம் ஏற்றியவர்....மகான்கள் வாழ்ந்த காலம் வேறாக இருக்கலாம். அவர்களது மொழி வேறாக இருக்கலாம். ஆனால் அவர்களுடைய கருத்துக்களில் காணப்படும் ஒற்றுமை என்றும் உய்த்து உணரத்தக்கதாகும்.... (பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காராநந்தரின் கட்டுரை)...
அதிகமான் நெடுமான் அஞ்சி-9
தனக்காக ஓரியைக் கொன்றதுதான் காரியின் இன்றை நிலைக்குக் காரணம் என்பதைப் பெருஞ் சேரலிரும்பொறை உணர வேண்டுமென்றே இப்படிப் பேசினான் மலையமான். அவ்வரசன் அதை நன்கு உணர்ந்தான். "எனக்குக் கொல்லிக் கூற்றத்தை ஓரியினிடமிருந்து கைப்பற்றித் தந்த வீரத்தை நான் மறப்பவன் அல்லன். எப்பாடு பட்டாவது உம்முடைய கோவலூரை அதிகமானிடமிருந்து உம்முடைய ஆட்சிக்கு வரச்செய்து பழையபடி உம்மை மலாட்டின் தலைவனாக ஆக்குவேன். நான் சேரர் குலத்தில் தோன்றியது உண்மையாயின் இந்தச் சொல்லை நிறைவேற்றுவேன்" என்று வீறுடன் வஞ்சினம் கூறினான் சேரன்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 9வது அத்தியாயம்)....