கடமையைச் செய்! – நூல் பதிப்புரை

மகாகவி பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் ‘கடமையைச் செய்!’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பிரசுரத்தால் நூலாக வெளியிடப்படுகிறது. இந்த நூலில் இடம் பெறும் பதிப்புரை இது....

தமிழின் நிலை    

தெலுங்கர், மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ்நாட்டிற்கு விளையவில்லை.