சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் நூலகராகப் பணியாற்றிவரும் திரு. ரெங்கய்யா முருகன், வ.உ.சி. ஆய்வாளரும் கூட. வ.உ.சி. மீது அளப்பரிய மரியாதை கொண்ட இவர், அவரை அழைக்கும்போதெல்லாம் பெரியவர் என்று குறிப்பிடாமல் எழுதுவதில்லை. இவரது முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது…
Tag: வரலாறு
ஒரு சரித்திரத் தவறு!
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் ‘பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை’ நூலை தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் திரு. பிஆர்.மகாதேவன். அவரது சீரிய சிந்தனை மிளிரும் சிறிய கட்டுரை இது....
அக்டோபர் 21: இந்திய வரலாற்றில் ஒரு பொன்னாள்
1943 அக்டோபர் 21 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் சிங்கப்பூரில் முதல் தேசத்திற்கு வெளியிலான சுதந்திர இந்திய அரசு நிறுவப்பட்டது (Govt in Exile). அந்த அரசின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்றார்.
வானம் வசப்பட்டது! நிலவில் கால் பதித்தது இந்தியா!
நிலவைக் காட்டி சோறூட்டிய அன்னையர்களால் வளர்ந்தவர்கள் நாம். இன்று அதே நிலவில் நமது ‘சந்திரயான் – 3’ விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் இறங்கி நிலைகொண்டிருக்கிறது. அதன் குழந்தையான ‘பிரக்யான்’ ரோவர் நிலவில் இறங்கி ஆராய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இனிவரும் தலைமுறைகளில் குழந்தைகளுக்கு சந்திரனைக் காட்டி சோறூட்டும்போது, ‘சந்திரயான்’ அங்கு இருப்பதும் கூறப்படும். இது ஒரு பொன்னான தருணம். உலகில் இந்தியர்கள் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட தருணம்.
விக்ரம்: நான் வெற்றி பெற்றவன்! நிலவைத் தொட்டு விட்டவன்!
‘விக்ரம்’ என்றால் வெற்றி என்று பொருள். அது மட்டுமல்ல, இந்த ‘விக்ரம்’ என்ற சாதனையின் பின்புலத்தில் மகத்தான ஒரு விஞ்ஞானியின் தீர்க்கதரிசன முயற்சிகள் ஒளிர்கின்றன. அவர்தான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை (இஸ்ரோ) நிறுவிய விக்ரம் அம்பாலால் சாராபாய்....
மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி…
ஒருவர் மராட்டியத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இம்மூவரும் ஒரே குறிக்கோளுக்காக வெவ்வேறு முறைகளில் போராடினர். இவர்களுக்கு என்ன ஒற்றுமை? இந்தியாவின் மூன்று முனைகளில் இருந்து ஒரே திசையை நோக்கி இவர்களை நடக்கச் செய்த சக்தி எது? ஜூலை 23 என்ற நாள் இம்மூவரின் வாழ்வில் பெற்ற இடம் தான் இவர்களை இன்று நினைத்துப் பார்க்க வைக்கிறது. தேசபக்தியே இவர்களை இணைத்தது; வழிநடத்தியது.
கடமையும் கயமையும்
‘Integration of princely states’ எனும் நூலில், நாம் அறிந்திராத சம்பவங்களும் படேலும் வி.பி.மேனனும் புரிந்த சாகஸக் கதைகளும் உள்ளன. அவற்றை ஒன்றுதிரட்டி ஒரு கட்டுரையாகத் தந்துள்ளார் நமது இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிக்குமார். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப நாட்களில் நிகழ்ந்த சில காட்சிகளைக் காட்டுவதன் மூலமாக, கட்டுச்சோற்று மூட்டையில் பெருச்சாளியாக இருந்த ஒருவரை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை…
நீதியின் அடையாளம் செங்கோல்!
செங்கோலின் சிறப்புகள் குறித்து பத்திரிகையாளர் கோதை ஜோதிலட்சுமி எழுதி ‘தினமணி’ நாளிதழில் வெளியான இனிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.
தமிழ் மரபில் செங்கோலுக்கு தனி இடம்!
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்; மருத்துவர்; சிறந்த பேச்சாளர்; பாரதி ஆர்வலர்; தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஜி20 இருக்கை பேராசிரியரான, டாக்டர் சுதா சேஷய்யன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது…
புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்!
பகுத்தறிவு என்ற போர்வையில், கேள்விகளை மட்டுமே எழுப்பி கேலி பேசிய வீணர் கூட்டத்தால் நமது கடவுளர்கள் அவதூறு செய்யப்பட்ட அதே காலத்தில், அந்தக் கூட்டத்துக்குள்ளேயே குத்துவெட்டு நிகழ்ந்ததும் கடவுளின் லீலை தான். இதோ, முதிய வயதில் திருமணம் செய்து, தனது அறிவுரையை தானே மீறிய பெரியவர் ஒருவரை அவரது சீடனே கண்டிக்கிறார். 9.7.1949-இல் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் - மணியம்மை திருமணம் நடைபெற்றது. அதனைக் கண்டித்து ‘திராவிட நாடு’ பத்திரிகையில் (03.07.1949) தி.மு.க. நிறுவனர் சி.என்.அண்ணாதுரை எழுதிய கட்டுரை இது:
ஆஷ் படுகொலையும் வாஞ்சியின் தியாகமும்
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேய அதிகாரிகளைக் கொலை செய்வதன் மூலமாக அவர்களை நாட்டை விட்டுத் துரத்திவிட முடியும் என்று சிலர் நம்பினர். அத்தகைய நிகழ்வுகளுள் ஒன்றுதான், தமிழகத்தின் மணியாச்சியில் நிகழ்ந்த துணை கலெக்டர் ஆஷ் படுகொலை. இந்தப் படுகொலையை நிகழ்த்தியவர் வீரவாஞ்சி. ஆனால், அவருக்கு நமது மாநிலம் உரிய மதிப்பை அளித்திருக்கிறதா? நண்பர் திரு. கி.கார்த்திக்குமார் எழுதியுள்ள இக்கட்டுரை அளிக்கும் பதில் வேதனையானது தான்...
திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடுவோம்!
நமது முன்னோரை அவர்களது நினைவிற்குரிய திருநாட்களில் நினைவுகூர்வதும் வணங்கி மகிழ்வதும் மரபு. அந்த அடிப்படையில், வைகாசி விசாகமான இன்று திருவள்ளுவரைப் போற்றி மகிழ்கிறோம். இந்நாளில் வைகாசி அனுஷமே திருவள்ளுவர் நாள் என்று, 1931-இல் கூடி உறுதி செய்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு நன்றி கூறுகிறோம். இன்று தமிழகம் எங்கும் தேசிய, தெய்வீக நம்பிக்கை மிக்கவர்களால் திருவள்ளுவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த வரலாற்றுப் பதிவை இங்கு வெளியிடுகிறோம்…
கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்-2
தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2023 மே 19-இல் அறிவித்திருக்கிறது. மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி செப். 30-ஆம் தேதிக்குள் மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றதல்ல. அதேசமயம், அதன் தொடர்ச்சியான நடவடிக்கையும் கூட. இந்தத் தருணத்தில், 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 'காண்டீபம்’ காலாண்டிதழில் (தை 2017) வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை நினைவுகூர்வதற்கு உரியதாக உள்ளது. அக்கட்டுரை (பகுதி- 2) இங்கே நமது சரித்திரத் தேர்ச்சிக்காக..
கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்-1
தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2023 மே 19-இல் அறிவித்திருக்கிறது. மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி செப். 30-ஆம் தேதிக்குள் மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றதல்ல. அதேசமயம், அதன் தொடர்ச்சியான நடவடிக்கையும் கூட. இந்தத் தருணத்தில், 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 'காண்டீபம்’ காலாண்டிதழில் (தை 2017) வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை நினைவுகூர்வதற்கு உரியதாக உள்ளது. அக்கட்டுரை இங்கே நமது சரித்திரத் தேர்ச்சிக்காக..
உணர்வுகளை உன்னதமாக்கிய நம் துறவியர்
மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இரா.இளங்கோ, திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…