சகுனியின் ஏளனத்தை அடுத்து சூதாட தருமன் சம்மதிக்கிறான். அப்போது முந்தைய வழக்கத்தை தொடர்வது மரபு என்ற வாதத்தை மகாகவி பாரதி கண்டிக்கிறார். ”முன்பி ருந்ததொர் காரணத் தாலே, மூடரே,பொய்யை மெய்என லாமோ?” என்கிறார். இறுதியில் “மதியி னும்விதி தான் பெரி தன்றோ?” என்று புலம்பலுடன் இக்கவிதையை நிறைவு செய்கிறார்...
Tag: மகாகவி பாரதி
பாஞ்சாலி சபதம்- 1.2.8
சூதாட்டத்தின் தீமையைக் கூறும் தருமனிடம், ‘சாத்திரம் பேசாதே, மன்னர்களை சூதாட அழைத்தால் மறுப்பது மரபல்ல’ என்கிறான் சகுனி.
பாஞ்சாலி சபதம் – 1.2.7
தோலுக்காக பசுவினைக் கொல்வாருண்டோ? சூது அத்தகையதுதான் என்கிறான் தருமன். அவனுள்ளம் இது பீடன்று என மறுக்கிறது. அறநூலோர் வெறுக்கும் சூதினை நெஞ்சிலிருந்து நீக்குக என்று மாமன் சகுனியிடம் மன்றாடுகிறான் தருமன்...
கடல் – கண்ணிகள்
‘இதுவரை அச்சேறாத பாரதியார் கவிதை’ என்று குறிப்பிட்டு 1966 தினமணி ஞாயிறு மலர் ஒன்றில் ‘கடல் – கண்ணிகள்’ என்ற தலைப்பில் வெளியான கவிதை - மனிதனும் கடலும் உரையாடுவதாக அமைந்த 44 வரி படைப்பு இது.
பாஞ்சாலி சபதம் – 1.2.6
வெல்ல முடியும் என்ற எண்ணம் வரவழைப்பதே சூதாட்டத்தின் முதல்படி. அவ்வாறே, தருமனுக்கு சகுனி ஆசைவார்த்தை கூறுவதாக இப்பாடல்களை அமைத்திருக்கிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம்- 1.2.5
சூதாட அழைத்த சகுனிக்கு, ‘அது அறமன்று’ என தருமன் அவையில் மறுப்புரை கூறுவதாக மகாகவி பாரதி எழுதுகிறார்...
பாஞ்சாலி சபதம் – 1.2.4
அஸ்தினாபுர அரசவைக்கு பாண்டவர் வந்து அமர்ந்ததும், கவறாட்டத்தில் இணையற்ற புகழுடையவனான சகுனி தருமனை சூதாட்டத்துக்கு அழைக்கிறான். வில்லுறு போரில் வென்றவர்களான நீங்கள் வல்லுறு சூதுப்போரிலும் வெல்ல வேண்டும் என்று சகுனி அழைப்பதாக மகாகவி பாரதி கவிதை புனைகிறார்...
பாஞ்சாலி சபதம்- 1.2.3
மறுநாள் காலை அரச ஆடை புனைந்து, திருதராஷ்டிரன் அவைக்களத்தை ஏகுகின்றனர் பாணடவர்கள். அங்கு வீற்றிருப்போரைக் குறிப்பிடுகையில் ‘கேட்டினுக் கிரையாவான் -மதி கெடுந் துரியோதனன் கிளையினரும்’ சூழ்ந்திருப்பதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.2.2
அஸ்தினாபுரம் விஜயம் செய்த பாண்டவர்களை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்ற காட்சியை மகாகவி வர்ணிக்கும்போதே, பாண்டவர்பால் மக்களுக்கு இருந்த அன்பு புலனாகும். மன்னரையும் உறவினர்களையும் குருவையும் பிதாமகரையும் வணங்கிய பின் ஓய்வுக்குச் செல்கின்ரனர் பாண்டவர்கள், வரபோகும் துயரை அறியாமல்...
பாஞ்சாலி சபதம் – 1.2.1
கலைகளின் கடவுளான தமிழ் வாணி அருளும் தொழில்களை இச் சிறு பாடலில் பட்டியலிட்டு வணங்கி, பாஞ்சாலி சபதத்தின் இரண்டாவது சருக்கத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.1.27
அஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஒரு சோலையின்கண் வில்விஜயன் பாஞ்சாலியுடன் தனித்திருக்கிறான். அப்போது வானில் தோன்றிய வண்ண ஜாலங்களை, இயற்கையின் வனப்புகளை வியந்து பேசுகிறான். வண்ணத் தீறல்களாய் வானம் காட்டும் அழகிய காட்சிகளை விவரிக்கும் விஜயன், பச்சை வட்டமாய் மின்னும் கதிரவனைக் காட்டுகிறான். அது ஒரு அழகிய அறிவியல் சொல்லாட்சி. இறுதியில் காயத்ரி மந்திரத்தின் தமிழ் வடிவை தனது கவிதையில் புகுத்துகிறார் மகாகவி பாரதி. 'செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக' என்று ஞாயிற்றைப் புகழ்கின்றனர் இருவரும். விதிவழிப்பயணம் தொடர்கிறது...
பாஞ்சாலி சபதம் – 1.1.26
அஸ்தினாபுர மன்னரின் அழைப்பை ஏற்று பாண்டவர்கள் அரசுமுறைப்படி பரிசுப்பொருள்கள், படைகள் சூழ இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பிச் செல்கின்றனர். ‘நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும்;சிற்றெறும்பால் யானை சாகும்’ என்று, இதனை மன விரக்தியுடன் சொல்கிறார் நூலாசிரியரான மககவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.1.25
தங்கள் கோபமான சொற்களுக்கு தருமன் அளித்த பதிலுரை கேட்ட தம்பியர் நால்வரும், அன்பு மிகுதியால்தான் அண்ணனிடம் வாதிட்டோம்; அண்ணன் சொல்லே தங்களுக்கு வேதவாக்கு என்கின்றனர். மூத்தவர் சொல்லை மறுக்காமல் ஏற்பது அக்கால வழக்கம் என்பதை இப்பாடலில் காட்டுகிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.1.24
பீமனைத் தொடர்ந்து விஜயனும், நகுல சகாதேவரும் தங்கள் தனையனை எதிர்த்து வாதிடுகின்றனர். இதுகாறும் அண்ணனை எதிர்த்துப் பேசியிராத அவர்கள் இவ்வாறு பேசுவது நெஞ்சம் கொதித்ததால் என்கிறார் மகாகவி பாரதி. அவற்றுக்குப் பதில் அளிக்கும் தருமன், கைப்பிடி கொண்டு சுழற்றுவோனின் லாவகத்துகேற்பச் சுழலும் சக்கரம் போன்றது மானுட வாழ்க்கை என்கிறான். “தோன்றி அziவது வாழ்க்கை” என்ற தத்துவத்தை முன்வைக்கும் தருமன், தந்தை சொல் கேட்பது ராமன் காட்டிய வழி என்கிறான்....
பாஞ்சாலி சபதம் – 1.1.23
அஸ்தினாபுரம் செல்வது என்ற தனையன் தருமனின் முடிவைk கேட்டவுடன் பீமன் கோபாவேசம் கொள்கிறான். துரியன் சூதுப்படி நாம் அஸ்தினாபுரம் செல்வதென்றால் படையெடுத்துச் செல்வோம் என்கிறான்; தம்பி அர்ஜுனனிடம் வில்லைப் பூட்டுக என்கிறான். பாண்டவர்களுக்கு சூதில் விருப்பமில்லை என்பதை மகாகவி பாரதி இப்பாடல்களில் காட்டுகிறார்... “இரு நெருப்பினிடையினில் ஒரு விறகா?” என்ற இனிய உவமையை இங்கு எடுத்தாள்கிறார்.