முந்தைய அத்தியாயங்களில் ஞான யோகம், கர்ம யோகம், துறவு ஆகியவை குறித்து விளக்கிய பார்த்தசாரதி, இந்த அத்தியாயத்தில் ராஜயோகமான தியானத்தின் சிறப்பை விளக்குகிறார்; “யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்” என்கிறார்....
Tag: பாரதி மொழிபெயர்ப்புகள்
பகவத் கீதை – ஐந்தாம் அத்தியாயம்
செயலைச் செய்யாமல் துறப்பதை விட, செயலின் பலன்களைத் துறந்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதே பிறவி நோக்கம் என்கிறார் பார்த்தசாரதி, ஐந்தாம் அத்தியாயத்தில். இன்பம் - துன்பம் என்ற இருமையை நீங்கியவனே சந்நியாசி. அத்தகையவன் “விரும்பிய பொருளைப் பெறும்போது களி கொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்” என்கிறான் கண்ணன்.
பகவத் கீதை- நான்காம் அத்தியாயம்
ஞான யோகம், கர்ம யோகம் குறித்து கூறிய கண்ணன் இவ்விரண்டின் பலன்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது (சந்நியாசம்) குறித்து நான்காம் அத்தியாயத்தில் பேசுகிறான். “நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்” என்ற அமுதச் சொல் இந்த அத்தியாயத்தில் தான் முழங்குகிறது. “குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்” என்ற, தமிழகத்தில் பலரால் தவறாக விளக்கம் அளிக்கப்படும் அமுதச் சொல்லும் இந்த அத்தியாயத்தில் தான் வருகிறது....
பகவத் கீதை – மூன்றாம் அத்தியாயம்
இரண்டாம் அத்தியாயமான ஸாங்கிய யோகத்தில் ஞான (புத்தி) யோக மார்க்கத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்த கண்ணன், மூன்றாவது அத்தியாயமான கர்ம யோகத்தில், “தொழில் செய்வது மட்டுமே உன் கடமை” என்று நினைவூட்டி, போர்த்தொழில் புரியுமாறு ஏவுகிறார். இதனை “கர்மங்களைச் செய்யும்போது, ‘இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும் ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடைய பிரீதிக்காகவே செய்கிறோம்’ என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்” என்று மகாகவி பாரதி உரைவிளக்கத்தின் உள்ளடக்கத்தில் கூறுகிறார்…
பகவத் கீதை – இரண்டாம் அத்தியாயம்
போர்க்களத்தே சஞ்சலமுடையவனாகத் தளர்ந்து அமர்ந்த தோழன் அர்ஜுனனுக்கு சாரதியாக வந்த இறைவன் அறிவுரை கூறி, அவனை போருக்கு ஆயத்தப்படுத்துகிறான். இதுவே கீதையின் தோற்ற விளக்கம். இதில் மனித இயல்பின் போராட்டங்களை விளக்கும் கண்ணனின் உபதேசம், இந்நூலை ஞான இலக்கியமாக்குகிறது. கீதையின் இரண்டாவது அத்தியாயம் ஞானம் தொடர்பான சாங்கிய யோகமாக (சாங்கியம் = ஞானம்) இயல்கிறது. மகாகவி பாரதி தனது கீதை உரைக்கு முன்னதாக சுருக்கமான விளக்கம் அளித்திருப்பதும் கவனித்தற்பாலது…
பகவத் கீதை- முதல் அத்தியாயம்
போர்க்களத்தே வில்விஜயனுக்கு மெய்ஞானம் உரைத்த கண்ணனின் உபதேசமே பகவத் கீதை. இது, மகாபாரதம் காப்பியத்தின் ஒரு பகுதியாக வருகிறது. போரின் முதல்நாள் இருதரப்பின் அணிவகுப்பை அடுத்து போ தொடங்குவதற்கு முன்னதாக, எதிர்த்தரப்பில் நிற்கும் பாட்டனார், சகோதரர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் ஆகியோரைக் கண்டு சஞ்சலமடையும் பாண்டவர் அணியின் தளபதியான பார்த்தன், ‘போர் தேவையா?’ என்று மனம் குழம்புகிறான்; தனது உற்ற தோழனும் சாரதியுமான கண்ணனிடம் வினவுகிறான். இதுவே ‘அர்ஜுன விஷாத யோகம்’ என்ற இந்த முதல் அத்தியாயத்தின் உள்ளடக்கம் ஆகும். கீதையில் எவ்வாறு உள்ளதோ, அவ்வாறே தமிழிலும் சுலோகவாரியாக மகாகவி பாரதி, மொழிபெயர்த்துச் செல்கிறார்....
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 13)
உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தை கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது....
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 11-12)
‘அஹிம்ஸா பரமோ தர்ம’: ‘கொல்லாமையே முக்கிய தர்மம்’ என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 10)
மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு - ஒரே சத்துரு - அவனுடைய சொந்த மனமேயாம். ‘தன்னைத்தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்’ என்று கடவுள் சொல்லுகிறார்.
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 9)
ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 8)
துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம் அறியாதவருக்கு பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.... மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா. ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது.
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 7)
குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருபையால் சாசுவதமல்ல... ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடைய கொள்கை. இதுவே பகவத் கீதையின் நூற்பயன்.
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 6)
கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்ட மேனும் நஷ்ட மேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேண வேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்திய பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கின்றார்.
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 5)
பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து.
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 4)
...பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்', இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்விதமான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார்....