“பல தேசத்து ஞானிகளின் வசனங்களை ‘ஆர்ய’ பத்திரிகையில் ‘போல் ரிஷார்’ ‘Paul Richard’ என்ற பிரான்ஸ் நாட்டு வித்வான் தொகுத்தெழுதிவரும் கோவையிலிருந்து ‘காளிதாஸன்’ மொழி பெயர்த்தது” - என்ற குறிப்புடன் சுதேசமித்திரனில் வெளியான பொன்மொழிகள் இவை....
Tag: பாரதி மொழிபெயர்ப்புகள்
பிரெஞ்சு தேசீய கீதம்
மகாகவி பாரதி தமிழில் குழந்தைகளுக்காக மொழிபெயர்த்துக் கொடுத்த பிரெஞ்சு தேசிய கீதத்தின் சில வரிகள் இவை...
அமெரிக்கப் பெண்ணின் ஆங்கிலக் கவிதையை தமிழில் தந்த மகாகவி
இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் செயல்பட்ட மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற பெண்மணியின் ஆங்கிலக் கவிதையை ‘இந்தியாவின் அழைப்பு’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார் மகாகவி பாரதி. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதுவே மகாகவியின் கடைசிக் கவிதையாக இருக்கலாம் என்பது தான்....
பகவத் கீதை– பதினெட்டாம் அத்தியாயம்
ஓர் அற்புதமான ஞான இலக்கியம் போர்முனையில் உதித்ததை அஞ்ஞானிகள் உணர மாட்டார்கள். ஏனெனில், இது மனத்தின் இருநிலைகளுக்கு இடையிலான போர். அஞ்ஞானிகளின் ஆணவம் இதனை அறிய விடாது. பகவத் கீதையின் இறுதி அத்தியாயம் இது… வில்லேந்திய வீரன் விஜயன் மனக்குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவனை பலவாற்றானும் தேற்றி, பலவிதமான வாதங்களால் அவன் மயக்கத்தைப் போக்கி, போருக்கு ஆயத்தப்படுத்துகிறான், அவனது அன்புத் தோழன் கண்ணன். இறுதியாக, “எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே” என்று நம்பிக்கை அளிக்கிறான்...
பகவத் கீதை- பதினேழாம் அத்தியாயம்
அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப்படுகின்றன; அவற்றின் பலன்களும் அவ்வாறே. சாத்விகம், ராஜசம், தாமசம் என்னும் இம்முன்று வகைப்பாட்டில் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளே தான் ஆகிறான் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா...
பகவத் கீதை- பதினாறாம் அத்தியாயம்
கடவுளை அறிந்தர்கள் தானே கடவுளின் இன்னொரு படிமம் (அஹம் பிரம்மாஸ்மி) என்பதை அறிவார்கள். கடவுள் இல்லை என்று இறுமாப்புடன் கூறுவோரோ கடவுளை அறியாத, அசுரத்தன்மை கொண்ட பதர்கள் (அஹம் நாஸ்தி). ஹிரண்யனின் வீழ்ச்சியைக் கண்ட பிறகும் மனமயக்கில் ஆணவத்துடன் இருக்கும் இவர்களுக்கு மீட்பு இல்லை என்கிறான் தேரோட்டியாம் கிருஷ்ணன் இந்த அத்தியாயத்தில்…
பகவத் கீதை- பதினைந்தாம் அத்தியாயம்
அநாதியான இந்த பிரபஞ்சம் இயற்கையின் பேருரு. இங்கு வாழும் அனைத்தும் ஆன்மாவின் பேருரு. இவ்விரண்டும் தானாக நிற்பவன் கடவுள். அவனே புருஷோத்தமன். இந்தப் பேருண்மையை அறிந்தவனே என்னை அறிந்தவன் என்கிறான் இந்த அத்தியாயத்தில், பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமனின் அவதாரமான பார்த்தசாரதி…
பகவத் கீதை- பதினான்காம் அத்தியாயம்
சத்வ, ரஜஸ், தமோ குணங்கள் எனப்படும் முக்குணங்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இறைவன். இக்குணங்களைக் கடந்தவனே இறவாப்புகழ் அடைகிறான் என்பது கண்ணன் வாக்கு...
பகவத் கீதை- பதின்மூன்றாம் அத்தியாயம்
நாம் தேகத்தையே (க்ஷேத்ரம்) பிறவி என நம்புகிறோம். அது இயற்கையின் ஒரு வடிவமே. இதனுள் இருந்து நம்மை ஆட்டுவிப்பது ஆத்மா. இதை அறிந்தவன் க்ஷேத்திரக்ஞன். “பிரகிருதி (இயற்கை), புருஷன் (ஆத்மா) இவ்விரண்டும் அநாதி என்றுணர். காரிய காரணங்களை ஆக்கும் ஏது இயற்கை; சுக துக்கங்களை உணரும் ஏது ஆத்மா” என்கிறான் கண்ணன், இந்த அத்தியாயத்தில்….
பகவத் கீதை- பனிரெண்டாம் அத்தியாயம்
இதுவரையிலான அத்தியாயங்களில் வில்விஜயனை சிறுகச் சிறுகச் செதுக்கிவந்த பரந்தாமன், இந்த அத்தியாயத்தில் பக்தி யோகத்தை மட்டுமே நாடுமாறு அறிவுறுத்துகிறான். “எப்போதும் மகிழ்ச்சியுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய் என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து என் தொண்டனாகிய யோகி எனக்கினியவன்” என்று வழிகாட்டுகிறான்…
பகவத் கீதை- பதினொன்றாம் அத்தியாயம்
விபூதி யோகத்தில் இறைவனின் அம்சங்களை விவரித்த கண்ன்ன், இந்த அத்தியாயத்தில் தனது விஸ்வரூப தரிசனம் காட்டி, தனது அன்புத் தோழனை பரவசம் அடையச் செய்கிறான். அப்போது, “ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள். நான் இவர்களை ஏற்கனவே கொன்றாகி விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக்காரணமாக மட்டும் நின்று தொழில் செய்” என்று விஜயனை வழிநடத்துகிறான் பரந்தாமன்…
பகவத் கீதை- பத்தாம் அத்தியாயம்
பகவத் கீதை பத்தாவது அத்தியாயம், இறைவனின் பெருமையை வியக்கும் வகையில் இறைவனே உரைப்பதாக அமைந்திருக்கிறது. ”ஒளிகளில் ஞாயிறு... ருத்திரர்களில் நான் சங்கரன்... வீரர்களுள் ராமன்... எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான்” என்கிறார் கண்ணன். இறைவனின் புகழ் பாடும் யோகம் இது…
பகவத் கீதை- ஒன்பதாம் அத்தியாயம்
“நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா! உள்ளதும் யான்; இல்லதும் யான்” என்று இந்த ஒன்பதாவது அத்தியாயத்தில் கண்ணன் கூறுகிறார். “நீ எது செய்யினும், குந்தி மகனே! கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்” என்றும் கூறுகிறார்….
பகவத் கீதை- எட்டாம் அத்தியாயம்
பிறவி, மறுபிறவி குறித்து எட்டாம் அத்தியாயத்தில் விவரிக்கும் கண்ணன் “என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை” என்று உறுதி அளிக்கிறார். அதாவது தான் கூறியபடி, பலனை இறைவனுக்கு அர்ப்பணித்து கடமையைச் செய் என்பதே இதன் உட்பொருள்....
பகவத் கீதை- ஏழாம் அத்தியாயம்
“நீரினில் சுவை நான்; தீயினில் சுடர் நான்; வேதங்களில் பிரணவம் நான்; நானே உலகம் முழுமைக்கும் ஆக்கமும் அழிவும் ஆவேன்” என்று இந்த அத்தியாயத்தில் அர்ஜுனனிடம் கூறுகிறான் கண்ணன். தனது விற்போர் திறமை மீது கொண்ட அகந்தையால் போர்க்களம் வந்த விஜயன், போர்முனையில் குழப்ப மாயையில் தவிக்கும்போது, பார்த்தசாரதி, தனது மெய்யான சொரூபத்தைக் காட்டத் தயாராகிறார். “பலன் கருதாமல் கடமையைச் செய்” என்று முந்தைய அத்தியாயங்களில் கூறியவர், இந்த அத்தியாயத்தில், ”நானே உலகின் ஆக்கமும் அழிவும் ஆவேன்” என்று கூறி அவனது அகந்தையை உடைக்கிறார்.