தாதாபாய் நெளரோஜி

விடுதலை வீரர் தாதாபாய் நௌரோஜி காலமானபோது மகாகவி பாரதி எழுதிய இரங்கல் குறிப்பு இது. “நம்பிக்கைக்குப் பெயர் தாதாபாய் நெளரோஜி; அதற்கு மரணம் இல்லை. நம்பின காரியம் கைகூடும் என்ற வசனத்தை ஹிந்துக்கள் நம்பும்படியும் செய்வதற்காகத் தோன்றிய பெரியோர்களில் தாதாபாய் ஒருவர்” என்கிறார் பாரதி.

உள்ளிருத்த விளக்கம்

அன்னம் அமிர்தம். வைஷ்ணவர், ‘போஜனமாயிற்றா?’ என்பதற்கு ‘அமுது செய்தாயிற்றா??’ என்கிறார்கள். அன்னம் அமிர்தமென்பதே ராமானுஜருடைய சித்தாந்தம். உண்மையை நேர்மையாலே காக்க வேண்டும். ஆதலால் அன்னத்தைக் காப்பாற்றத் தெரியாதவன் மூடன்.

விடுதலை

சேர்க்கப்படுவது செல்வம். மனிதனுக்கு இன்பம் தரும் பண்டங்களையும் அவற்றைக் கொள்வதற்கு நல்ல கருவியாகிய பொன்னையும் சேகரித்து வைக்க வேண்டும். இடைவிடாமல் சேர்க்க வேண்டும். கை பற்றின படியாகவே இருக்க வேண்டும். ஆனால் தீயகாரியம் செய்து, கெட்ட தொழில் செய்து சேர்த்த செல்வம் நிற்காது. செல்வம் சேர்த்த பிறகு அதன் உரத்தால் பிறர்க்குத் தீங்கு செய்வாரும் விரைவிலே கெடுவார்.

ப்ராயச்சித்தம்

ராமராயர் இங்கிலாந்தில் போய்ப் பத்து வருஷ காலம் இருந்து வியாபாரம் பண்ணிவிட்டுக் கொஞ்ச காலத்துக்கு முன்பு, வேதபுரத்துக்கு வந்து சேர்ந்தார். இங்கே அவர் கையில் கொஞ்சம் காசிருப்பதைக் கண்டு சில வைதிகர்கள் அவரைப் பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படி சொன்னார்கள். அவர் பண்னிக் கொள்ளவில்லை. .....போன மாஸம் மேற்படி ராமராயர் என்னிடம் ஊர்க்காரருடைய திருப்தியை உத்தேசித்துத் தான் ப்ராயசித்தம்  பண்ணிக்கொள்ள இஷ்டப்படுவதாக அறிவித்தார். நான் உடனே மேற்படி விஷயத்தை இந்த ஊர் வைதிகர்களுக்கெல்லாம் சிரோமணியாகிய ரங்கநாத சாஸ்திரிகளிடம் போய்ச் சொன்னேன்.....

குழந்தைகள்

நமக்கு நல்ல காலம் எப்போது வருமோ தெய்வத்துக்குத்தான் தெரியும். அதுவரை அதிகாரிகள் எப்படியிருந்த போதிலும், அதைப் பொருட்டாக்காமல் நாட்டிலுள்ள பணக்காரர் மற்றெல்லாவித தர்மங்களைக் காட்டிலும், ஜனங்களுக்கு அறிவு விருத்தியும், தைரியமும், தேச பக்தியும் உண்டாக்கத் தகுந்த சுதேசியக் கல்வி ஏற்படுத்திக் கொடுப்பதைப் பெரிய தர்மமாகக் கருதி, அதிலே பணம் செலவிட முற்படும்படி மேற்படி பணக்காரருக்கு நல்ல புத்தி ஏற்படுத்திக் கொடுக்குமாறு தெய்வத்தை வேண்டுகிறோம்....

எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை

வரதட்சிணைக் கொடுமைக்கு எதிரான மகாகவி பாரதியின் முழக்கம் இது. நூற்றாண்டுகளுக்கு (1915) முன்னர் பாரதி எழுதிய அவலம் இன்றும் நமது நாட்டில் தீரவில்லை. இந்த ‘ஊழலுக்கு’த் தீர்வாக மகாகவி முன்வைப்பது பெண் விடுதலையே. இரு பெண்களைப் பெற்றவரல்லவா? சரியாகத் தானிருக்கும்.

ஜப்பான் தொழிற்கல்வி

தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும். தெளிந்த அறிவென்பது இரண்டு வகைப்படும் – ஆத்ம ஞானம், லெளகிக ஞானம் என. ஆத்ம ஞானத்தில் நமது ஜாதி சிறந்தது. லெளகிக ஞானத்தில் நம்மைக்காட்டிலும் வேறு பல தேசத்தார் மேன்மை யடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேசங்களில் ஜப்பான் ஒன்று. புத்தகங்களாலும், பத்திரிகைகளாலும், யாத்திரைகளாலும் நாம் ஜப்பான் விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளுதல் பயன்படும். கூடியவரை பிள்ளைகளை ஜப்பானுக்கு அனுப்பிப் பலவிதமான தொழில்களும் சாஸ்திரங்களும் கற்றுக் கொண்டு வரும்படி செய்வதே பிரதான உபாயமாகும். தொழிற் கல்வியிலும் லெளகிக சாஸ்திரப் பயிற்சியிலும் நாம் மற்ற ஜாதியாருக்கு ஸமானமாக முயலுதல் அவசரத்திலும் அவசரம். 

விதி

நாட்டு விதி என்பது அர்த்த, நீதி சாஸ்திரங்களின் விதி. இதனைத் தற்காலத்தோர் அரசியல் விதியென்று சொல்லுகிறார்கள். அதுவும் சாஸ்திர விதியோடு சேர்ந்ததுதான். ஆனால் மற்ற இலக்கணம் முதலிய சாஸ்திரங்களின் விதிகளைக் காட்டிலும் அரசியல் விதிகள் மிகவும் விரைவுடன் மாறுபடுவதால் இதனைத் தனியாக ஒரு பகுதியாக்கும்படி நேரிட்டது. எனவே, தெய்வ விதிக்குப் பரிபூரணமாக உட்பட்டு சாஸ்திர விதிகளையும் நாட்டு விதிகளையும் மேன்மேலும் புத்திசாலித்தனமாகச் சீர்திருத்திக் கொண்டு வந்தால், மனுஷ்ய ஜாதிக்கு ஷேமமுண்டாகும்.

உண்மையான தீபாவளி!

மகாகவி பாரதி நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக வெளிவந்தது இந்தக் கட்டுரை. பின் ‘கலைமகள்’ பத்திரிகையில் 1941-இல் அக்டோபர் மாதம் வெளியாயிற்று.  நமது நேயர்களுக்கு மகாகவி பாரதியின் இக்கட்டுரையை தீபாவளிப் பரிசாக வழங்கி மகிழ்கிறோம்!

தமிழ்

“இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால் போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அது வரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச்சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும்” -மேற்படி சாட்டையடி வார்த்தைகள் மகாகவி பாரதியின் எழுதுகோலில் வெளிவந்தவை. காரணம் என்ன? படியுங்கள், தொடர்ந்து....

கிச்சடி

பல்வேறு தகவல்களை ஒரே செய்திக் கட்டுரையாக்கி அதற்கு ‘கிச்சடி’ என்று தலைப்பிடும் உத்தியை மகாகவி பாரதி தான் தொடங்கி வைத்திருக்கிறார். அதிலும் இந்தக் கிச்சடி ‘மேற்கோள் கிச்சடி’ என்று அவரே நகைச்சுவையாகச் சொல்கிறார். தமிழ் இதழாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. ஏனெனில் அவர்கள் கற்க வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது என்று நினவூட்டும் கட்டுரை இது.

ஜப்பானியக் கவிதை

‘ஹைகூ’ எனப்படும் மூன்றடிக் கவிதை, ஜப்பானிய கவிதை இலக்கியத்தின் உச்சம். சுருக்கமான சொற்களில் பெரும் உருவகத்தை அடக்கிக் காட்டுவதே ஹைகூவின் உத்தி. ஜப்பானிய ஜென் மதத்தின் தாக்கம் இக்கவிதைகளில் உண்டு. இதனை நூறாண்டுகளுக்கு முன்னமே தமிழுக்கு மகாகவி பாரதி அறிமுகப்படுத்தி இருப்பது வியப்பளிக்கிறது. இக்கட்டுரை, ஹைகூ குறித்த புரிதலில்லாமல், மடக்கி மடக்கி ஏதாவது கிறுக்கும் நம் தமிழர்களுக்கு ஒரு பாடம்...

புதுச்சேரியில் புயற் காற்று

புதுவையில் 1016-இல் வீசிய புயலின் பாதிப்புகளை நேர்முக வர்ணனையுடன் செய்தியாக்கி இருக்கிறார் மகாகவி பாரதி. ”ஏழை ஜனங்களின் கஷ்டங்கள் பொறுக்கக்கூடிய நிலைமையிலேயில்லை. தெய்வந்தான் ரக்ஷிக்க வேண்டும்.” என்று செய்தியின் இடையே கூறும் பாரதியின் மானுடநேயம் கவனிக்கத் தக்கது...

தராசு கட்டுரைகள்- 14

வக்கீல்:- ஏன் தராசே, பயப்பட்டால் அது கூட ஒரு பாவமா? தராசு:- ஆம். அதுதான் எல்லாப் பாவங்களுக்கும் வேர். அதர்மத்தைக் கண்டு நகைக்காமல் எவன் அதற்கு பயப்படுகிறானோ அந்த நீசன் எல்லாப் பாவங்களும் செய்வான். அவன் விஷப்பூச்சி; அவன் தேள்; அவனை மனித ஜாதியார் விலக்கி வைக்க வேண்டும்....

தராசு கட்டுரைகள்- 13

தராசுக்கடையை நெடுநாளாக மூடி வைத்துவிட்டேன். விஷயம் பிறருக்கு ஞாபகத்திலிருக்குமோ, மறந்து போயிருக்குமோ என்ற சந்தேகத்தால் எழுத முடியவில்லை. தராசுக்கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை. அந்தக் கடையை மாற்றிவிட்டேன்; தராசு என்ற மகுடமிட்டு இனிமேல் எழுதப்படும் வினாவிடைகளில் கதைக்கட்டு சுருங்கும்; சொல் நேர்மைப்படும்....