தீண்டத்தகாதவர்களைப் பாதுகாக்கும் தன் நடவடிக்கையை தனது தேசபக்தி நிலைப்பாட்டிலிருந்தே அம்பேத்கர் அணுகினார். அதேபோல, விடுதலைப் போராட்டத்தையும் தலித் கண்ணோட்டத்துடன் அணுகினார் அவர். விடுதலைப் போராட்டக் களத்தில் சமூகநீதியும் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய அம்சங்களாக மாறக் காரணம் ஆனவர் அவரே....குடிமக்களே தேசம் என்பதை முழுமையாக உணர்ந்தால் மட்டுமே, குடிமக்களின் ஒரு பகுதியான தீண்டப்படாதாரின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் வேட்கை புரியும். இந்தத் தேசம் வலுப்பெற வேண்டுமானால், அம்பேத்கரின் அடியொற்றி சமூக ஒருமைப்பாட்டை நாம் வலுப்படுத்தியாக வேண்டும். அதுவே இன்றைய தேவை. (நமது தளத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்த 5வது கட்டுரை இது... பத்திரிகையாளர் சேக்கிழான் எழுதியது)....
Tag: சேக்கிழான்
மொழிகளில் பேதம் எதற்கு?
இதுவே ஹிந்துப் பண்பாட்டின் சிறப்பு. பலவித மொழிகளாகிய ரத்தினங்களை ஹிந்து தர்மம் என்ற ஒற்றை நூலே மாலையாகக் கோர்த்திருக்கிறது. இந்த மணிமாலையின் அழகு ஜுவலிக்கிறது; கிறங்கச் செய்கிறது. இந்த மணிமாலை புனிதமானது; நமது சிறப்பை வெளிக்காட்ட அணிவதற்கானது; உலகம் போற்றும் பண்பாட்டின் சின்னமானது. எதையும் உணரும் அறிவின்றிப் பிய்த்தெறியும் குரங்குகளுக்கு இதன் அருமை புரியாது. எனவே இந்த மணிமாலையைப் போற்றிப் புரக்க வேண்டியது நம் அனைவர்தம் கடமை.
மொழிகளிடையே போட்டியோ, பேதமோ தேவையில்லை; அதேசமயம் தாய்மொழியை மறத்தல் போலப் பாவம் பிறிதில்லை. எந்த ஒரு மொழியும்- அது ஆங்கிலமோ, ஹிந்தியோ, வேறெந்த மொழியோ ஆயினும்- நமது ஞானத்தின் திறவுகோல். எனவே, எத்துணை மொழிகள் கற்றாலும் நல்லதே. அப்போதுதான் நமது இலக்கியச் செல்வங்களைப் பகிர்ந்து உலகை மேம்படுத்த இயலும். நமது தாய்மொழியை பிழையறக் கற்போம்; ஞானத்தை வசப்படுத்த பிற மொழிகளும் கற்போம்! நமது பண்பாட்டைக் காத்த பேரருளாளர்கள் போல, நாமும் மொழிகளிடையே இணக்கம் கண்டு, இலக்கியச் செழுமை வளர்ப்போம்! இனிய பாரதம் காப்போம்!
திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும்: நூல் அறிமுகம்
பிராமணரல்லாதோர் இயக்கம் எவ்வாறு தென்னிந்திய லிபரல் கூட்டமைப்பாக மாறியது? அது எவ்வாறு ஜஸ்டிஸ் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது? அதில் இருந்த பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் போன்றவர்கள் எவ்வாறு தடம்புரண்டனர்? ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக ஈ.வெ.ராமசாமி எப்போது உருவானார்? ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் எவ்வாறு விழுங்கியது? உண்மையிலேயே திராவிட இயக்கம் உள்ளதா? இருந்தால் அதன் வயது 100 தானா?
இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி இந்நூலில் சரித்திரச் சான்றுகளுடன் பதில் அளித்திருக்கிறார் மலர்மன்னன். திராவிட இயக்கம் என்ற சொல்லாட்சியே ஒரு மோசடியான புனைவு, தமிழகத்தில் இருப்பது திராவிட அரசியல் மட்டுமே என்று முடிக்கிறார். சுள்ளெனச் சுடும் உண்மைகள் நிறைந்த நூல் இது.
லஜ்ஜா: நூல் மதிப்புரை
பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1993-இல் வங்கமொழியில் எழுதிய ‘லஜ்ஜா’ புதினம், அவரை தனது தாய்நாட்டிலிருந்தே விரட்டியடித்தது. 1994-இல் நாடுகடத்தப்பட்ட அவர், இந்தியாவில் விருந்தினராகவும் அரசின் பாதுகாப்பிலும் இருப்பதால்தான் இன்னமும் உயிருடன் உள்ளார். அப்படி என்ன அந்தப் புதினத்தில் எழுதி விட்டார்? அவருக்கு பத்வா விதித்து, கொலை செய்யத் தேடி அலையும் மதத் தீவிரவாதிகள், எதற்காக அவ்வாறு செய்கின்றனர்? அவரை அந்நாட்டு அரசு ஏன் பாதுகாக்க முற்படவில்லை? இக்கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், இந்த நூலைப் படிக்க வேண்டும்..... ‘லஜ்ஜா’ என்றால் வங்க மொழியில் ‘அவமானம்’ என்று பொருள். அவமானம் யாருக்கு? வங்க மொழி அடிப்படையில் மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்கத்துக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து போராடிப் பெற்றது தான் பங்களாதேஷ். ... ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியா செல்வதற்கு வாய்ப்புகள் இருந்தபோதும், உள்ளூர் முஸ்லிம்களின் சகோதரத்துவத்தை நம்பி கிழக்கு பாகிஸ்தானிலும், பின்னாளில் பங்களாதேஷிலும் தங்கிய ஹிந்துக்களை, அந்நாட்டு முஸ்லிம் மக்கள் வஞ்சித்துவிட்டதை தீராக்கோபத்துடன் எழுதிய தஸ்லிமா, அதுவே அவமானம் என்கிறார்.
வால்காவிலிருந்து கங்கை வரை- நூல் அறிமுகம்
பன்மொழிப் புலவரும், புத்தத் துறவியும், ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தையுமான ராகுல சாங்கிருத்தியாயன், மார்க்சியத் தத்துவம் இந்திய இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமான முன்னோடிகளுள் ஒருவர். இவர் சிறையிலிருந்தபடி எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புதினம் 1944ல் வெளியானது. அப்போதே பலத்த எதிர்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்நாவல், இதன் உள்ளடக்கத்தாலும், இடதுசாரிப் பார்வையாலும் பிரபலம் அடைந்தது.... ஒருவர் ராகுலின் கருத்துக்களுடன் முரண்படலாம்; ஆனால் அவரை நிராகரிக்க முடியாது. அவரது தர்க்க ஆற்றலும், நுண்ணறிவும், பகுத்தறியும் திறனும் இன்றைய ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டக் கூடியவை....
தீராத விளையாட்டு விட்டலன்: நூல் அறிமுகம்
பாரதம் அருளாளர்களின் ஜென்மபூமி. இமயம் முதல் குமரி வரை எங்கு சென்றாலும், ஏதாவது ஒரு அருளாளரின் புனிதத்தலத்தை தரிசிக்க முடியும். இந்த அருளாளர்கள் அனைத்து வகுப்பினரிலும் அவதரித்திருப்பதையும் காண முடியும்; சமுதாயத்தை ஒருங்கிணைக்க இறைவனே நடத்திய திருவிளையாடல்களின் பல கதைகளை நாம் கேட்க முடியும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் மராட்டிய மண்ணில் உதித்து பக்திப்பயிர் வளர்த்த பக்தப் பரம்பரை தான்....
நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்: நூல் அறிமுகம்
அரசே அராஜகத்தில் ஈடுபடும்போது பெரும்பாலோர் ஊமையாகி விடுகின்றனர். ஆனால், விதிவிலக்குகளாக அமைந்த தளகர்த்தர்கள் ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரகம் நடத்தியதுடன், தேசிய அளவிலும் உலக அளவிலும் நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரான, இந்து முன்னணியின் நிறுவனர், அமரர் இராம.கோபாலன், மிகுந்த பொறுப்புணர்வுடனும், அனுபவ அறிவுடனும் தொகுத்து வழங்கியுள்ள நூல் இது....
பத்மாவதி சரித்திரம் – நூல் அறிமுகம்
‘நாவல்‘ எனப்படும் புதினம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி நூறாண்டு ஆகிறது; ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் புதிய உரைநடையில் நெடுங்கதைகளை வடிப்பது தமிழிலும் துவங்கியது. அந்த வகையில் தமிழின் முன்னோடி நாவலாக, அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் விளங்குகிறது. தமிழ் நாவல்கள் பட்டியலில் மூன்றாவது நாவலான இந்நூல், தரத்தில் நூறாண்டு கடந்தும் முதன்மை வகிப்பது, மாதவையாவின் சமகால நோக்கிற்கு உதாரணம். தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட அ.மாதவையாவின் முதல் நாவலான பத்மாவதி சரித்திரம், மூன்று காலகட்டங்களில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டது. இதில் முதல் இரு பாகங்களே பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. காவ்யா பதிப்பகம், இதுவரை வெளியாகாமல் இருந்த, முற்றுப்பெறாத மூன்றாவது பாகத்தையும் இணைத்து செம்மையான பதிப்பாக வெளியிட்டுள்ளது. மாதவையாவின் சமுதாய நோக்கு, இலக்கிய பரிச்சயம், சீர்திருத்தச் சிந்தனை, மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆகியவை நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. பழமையின் பிடியில் சமுதாயம் தத்தளித்த காலத்தில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், பெண்ணுரிமைகளை வலியுறுத்தி துணிவுடன் நாவல் எழுதிய அ.மாதவையா இன்றைய எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக விளங்குகிறார்....
அன்னிபெசண்ட் அம்மையாரும் மகாகவி பாரதியும்
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அயர்லாந்து மாதான அன்னிபெசன்ட் அம்மையார் (1857 அக். 1 - 1933 செப். 20), இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் பெரும் பங்கு ஆற்றியவர். மகாகவி பாரதிக்கு, அன்னிபெசன்ட் அம்மையார் மீது ஆரம்பத்தில் மேலான அபிப்பிராயம் இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஓர் ஆங்கில மாது என்ற எண்ணமே இருந்தது. தவிர அவரது தியாஸபிகல் ஸங்கம் மீதும் பாரதிக்கு நல்லெண்னம் இருக்கவில்லை. எனவே ஆரம்பக் காலத்தில் அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். எனினும், அன்னிபெசன்ட் அம்மையாரின் பாரதம் மீதான அபிமானத்தை பாரதி மதித்திருக்கிறார். தனது எழுத்துகளில் அவரைப் பாராட்டவும் செய்கிறார். பாரதியின் தேசபக்தியும், நமது நாட்டுக்கு அன்னிபெசன்ட் அம்மையாரால் ஆகும் லாபமென்ன என்ற எண்ணமும் தான் அவர் மீதான கருத்துகளில் வெளிப்படுகின்றன....
‘புதிய ருஷ்யா’ கவிதையும் கவிஞரின் தீர்க்கதரிசனமும்
ரஷ்யாவில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்தை மாகாளியின் கடைக்கண் பார்வையால் நிகழ்ந்த யுகப் புரட்சி என்று மகாகவி பாரதி பாடியபோதும், அங்கு நிகழ்ந்த வன்முறைகளில் அவருக்கு விருப்பம் இல்லை. ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கிடைத்த செய்திகளும் அவருக்கு உவப்பாக இல்லை. ஆட்சி அதிகாரம் மிக்கவர்கள் நடத்தும் வன்முறைகளால் நாட்டு மக்களுக்கு பயனேதும் கிடைக்காது என்று அவர் தீர்மானமாக நம்பினார். எனவேதான், சுதேசமித்திரனில், தனது சந்தேகங்களை ஒரு கட்டுரையாகவும் வடித்தார். மகாகவி பாரதியின் தீர்க்கதரிசன வார்த்தைகள் இப்போது உண்மையாகி விட்டதைக் காண்கிறோம். ஆயுதபலத்தாலும், வன்முறையாலும் நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்த கம்யூனிஸக் கூட்டம் 1990களில் சிதிலமடைந்து வீழ்ந்ததை உலகம் கண்டது. பல்வேறு நாடுகளை ஆயுதபலத்தால் சேர்த்து ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யக் குடியரசு (யுஎஸ்எஸ்ஆர்) என்ற வல்லரசாகத் தோற்றம் அளித்த ரஷ்யா பலகூறுகளாக இன்று சிதறிவிட்டது. அங்கு இப்போது லெனின் சிலைகள் உடைக்கப்படுகின்றன; கம்யூனிஸம் ஒரு கெட்ட வார்த்தையாகிவிட்டது....
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மகாகவி பாரதி
மகாகவி பாரதியின் எழுத்துலகம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சேக்கிழான் இப்பகுதியில் தொடர்ந்து எழுத உள்ளார். பாரதியின் கவிதைகள், இதழியல் பணிகள், மொழிபெயர்ப்புகள், காவியங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்த விரிவான ஆய்வுக் களமாக இத்தொடர் அமையும். இக்கட்டுரை, ’பாரதியின் விஸ்வரூபம்’ தொடரின் முதல் பகுதி. தமிழ்த் திரையுலகில், மகாகவி பாரதியின் கவிதைகள் பெற்றுள்ள இடத்தை விளக்குகிறது இக்கட்டுரை...
அந்தமான் சிறை அனுபவங்கள் – நூல் அறிமுகம்
விடுதலைப் போராட்ட வீரர்களுள் பிற எல்லோரையும் விட கொடிய தண்டனைகளையும் கடும் சித்ரவதைகளையும் பெற்றவர் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883- 1966).... பூனாவில் சாவர்க்கர் துவங்கியிருந்த அபிநவ பாரத இயக்கம் நடத்திய பல வன்முறை நிகழ்வுகளையும், லண்டனில் நிகழ்ந்த ஆங்கிலேய அதிகாரி கொலையையும் விசாரித்த ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை (50 ஆண்டுகள்- 1910- 1960) அளித்து, தீவாந்திர (நாடுகடத்தல்) தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.... தனது தண்டனைக் காலத்தை, சிறைவாச அனுபவங்களை அவரே பின்னாளில் ’கேசரி’ வார இதழிலும், ’ஷ்ரத்தானந்த்’ என்ற பத்திரிகையிலும் தொடராக எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 1927இல் எனது அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூலின் பல பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இருந்ததால் தடை செய்யப்பட்டது. 1946இல் இந்தத் தடை விலகியது..... அந்த நூல் தற்போது வழக்குரைஞர் எஸ்.ஜி.சூர்யாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அழகிய நூலாக கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலின் பல பக்கங்களைப் படிக்கும்போது கண்களில் நீர்திரண்டு படிக்க முடியாமல் செய்து விடுகிறது. எத்தனை வேதனைகள்! எவ்வளவு அவமானங்கள்! கொடுமைகளின் கூடாரமான அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைந்த கஷ்டங்களை அவருள் இருக்கும் எழுத்தாளனும் தத்துவ அறிஞரும், கவிஞரும், அற்புதமான மனிதரும் பல கண்ணோட்டங்களில் காண்பதை அவரது எழுத்தே புலப்படுத்துகிறது.