ஸ்ரீமன் நாராயணன் அயோத்யாவைத் தேர்தெடுத்தான், அவதாரம் புரிய. அயோத்தியா போல தேவலோகத்திலும் ஒரு நகர் இல்லை “இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?”
அன்பைப் பொழிந்த ஆசிரியர்!
விஜயபாரதம் முன்னாள் ஆசிரியரும், ‘பொருள்புதிது’ இணையதளத்தின் தொடர்ந்த வாசகராக இருந்தவருமான அமரர் திரு. சுந்தர.ஜோதி அவர்கள் காலமாகி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. அவரைக் குறித்து, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி தனது தளத்தில் எழுதி இருக்கும் கட்டுரை இங்கு நினைவஞ்சலியாகப் பதிவாகிறது...
அயோத்தியாயணம்-1
“நிலமகளின் விலாசம் அயோத்தியோ” என்று ஆரம்பத்திலேயே அயோத்தியின் பெருமையை வானில் வைக்கிறான் கம்பன். பூமியின் திலகமோ? பூமியின் கண்ணோ? மங்கல சூத்திரமோ? நிலமகளின் மார்பில் அணிந்த இரத்தின மாலையோ? நிலமகளின் உயிரின் இருக்கையோ? லட்சுமி வசிக்கும் தாமரையோ? திருமால் மார்பில் அணிந்த ஆபரணங்கள் வைக்கப்பட்ட பெட்டியோ? தேவலோகத்திற்கும் மேலான இடமோ? இல்லை ஊழிக்காலத்தில் எல்லாமும் தங்கும் திருமாலின் வயிறோ?”
தன்னையே தண்டித்த தகைமையாளன்
அறிந்தே பல அரசியல் பிழைகளைச் செய்து, அவையெல்லாம் நியாயமே என்று சாதித்து, அதனை எதிர்த்துக் கேட்பவர்களின் உயிரைப் போக்கும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில், அறியாமல் செய்த அரசியல் பிழையை அறிந்ததுமே உயிர் துறந்த பாண்டியன் போற்றுதலுக்கு உரியவன் அல்லவா?
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 1
இதற்கு முந்தைய குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் குடியுரிமையின் வேறு பல சிக்கலான பரிணாமங்களை அணுகின. ஆயினும், நாட்டில் இதுவரை முழுமையாக குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் அகதிகளை என்ன செய்வது என்பதில் தெளிவான திசை காட்டப்படவில்லை. அந்தக் குறைபாட்டைப் போக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால் உருவானதே குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்
விதமாக, எழுத்தாளர் திரு. சேக்கிழான் எழுதிய நூல், ‘குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்’ . இந்நூலின் பகுதிகள் இங்கே தொடராக வெளியாகின்றன...
இருக்கு ஆனா இல்லை
நாம் ஆன்மா, அதனைப் போர்த்தியிருக்கும் ஆடைதான் உடல் என்பதை உணர்வதுதான் ஞானம். இந்த ஆன்மா ‘ஏக இறைவனின் பிரதிபிம்பம்’ என்பதை அறிந்துகொள்வதுதான் பரிபூரண ஞானம்.
வாட்ராப்பும் வைத்தமாநிதியும்- 2
சரி பீடிகை போதும்… தலைப்பின் பொருளுக்கு (subject matter) வருவோம். ஆங்கிலேயனுக்கு வாட்ராப் watrap - உள்ளூருக்கு வத்திராப்பு - கற்றவனுக்கு வற்றாயிருப்பு. இப்படியாக ஒரு ஊருக்கு பல பெயர்கள் சொல் வழக்காக இருக்கலாம். பொருள் புரிந்து கொள்வோம். வாருங்கள்.
மூவர் முலையும் மூவாத் தமிழும்
தன் அரசனான கம்சனைக் கொல்லப் பிறந்தவன் கண்ணன் என்பதால் அவன் மீது கோபம் கொண்டவள் பூதனை. அதனால் கண்ணனைக் கொல்ல வேண்டும் என்ற வஞ்சனையை தன் உள்ளமெல்லாம் கொண்டவள். உடலெல்லாம் விஷத்தைப் பூசிக்கொண்டு, அழகிய தாயாக வடிவம் கொண்டு கோகுலம் வந்தாள். கண்ணனை அழைத்து முலையூட்டினாள். அவனும் பால் அருந்துவது போல் அவள் உயிரை உறிஞ்சி விட்டான்.
புத்தகக் காட்சியில்…
சென்னை புத்தகக் காட்சி நாளை (ஜன. 3) தொடங்கி, ஜனவரி 21 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து புத்தகக் காட்சிகளைப் பார்த்து வரும் இது குறித்த எழுத்தாளரின் தனிப்பட்ட பார்வை இது...
பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி
‘இலக்கிய வட்டம்’ இதழ்த் தொகுப்பில் மகாகவி பாரதி குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும், மறைந்த இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான திரு. க.நா.சு. எழுதிய கட்டுரை இது. அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்…
மாலை-2
கூடிய வரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.
மலையாளம்- 2
“தமிழ்நாட்டிலேயும் இதுபோலவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக” என்று சாஸ்திரி சொன்னார்.
மலையாளம்-1
ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு, ‘பெயரென்ன?’ என்று கேட்டார். ‘என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்’ என்று நாராயணஸ்வாமி சொன்னார். ’தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?’ என்று நம்பூரி கேட்டார். ‘ஆம்’ என்று ஸ்வாமி சொன்னார். ‘பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?’ என்று நம்பூரி கேட்டார். அதற்கு நாராயணஸ்வாமி:- ‘பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப்பட வேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை’ என்றார்.
ராகவ சாஸ்திரியின் கதை
அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:- “நான், மலையாளி என்று குப்பு சாஸ்திரியிடம் சொன்னேன். ஸம்ஸ்கிருதம் பேசுவதிலிருந்து நம்பூரி பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்று குப்பு சாஸ்திரி தாமாகவே ஊகித்துக் கொண்டார் போலும். நான் ஜாதியில் தீயன். மலையாளத்தில் தீயரென்றால் தமிழ் நாட்டில் பள்ளர் பறையரைப் போலேயாம். தீயன் சமீபத்தில் வந்தால் பிராமணர் அங்கே ஸ்நாநம் செய்து பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்” என்றார்.