ஸ்ரீ ராமாநுஜரும் சமத்துவமும்: நூல் மதிப்புரை

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள ஸ்ரீராமானுஜரும் சமத்துவமும் (2023) பல விதங்களில் ஒரு முக்கியமான நூல். நூலாசிரியர் சிறந்த கவிஞர், சிந்தனையாளர். தத்துவம், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் ஆழ்ந்து சஞ்சரிப்பவர். இந்தப் புத்தகத்தை எழுதியதற்கான காரணமாக அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குரிய விஷயம்.

மக்கள் தலைவர் வ.உ.சி.: நூல் அறிவிப்பு.

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தமிழகத்தில் சுதேசி நெருப்பைப் பற்றவைத்த தீரர் பெரியவர் வ.உ.சி. அவர்கள் குறித்த சிறிய நூலை வெளியிடும் அளப்பரும் முயற்சி குறித்த தகவல் இது... இந்நூலை வாங்கிப் பயனடைவோம்!

சிங்கப்பாதை- நூல் அறிமுகம்

சும்மா வரவில்லை சுதந்திரம்.. அஹிம்ஸைப் போராட்டம் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய போராட்டமும் தான் நமது சுந்தந்திரத்திற்குக் காரணம் என்ற உண்மையை விளக்குகிறது இந்நூல்...

வேத காலம்- நூல் மதிப்புரை

பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ் ஒரு வேத விற்பனர்.  ‘வேதகால வாழ்வியல்’ என்ற அவரது புகழ் பெற்ற மராட்டிய நூல் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. அந்த நூலின் சுருக்கப்பட்ட பதிப்பாக இந்த நூலை சென்னையில் உள்ள சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது....

ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு

அமரர் ரகமி எழுதிய வீரவாஞ்சி நூல் குறித்த திரு. ஜடாயு அவர்களின் அறிமுகக் கட்டுரை இது...

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? – நூல் அறிமுகம்

அறிவுலகில் நீலகண்ட சாஸ்திரியும் (சோழர்கள்), பொதுவெளியில் கல்கி வார இதழில் தொடராக கிருஷ்ணமூர்த்தியும் (பொன்னியின் செல்வன்), அண்மையில் திரைப்படமாக மணிரத்னமும் (PS I & II),  சோழ வரலாற்றைப் பற்றி தமிழர்களிடையே  கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில் உண்மை எது கற்பனை எது என்பதையும், இக்கால நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாஸ்திரி காலத்தின் போதாமைகளை  நீக்கியும், தெளிவைக் கொண்டு வரும் வரலாற்று ஆய்வைச் செய்துள்ளார் ஜெயஸ்ரீ ஸாரநாதன். 

சங்கப்பணியில் சமர்ப்பணமான சுந்தர.ஜோதிஜி- முன்னுரை

விஜயபாரதம் முன்னாள் ஆசிரியர் அமரர் சுந்தர.ஜோதி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் அண்மையில் வெளியாகி இருக்கிறது. இந்நூலை, ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகர் திரு. சா.சீனிவாசன் அழகாகத் தொகுத்திருக்கிறார். அந்நூலின் அறிமுகமாக, அவரது முன்னுரை இடம் பெறுகிறது...

அந்த 15 நாட்கள் – நூல் அறிமுகம்

திரு. பிரசாந்த் போலே எழுதிய அந்த 15 நாட்கள் என்னும் இந்த நூல், நாடு விடுதலை அடைவதற்கு முந்தைய 15 நாட்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை தொகுத்திருக்கிறது.இந்நூலின் முன்னுரை இங்கு நூல் அறிமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது...

திராவிட கேள்வியும் தேசிய பதிலும் – நூல் மதிப்புரை

தமிழகத்தில் வெகுஜன ஊடகங்களில் பணிபுரிவோர் பலரும் திராவிட அரசியல் கருத்தாக்கங்களுக்கு தங்களை அடியாட்களாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் ஊடகவெளியில் விதைக்கும் பலவிதமான நச்சுக் கருத்துகளுக்கு தனது நூலில் எளிய பதில்களை தர்க்கரீதியாகவும், சில இடங்களில் புரிய வேண்டியவர்களுக்குப் புரியவைக்கும் விதமாக குதர்க்கரீதியாகவும் கூறுகிறார் இந்நூலாசிரியர் திரு. பா.பிரபாகரன்....

தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர் – நூல் அறிமுகம்

ஒவ்வொரு பாடலுக்கும், பதவுரை, விளக்கவுரை ஆகியவற்றுடன், ஆழ்வார்கள் வாக்கு என்ற ஒப்பீடுப் பகுதியையும் இணைத்து, முப்பரிமாணத்தில் நூலைத் தொகுத்திருப்பது மிகவும் சிறப்பு. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நூலாசிரியரின் தேர்ச்சி ஒப்பீடுகளில் வெளிப்படுகிறது. அந்த வகையில்,  ‘தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர்’ என்ற இந்நூல், ஆழ்வார்களின் பாசுரங்களின் துணையுடன் மிளிர்கிறது.

வீர சாவர்க்கர் ஒரு தீர்க்கதரிசி

திருவாளர்கள் உதய் மஹூர்கர், சிராயு பண்டிட் ஆகியோர் எழுதிய ‘Savarkkar: The man who could have prevented partition’ என்ற நூலுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ப.பூ. மோகன் பாகவத் அளித்துள்ள அணிந்துரையே இக்கட்டுரை….

சங்கரநயினார் கோயில் தலபுராணம் – நூல் மதிப்புரை

இந்த நூல் இதுவரை பல பதிப்புகள் கண்டிருந்தாலும் செம்மையான பதிப்புக் காணவில்லை என்ற குறையை நீக்கி இருக்கிறது குகபதி பதிப்பகம். கீழவயலி அம்பிகைதாசன் அளித்த உரையுடன் சங்கரநயினார் கோயில் புராணத்தை மீளாக்கம் செய்திருக்கும் நண்பர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுபோலவே ஒவ்வொரு தலபுராணமும் முழுமையாக அச்சிடப்பட்டால், நமது தமிழ் மொழி, மாநில வரலாறு செழுமையுறும் என்பதில் ஐயமில்லை.

கோமதி சதரத்ன மாலை- நூல் அறிமுகம்

சங்கரன்கோவில் திருத்தலத்தில் உறையும் தேவி  கோமதி அம்மன். சைவ - வைணவ ஒற்றுமைக்குப் பாலமாகத் திகழும் இத்தலத்து அம்மையை தமது செந்தமிழால் பாடிப் பரவுகிறார், சென்ற நூற்றாண்டின் மையத்தில் சைவத்தமிழ் வளர்த்த சைவ சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளையவர்கள். கோமதி அம்மனின் பெருமைகளை விவரிக்கும் இந்த நூறு பாடல்களும் ரத்தினம் போல மிளிர்கின்றன.

பேராபுரி மஹாத்ம்யம்- நூல் அறிமுகம்

தென்திருப்பேரை தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்த தலம். இத்தலத்து இறைவனான மகரநெடுங்குழைக்காதரை அவர்கள் பலரும் பாடி மகிழ்ந்திருக்கின்றனர். அவ்வாறு  எழுதப்பட்ட பல தமிழ் இலக்கியங்களையும் மிகவும் கடினமாக உழைத்து, ஒன்றுசேர்த்து, அரிய, புனிதமான படையலாக அளித்திருக்கிறார் திருவாளர் மகர சடகோபன்.

சங்க செயல்முறையின் வளர்ச்சி – நூல் அறிமுகம்

சங்கம்- அமைப்பு; ஸ்வயம்சேவகர் - உறுப்பினர்; ஷாகா - அடிப்படை செயல்முறை. இந்த சங்க திட்டம் படிப்படியாக வளர்ந்து கொண்டே செல்வதை இந்நூலில் காணும் போது மகிழ்கிறோம். ஒரு மொட்டு  பூவாக மலர்வது போல,  ஒரு சிசு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வது போல, சங்க செயல்முறை இயல்பாக வளர்ந்தது. இதனை விவரிக்கிறது இந்நூல். ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில், இந்த நூல் வெளிவருவது மிகவும் சிறப்பு.