1909லேயே இந்தியா சுதந்திரம் பெறும் என்றும் உறுதியாக ஸ்ரீஅரவிந்தர் கூறியுள்ளார். அது, பிளவுபட்ட, அரசியல் சுதந்திரமாக இல்லாமல் பரிபூரண சுதந்திரமாக அமைய வேண்டும்; அந்த சுதந்திரம் இந்தியாவுக்காக அல்லாமல் மனிதகுல மேன்மைக்காக, உலகம் முழுமையாக்காக இருக்க வேண்டும்; அதற்காகத் தான் பாடுபட வேண்டும் என்பது இறைவன் தனக்கிட்ட ஆணை என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்....
Category: அரவிந்தம்
போரும் அமைதியும் அரவிந்தரும்
பூமி என்ற கோளின் பரிணாம வரலாற்றுப் பின்புலத்தில் மனித வரலாற்றைக் கண்ட தீர்க்கதரிசி ஸ்ரீ அரவிந்தர். சமூகப் பரிணாமம் பற்றிப் பேசும் டார்வின் அல்லது மார்க்ஸின் கொள்கைகளின் அடிப்படையில் பரிணாம தத்துவத்தை முன்வைத்த பல தத்துவவாதிகள் மேற்கத்திய நாடுகளில் தோன்றியுள்ளனர். என்றபோதிலும் (விழிப்பு) உணர்வு என்ற ரீதியில் பரிணாம வளர்ச்சியை அணுகியவர் ஸ்ரீ அரவிந்தர்.... ஸ்ரீ அரவிந்தர் போருக்கான உளவியல் காரணங்களைப் பற்றி எழுதி உள்ளவை இப்போது நடக்கும் ரஷ்ய - உக்ரைன் யுத்தம் பற்றி நமக்கு சரியான புரிதலை அளிக்குமா?
அரவிந்தரின் உத்தர்பாரா பேருரை
1908இல் அனுசீலன் சமிதியைச் சேர்ந்த குடிராம் போஸும், பிரஃபுல்ல சாகியும் ஆங்கிலேய அதிகாரி கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல முயன்றனர். இந்த வழக்கில் குடிராம் போஸ் கைதானார்; பிரஃபுல்ல சாஹி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கு ‘அலிப்பூர் சதி வழக்கு’ என்று பெயர் பெற்றது. இந்த வழக்கில் பிரதானக் குற்றவாளிகளாக அரவிந்தர், அவரது தம்பி உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், இவ்வழக்கில் பிற்பாடு அரவிந்தர் விடுதலையானார். பரீந்திர கோஷ் உள்பட பலர் பலவேறு சிறைத் தண்டனைகளைப் பெற்றனர்; குடிராம் போஸ் தூக்கு தண்டனை பெற்றார். இதுவே இந்தக் குற்ற வழக்கின் சாரம். இவ்வழக்கில் 1908 மே 2-இல் கைது செய்யப்பட்ட அரவிந்தர், 1908 மே 5 முதல் 1909 மே 6 வரை அலிப்பூர் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கபட்டிருந்தார்; அங்கு பல சித்ரவதைகளை அனுபவித்தார். எனினும், இவ்வழக்கில் அரவிந்தர் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பால் நிரூபிக்க இயலாததால் அவர் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு 1909 மே 30இல் உத்தர்பாரா என்ற நகரில் தனது ஆதரவாளர்கள் கூட்டிய கூட்டம் ஒன்றில் அரவிந்தர் உரை நிகழ்த்தினார். அதுவே, புகழ்பெற்ற ‘உத்தர்பாரா பேருரை’ என்று அழைக்கப்படுகிறது. விடுதலை வீரரான அரவிந்தர் ஆன்மிகவாதியாக மலர்ந்ததன் பின்னணியை அவரே இந்த உரையில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, ‘சநாதன தர்மமே தேசீயம்’ என்ற அறைகூவலையும் அரவிந்தர் இந்த உரையின் இறுதியில் தெரிவித்திருக்கிறார்.
அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதம்
1901 ஏப். 30-இல் அரவிந்த கோஷ்- மிருணாளினி போஸ் திருமணம் நடைபெற்றது. அரசு அதிகாரியும் செல்வந்தருமான பூபால் சந்திர போஸின் மூத்த மகள் மிருணாளினி. அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே; அரவிந்தரின் வயது 28. இவர்களது இல்லற வாழ்வு நீண்ட நாள் நிலைக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்ட அரவிந்தரால் மற்றையோர் போல வாழ முடியவில்லை. கல்வியாளரான தனது கணவர் அரசுக்கு எதிராகப் போராடுவதை அவரது மனைவியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அரவிந்தரால் மனைவிக்கு நேசத்தைக் காட்ட முடியவில்லை. இதனால் இருவரிடையே மனக்கசப்பு நேரிட்ட வேளையில், அரவிந்தர் தனது மனைவி மிருணாளினிக்கு 1905 ஆக. 30 இல் எழுதிய கடிதம் இது…