சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி

-ஸ்வயம்சேவகன்

அண்மையில் கேரளத்தின் கொச்சியில் இருந்து கர்நாடகத்தின் பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தொடங்கப்பட்டபோது, அந்த ரயிலில் பயணித்த கேரள மாணவிகள் குழு மலையாளத்தில் ஒரு தேசபக்திப் பாடலைப் பாடினர். அது ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பாடல் என்றும், அதை ரயிலில் மாணவிகள் பாடியிருக்கக் கூடாது என்றும், கேரள முதல்வர் பிணராயி விஜயன் கண்டித்திருந்தார். அது என்ன பாடல்? இதோ அப்பாடலின் தமிழ் வடிவம். இந்த அற்புதமான பாடல் தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிணராயிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி…
கிராம மனைத்தும் தவ பூமி!
சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்…
சிறுவரனைவரும் ராமனே!
சிறுவரனைவரும் ராமனே!

கோயிலைப் போலே உடல்கள் புனிதம்…
மாந்தரனைவரும் உபகாரி!
சிங்கத்துடனே விளையாடிடுவோம்…
ஆவினம் எங்கள் அன்புத்தாய்!
காலையில் ஆலய மணிகள் முழங்கும்…
கிளிகள் கண்ணன் பெயர் பாடும்!
  (சிறுமியரெல்லாம்)

உழைப்பால் விதியை மாற்றிடும் மண்ணிது…
உழைப்பின் நோக்கம் பொது நலமே!
தியாகமும் தவமும் கவிகள் பாட்டின்
கருவாய் அமையும் நாடிது!
கங்கை போலே தூய ஞானம்
ஜீவ நதியெனப் பாய்ந்திடும்!
  (சிறுமியரெல்லாம்)

போர்க்களந் தன்னிலே எங்கள் வீரர்
புனித கீதையை ஓதுவர்!
ஏர்முனையின் கீழ் தவழ்ந்து வருவாள்
எங்கள் அன்னை சீதையே!
வாழ்வின் முடிவாய் விளங்குவதிங்கு
இறைவன் திருவடி நீழலே!
  (சிறுமியரெல்லாம்)

$$$

Leave a comment