இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 2

-ஜடாயு, சுரேஷ் வெங்கடாத்ரி, ஆமருவி தேவநாதன், மாலன், கோவை கே.ராதாகிருஷ்ணன், வ.மு.முரளி

வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்தி வரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடி வருகிறது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் முகநூல் பதிவுகள் தொகுக்கப்பட்டு, நமது தளத்தில் பதிவாகின்றன… இது இரண்டாம் பகுதி…

காண்க: 

1. தேசதுரோக கீழ்மகன்களின் அறிக்கை

-ஜடாயு

பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதத்தை நொறுக்கி அழிக்கும்  ‘ஆபரேஷன் சிந்தூர்’ போரில், இந்தியா முழுவதும் ஒன்றுதிரண்டு நமது தேசியத் தலைமையும் ராணுவமும் இணைந்து எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரே குரலில் தனது ஒட்டுமொத்த ஆதரவைத் தெரிவித்திருக்கின்றது – விதிவிலக்கான மிகச்சில தேசதுரோக அபஸ்வரக் குரல்கள் தவிர்த்து. வெளிப்படையான பாகிஸ்தானிய ஆதரவில் ஆரம்பித்து,  ‘போரைத் தவிர்ப்போம், அமைதி, மனித நேயம், இந்திய ராணுவத்தின் அத்துமீறல்’ என்று பலவிதமானவை இந்த அபஸ்வரங்கள்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த அபஸ்வரக் குரல்களின் நாராசம் தமிழ்நாட்டில் சற்று அதிகமான ஓசையுடன் உரத்து ஒலிக்கிறது. சீமான், வைகோ, திருமா, ஜகத் கஸ்பர், பா.ரஞ்சித் போன்ற வழக்கமான இந்திய தேசிய எதிர்ப்பு அரசியல், சினிமா பெருச்சாளிகளும், தமிழ் செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் உலாவும் சில்லறை தேசவிரோதப் பூரான்களும் தெரிவிக்கும் கருத்துக்கள் தான் எங்கு பார்த்தாலும் தென்படுகின்றன என்று விசனப் படுகிறார்கள் நண்பர்கள், தேசபக்த தமிழர்கள் (தினமலர் தவிர்த்து, தமிழ் ஊடகம் என்ற முடைநாற்றமெடுக்கும் சாக்கடைப் பக்கம் நான் அதிகம் போவதில்லை).

தமிழ்நாட்டின் அறிவுசீவிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் கூட்டாக கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கை இன்னொரு அசிங்கம். 

வண்ணதாசன், பவா செல்லதுரை, இமையம், ரவிக்குமார் எம்.பி., ஜி.குப்புசாமி, பெருமாள் முருகன், சாம்ராஜ், சுப்ரபாரதிமணியன், இளங்கோ கிருஷ்ணன் என்று-  நீங்கள் அறிந்த, அறியாத இலக்கிய மாஃபியா உறுப்பினர்களின் பெயர்கள் இதில் உள்ளன. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் எத்தனை பேர் எழுதியிருப்பதை படித்துப் பார்த்தான்கள் தெரியவில்லை. ஆட்டுமந்தைக் கூட்டம் போல பெயர் போட்டிருக்கவும் கூடும். எப்படியானாலும், இந்த தேசதுரோக கீழ்மகன்களின் பெயர்களை மறக்காமல் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.  ‘இலக்கியம்’ என்ற பெயரில் இந்தச் சனியன்கள் எழுதும் நச்சுக்கழிவை வாசிக்காவிட்டால் எந்தவிதத்திலும் நீங்கள் குறைந்துபோய்விடமாட்டீர்கள் என்பதை உணருங்கள்.

பல வருடம் முன்பு கோவை குண்டுவெடிப்பு கொடூரன் மதானியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் இதேபோல தமிழ்நாட்டின் இலக்கிய மாஃபியாவைச் சேர்ந்த ஒரு பெரிய கும்பல் கையெழுத்திட்டது. அந்த அவலட்சண  ‘பாரம்பரியம்’ இன்னும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்தக் கும்பலை சமரசமின்றிக் கண்டித்திருக்கும் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்  போற்றுதலுக்குரியவர். தமிழ் இலக்கியத்தில் நேர்மையும், தேசபக்தியும், பண்பாட்டு உணர்வும் இன்னும் ஏதோ கொஞ்சம் ஜீவனுடன் உள்ளன என்பதற்கான சாட்சி அவர். இதில் கையெழுத்திடாமல் ஒதுங்கிக் கொண்ட பிற பிரபல எழுத்தாளர்கள், அறிவுசீவிகளும் அந்த நம்பிக்கையை மேலும் சற்று உறுதிப் படுத்துகிறார்கள்.

உண்மையில் தமிழ்நாட்டின் வெகுஜன மனநிலை இந்திய தேசியத்திற்கு எதிரானதல்ல. சொல்லப் போனால் தேசபக்தியிலும் ராணுவத்தின் மீதான மதிப்பிலும் தமிழர்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. ஆனாலும் ஏன் இப்படி நடக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ முதல் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்த மறுநாள், லக்னோவிலும், வாராணசியிலும், தில்லியிலும், மும்பையிலும், பெங்களூரிலும் மற்றும் பல நகரங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து தேசபக்த கோஷங்களுடன் அதைக் கொண்டாடினார்கள். ஆனால் கேவலம் ஒரு சினிமா நடிகனுக்காக தாம்தூம் என்று குதிக்கும் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரையில், இதற்காக எந்தக் கொண்டாட்டமும் நடந்தது பற்றிய செய்திகள் எதையும் நான் பார்க்கவில்லை. ஏன் இந்த நிலை? இதற்கும் குவார்ட்டரும் பிரியாணியும் கொடுத்து கூட்டிவர வேண்டும் என்ற நிலையில் தான் திமுக கொத்தடிமைகளின் சொர்க்கபூமியான தமிழ்நாடு உள்ளது போல.

பாஜகவும் மற்ற தேசபக்த சக்திகளும் இணைந்து இந்த வெட்ககரமான தமிழ்ச் சூழலை மாற்றியாக வேண்டும். இதை இப்படியே வளரவிடுவது தமிழ்நாட்டின் நலனுக்கும், பாரதநாட்டின் இறையாண்மைக்கும் சற்றும் உகந்ததல்ல.

$$$

2. இந்திய எதிர்ப்புப் பிரசாரம் தான் இது…

-சுரேஷ் வெங்கடாத்ரி

சிந்தூர் நடவடிக்கைக்கு எதிரான சில, பல தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களின் கண்டன அறிக்கை ஒன்றைப் பார்த்தேன். அதில் இருக்கும் முக்கியமான ஒரு வரி இதுதான்.

// தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் மத அடையாளத்தைக் கேட்டு உறுதி செய்துகொண்ட பிறகே சுட்டுக் கொன்றதாக பொய்த்தகவலைப் பரப்பி இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும்… //

பஹல்காமில் கொல்லப்பட்டவர்களுடன் கூட இருந்த பலரும், அந்தத் தீவிர வாதிகள் மிகத் தெளிவாக பலியானவர்களின் மதத்தைக் கேட்டு விட்டே, சிலரது ஆடைகளையும் அவிழ்த்துப் பார்த்துவிட்டே சுட்டார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருக்க இவர்கள் அதைப் பொய்த் தகவல் என்று அப்பட்டமாக பொய்யாக எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் பஹல்காம் சம்பவம் நடந்து 15 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இந்தியாவில் எங்குமே  இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்பதே நிஜம். இங்கேயும் காஷ்மீரிலும் இருக்கும் இஸ்லாமியர்களும் பாகிஸ்தானுக்குத் தங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது தேசபக்தியை யாரும் சந்தேகிக்கவில்லை. உண்மை நிலை இப்படியிருக்க, இந்த எழுத்தாளர்கள் அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி இந்திய அரசுக்கு எதிரான ஒரு வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

அதில் கையெழுத்திட்டிருக்கும் சிலர் எல்லாம் அறிக்கையைப் படித்துப் புரிந்து கொண்டுதான் கையெழுத்துப் போட்டார்களா என்ற ஐயம் எனக்கு எழுகிறது. வண்ணதாசன், சுப்ரபாரதி மணியன் பெயரெல்லாம் அதில் இடம்பெறும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. திமுகவை சேர்ந்த எழுத்தாளர் இமையம் இதில் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் அவரது கட்சி நாளை (இன்று) இந்திய ராணுவத்தை ஆதரித்து முதல்வர் தலைமையில் பேரணி நடத்த இருக்கிறது. இப்போது இமையம் என்ன செய்வார்?

அவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இந்த நடவடிக்கையில் நியாயமும் தர்மமும் இல்லை.

இதில் கையெழுத்திடாத ஏராளமான பெரிய எழுத்தாளர்கள் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களாவது, இவர்களின் பொய்யான கூற்றை அம்பலப் படுத்தி ஒரு அறிக்கை அளித்தால் அது ஒரு நல்ல அறம் மிகுந்த செயலாக இருக்கும்.

$$$

3. கவிதையில் ஒரு சாட்டையடி

-ஆமருவி தேவநாதன்

கால்சட்டைக்குள் மதம் தேடுபவனிடம்

மனிதநேயம் தேடும்

தமிழ் எழுத்தாளர்களே…

உங்கள் நபும்ஸகக் கூட்டத்தில்

இருந்ததை எண்ணி,

கால்சட்டையைக் கிழித்துக் கொண்டு

ஓட யத்தனித்தேன்.

அப்போது தான் புரிந்தது..

நிர்வாண விடுதியில்

கால்சட்டையுடன் நின்றது

என் தவறுதான் என்று.

$$$

4. பயங்கரவாதம் இஸ்லாமிய நெறிகளுக்கு எதிரானது!

-மாலன்

சில திமுக, விசிக கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள்  ‘போருக்கு எதிராக’ என்ற பெயரில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் பதில் இது….

1. நாமாகப் போருக்குப் போகவில்லை; சிவிலியன்களையோ, ராணுவ நிலைகளையோ, உள்கட்டமைப்புக்களையோ தாக்காமல், பயங்கரவாதிகளின் முகாம்களை நாம் அழித்ததற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு நம் எல்லையோரக் கிராமங்களை பாகிஸ்தான் தாக்கியதால் நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ளப் போரிடுகிறோம். பார்க்கப்போனால் பயங்கரவாதிகளை பாகிஸ்தானே அழித்திருக்க வேண்டும். ஆனால் பயங்கரவாதிகளின் மரணத்திற்கு பாகிஸ்தான் அரசு மரியாதை அளிக்கிறது; அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார்கள்

2. பயங்கரவாதிகளுக்கு இத்தகைய மரியாதையும் ஆதரவும் அளிக்கும் பாகிஸ்தான்  ‘விசாரணைக்குத் தயார்’ என்று சொல்வது கண்துடைப்பு, காலம் தாழ்த்தும் நாடகம். இதைப் புரிந்து கொள்ளத் திறனற்றவர்களா இந்த அறிவுஜீவிகள்?

3. பயங்கரவாதிகளை அழிக்காத வரை அவர்கள் வேறு வேறு வடிவங்களில் வருவார்கள். மும்பையில் தாக்குதல் நடத்தியதைப் போல ஒருநாள் நம் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள், இயந்தரத் துப்பாக்கிகளோடு. பயங்கரவாததின் ஊற்றுக் கண்ணான பாகிஸ்தானை அழிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது.

4. எல்லா முஸ்லிம்களையும் எதிர்ப்பதாக ஒரு புனைவு கட்டமைக்கப்படுகிறது. எல்லா முஸ்லிம்களையும் அல்ல, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை அவர்கள் முஸ்லிம்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் கிறிஸ்தவர்கள், சமணர்கள், பார்சிகள் யாராக இருந்தாலும் எதிர்க்கிறோம். இன்னும் சொல்லப் போனால் பயங்கரவாதம் என்பது இஸ்லாமிய நெறிகளுக்கு எதிரானது; பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் இஸ்லாமியராக இருக்க முடியாது.

$$$

5. நம்பகமற்ற போர் எதிர்ப்புக் குரல்கள்

-கோவை கே.ராதாகிருஷ்ணன்

கிட்டதட்ட எல்லா எதிர்க்கட்சிகளும் பாகிஸ்தான் மீதான ராணுவத்தின் தாக்குதல்களுக்கு ஆதரவு அளித்திருந்தனர், அரசிற்கு ஆதரவாக நிற்கின்றனர். ஆனால் இணையத்தில் எழுதும் முற்போக்குத் தரப்பு நபர்கள் பலர் மட்டும், அரசின் நடவடிக்கையை விமர்சன ரீதியாக எழுதி இருந்தனர்; அதாவது போர் தவறு , அரசு போரை மக்கள் மீது திணிக்கிறது என்ற ரீதியில். உண்மையில் இவர்கள் இந்திய தோல்விகள் சார்ந்த தகவல்களுக்காக ஆர்வமாகக் காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்.

பாகிஸ்தான் தரப்பில் இருந்து சொல்லப்பட்ட  ‘இந்திய விமானங்கள் தாக்கப்பட்டன’ என்ற செய்தியை எடுத்துப் போட்டு, இப்படியும் செய்திகள் வெளியே வருகின்றன என்றனர்; இந்திய ஊடகங்கள் இந்தியத் தரப்பு அடையும் பாதிப்புகளை மறைக்கிறது என்றனர். இப்படியெல்லாம் இவர்கள் பேச உண்மையான காரணம், இவர்கள் இந்தச் செய்திகளைத்தான் விரும்புகின்றனர் என்பதே.  இந்தியாவின் கை ஓங்கியிருகிறது என்று தெரிய வரும்போது அமைதியைப் பேச ஆரம்பிக்கின்றனர் – போர் தவறு என்றெல்லாம். ஏனெனில் இவர்கள் இந்திய வெற்றியை விரும்பவில்லை; அதைக் குறை சொல்ல வேண்டும், எனவே போருக்கு எதிரானவர்களாக வேடம் எடுக்கின்றனர் .

இவர்களுக்கு மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால், பயங்கரவாதத்தை வீழ்த்த அரசு நிகழ்த்தும் தாக்குதல் நடவடிக்கையை ஆதரித்து இருப்பார்கள். ஆனால் இவர்கள் கட்சி அரசியல் பேசும் ஆட்களை விடக் கீழானவர்கள். இவர்களுக்கு பிஜேபி ஆகாது;  எனவே பிஜேபி அரசு நிகழ்த்தும் எந்த விஷயமும் தவறானது. பிஜேபி அரசு செய்யும் எந்த விஷயமும் தோற்க வேண்டும்- அது கொரானா எதிர்ப்பு தடுப்பு மருந்துகளாக இருந்தாலும் சரி, பயங்கரவாதத்தை எதிர்க்கும் ராணுவ நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி.

அதாவது, இவர்களது பிஜேபி மீதான எதிர்ப்பு என்பது மக்களின் நலனைக் கூட கவனத்தில் இல்லாமல் ஆக்கி, பிஜேபி செய்யும் எந்த விஷயத்தையும் கண்மூடித் தனமாக எதிர்க்க வேண்டும் என்ற வெற்று நிலைக்குப் போய் விட்டது .

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் முற்போக்குத் தரப்பின் எந்த நிலைப்பாடும் அடிப்படையில் இந்திய எதிர்நிலையில் இருப்பதைக் காண முடியும்; ஹிந்து எதிர் நிலைப்பாட்டில் இருப்பதையும் பார்க்க முடியும். இந்திய, ஹிந்து எதிர் நிலைப்பாடுகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒன்றுதான்  ‘முற்போக்கு’ என்பது. ஒருவர் முற்போக்கு நிலைப்பாட்டிற்குச் சென்றால், இயல்பாக அவரறியாமல் ஹிந்து,இந்திய எதிர்நிலைபாட்டைக் கொண்டிருப்பார் .

போர் கூடாது என்பது உயர்ந்த எண்ணம்தான். ஆனால் இந்த நேரத்தில் தங்களை போருக்கு எதிராகக் காட்டிக் கொள்பவர்கள்-  பெரும்பாலும் நடிப்பவர்கள் மட்டுமே. போருக்கு எதிராக, மக்கள் நலன் சார்ந்து உண்மையாகச் சிந்திப்பவர் சிலர் உண்டு, அவர்களை நான் குறிப்பிடவில்லை.

 ***

எந்த விஷயத்திலும் மாற்றுக் குரல்கள் முக்கியமானவை. எதிர்ப்புக் குரல்கள் கூட முக்கியமானவை. அந்த வகையில் போர் எதிர்ப்புக் குரல்களை மதிக்கிறேன்; ஆனால் இவர்கள் வைக்கும் வாதங்கள் சரியற்றவை. மொத்த முற்போக்குத் தரப்பும் இந்திய இஸ்லாமியர்கள் ஆதரவுத் தரப்பாக இருந்தாலும் அதை முழுமையாக ஏற்கிறேன் – இஸ்லாமியத் தரப்பில் நின்று அவர்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்கிறார்கள் என்று. ஆனால் இவர்கள் அதிலிருந்தும் மேலே சென்று உலக இஸ்லாமியர் ஆதரவுத் தரப்பை முன்வைக்கின்றனர். அதாவது பாகிஸ்தானில் இருக்கும் இஸ்லாமியத் தரப்பில் நின்று! இது அதீதம்.  இதை ஏற்க முடியாது.

இவர்களது பாகிஸ்தான் மக்கள் மீதான அன்பு என்பது, உறுதியாக அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால்தான். உதாரணமாக இவர்கள், பங்களாதேஷில் ஹிந்துக்கள் பாதிக்கபட்ட போது குரல் கொடுக்கவில்லை. வங்காளத்தில் ஹிந்துக்கள் பாதிக்கபட்டபோதும் குரல்கொடுக்கவில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதிப்பு என்றால் மட்டுமே குரல் கொடுக்கிறார்கள் . இந்தியாவிற்குள் நின்று இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று பார்த்தால் அவர்கள் சிறுபான்மையினர்; எனவே சிறுபான்மைக்கு ஆதரவாக குரல் கொடுப்பது என்பது சரியே. ஆனால் சர்வதேசம் என்று போனால் ஹிந்துக்கள்தானே சிறுபான்மையினர்?

இன்னொன்று இந்த முற்போக்குத் தரப்பு பயங்கரவாதத்தை மிக மென்மையாக அணுகுகிறது. அல்லது எதிர்ப்புக் காட்டாமல் இருக்கிறது. இது மிகப் பிழையான நிலைப்பாடு. இந்த பஹல்காம் விஷயத்திலேயே குற்றவாளிகள் மதம் சார்ந்து அணுகவில்லை என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர். ஹிந்துத்துவத்தை, பிஜேபியை எதிர்க்கும் எதிர்ப்பில் பத்து சதவீதத்தைக் கூட மத பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் காட்டுவதில்லை. இந்த இரட்டை வேடத்தால்தான் இவர்களை நம்ப முடியாமல் போகிறது.

இன்று இவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூட, இந்திய அரசைத்தான் விமர்சிக்கின்றனர்; பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் நிலையில், ‘பாகிஸ்தான் பேச்சுவார்த்தை வருகிறது, ஆனால் இந்தியா தாக்குகிறது’ என்கின்றனர். இவர்களுக்கு உண்மை முக்கியமல்ல , இந்திய எதிர்ப்பு மட்டுமே முக்கியமானதாக இருக்கிறது.  இவர்களது போர் எதிர்ப்புக் குரல்களை நம்ப முடியாமல் போவது இதனால்தான்.

***

சில நண்பர்கள் பிஜேபி ஆதரவு என்பதை இஸ்லாமிய எதிர்ப்பு என்று எடுத்துக் கொள்கின்றனர். என்னளவில் அது தவறு. உண்மையில் பிஜேபி எடுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாடு என்பது சாதாரண இஸ்லாமியர்களின் நலனுக்கானது. சாதாரண இஸ்லாமியர்களால் தங்கள் மதம் சார்ந்து உருவாகும் தீவிர மனநிலை கொண்ட வன்முறைத் தரப்பை எதிர்கொள்ள முடியாது. உலகில் எந்த இஸ்லாமிய நாட்டிலும், தீவிர மனநிலை கொண்ட வன்முறை அமைப்புகள் தோன்றினால் அவை எளிதில் அதிகாரத்தை அடைகின்றன. ஆப்கனில் அதுதான் நடந்தது;  ஐஎஸ்ஐஎஸ் ஓரளவு வெற்றி அடைந்ததும் அதனால்தான். கோவையில் கூட முன்பு குண்டுகள் வைத்தது சிறு தீவிரவாத வன்முறைக் கூட்டம்தான். ஆனால் அவர்களை ஆரம்பத்திலேயே சாதாரண இஸ்லாமியர்களால் எதிர்த்து இல்லாமல் செய்ய முடியவில்லையே! சாதாரண இஸ்லாமியர்களால் தன் மதம் சார்ந்து வரும் அமைப்பு ரீதியான வன்முறைத் தரப்பை எதிர்கொள்ள இயலாது. பிஜேபி அவர்களை எதிர் கொள்கிறது.

நான் இஸ்லாமியப் பகுதியில் பிறந்து வளர்ந்தவன். ஒரு சாதாரண இஸ்லாமியரை விட எனக்கு இஸ்லாமியர்களின் சூழல் புரியும். பெரும்பான்மையோர் இணக்கத்தைத்தான் விரும்புகின்றனர்; நிம்மதியான வாழ்வையே விரும்புகின்றனர் .

எனக்கு சாதாரண ஹிந்து போலத்தான், சாதாரண இஸ்லாமியர்களும். அவர்கள் வாழ்வு பாதிக்கப்படக் கூடாது என்று எண்ணுகிறேன். பயங்கரவாதத்தின் பாதிப்புகள் இவர்கள் மீது விழக் கூடாது என்றும் எண்ணுகிறேன். பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த நோக்கில் நின்றுதான் பிஜேபியை ஆதரிக்கிறேன் .

$$$

6. இது மகாகவி பாரதியின் மண்!

-வ.மு.முரளி

இந்தப் பட்டியலில் இருக்கும் எவனும் / எவளும் பஹல்காம் படுகொலையைக் கண்டிக்கவில்லை. இந்தக் கழிசடைகள் தான் எழுத்தாளர்கள் என்றால், தமிழ் எழுத்துலகம் நாசமாகிப் போகட்டும். இந்த துரோகிகளை காஷ்மீர் எல்லையில் ஒரு மாதம் நிற்க வைக்க வேண்டும்.

தமிழ் எழுத்தாளர்கள் எல்லோரும் இடதுசாரிகள் / தேச விரோதிகள் அல்ல. ஆனால் இந்த கயவர்கள் கட்டுப்பாட்டில் தான் எழுத்துலகம் இருக்கிறது என்பது வேதனை. தேசிய சிந்தனை உள்ள எழுத்தாளர்கள் ஒன்றிணைய வேண்டும்… இது மகாகவி பாரதியின் மண்.

$$$

2 thoughts on “இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 2

  1. “கழுதைக்குப் பேரு முத்துமாலையாம்” என்ற தமிழ் சொல்லாடலுக்கு ஏற்ப இந்துப்பெயர்களில் இருந்து கொண்டு , அறிவே சிறிதும் இல்லாமல் ஆனால் தமக்குத்தாமே பகுத்தறிவாளர் என்று பெயர் சூட்டிக் கொண்டு, அந்நிய மதவாத பிரிவினை தேசவிரோத சக்திகளுக்கு விலைபோன இந்த உள்நாட்டு எச்சக் கைக்கூலிகளுக்கு அழிவு மிக சமீபாக இருக்கிறது என்றே தோன்றுகிறது …. தேசவிரோதக் கூட்டத்திடமிருந்து கைக்கூலியைப் பெற்றுக் கொண்ட இந்த அற்ப சொற்பக் கூட்டம் ஒரு அறையில் ஒரு கணியில் இருந்து அச்சுப்பதிவு செய்து வலைதளத்தில் உலாவ விட்டுவிட்டு, ஏதோ ஒட்டுமொத்த இந்தியர்களின் நாடித்துடிப்பு என்பது போல கருத்து பதிவிட இந்த பன்றிகளுக்கு யாரடா உரிமை கொடுத்தது? இதுலவேற “இந்த பன்றிக் கூட்டத்தோடு சேர விரும்புபவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று விளம்பர அறைகூவல் வேறு” ஏன் உங்களைப் போன்று விலைபோனதோடு உங்களைப் போன்றே தமிழகம் உட்பட தேசம் முழுவதும் உள்ள தேசவிரோதமாக செயல்படும் எச்ச ஊடகங்கள் அனைத்திலும் கூட பகல்ஹாம் தாக்குதலின்போது அங்கிருந்தவர்களிடம் “மதத்தைப்பற்றி விசாரித்ததோடு, ஆடைகளைக் களைந்து இந்து என்று உறுதி செய்யப்பட்ட ஆண்கள் மட்டுமே பக்கிஸ்தான் உதவியுடன் வந்த அந்த தீவிரவாத வெறிநாய்களால் கொல்லப்படார்கள்” என்று பறைசாற்றப்பட்டு உலகமே அறிந்துள்ள நிலையில் , நீங்கள் சொகுசாக வாழ்வதற்காக சட்டத்துக்குப்புறம்பாக யாரிடம் வாங்கிய எச்சக்காசுக்காக இத்தகைய இழிபிறவிகளாக செயல்படுகிறீர்கள் … திராவிஷ, புளுத்தறிவுவாதிகள் என்கின்ற கூட்டம் உலகத்திற்கே விஷம் என்பது தற்போது பாமரன் கூட அறிந்துள்ள நிலையில், முற்போக்கு என்ற கிறுக்கு வாதம் எல்லாம் இனி தமிழகத்தில் மட்டுமல்ல… இந்தியா மட்டுமல்லாது உலகம் எங்கிலும் இந்த (ஜியார்ஜ்) சோரோஸிஸ் ம் எடுபடாது .. பாரத அரசின் அடுத்தத கட்ட விசாரணை மற்றும் வேட்டை இந்த பன்றிக்கூட்டம் தான் என்பதும் , இதுவரை அவர்கள் சர்வ சுதந்திரமாக செயல்பட்டு வந்த தேசவிரோத, நாசகார தீவினைகளுக்கான பலனை முழுமையாக அப்பன்றிக்கூட்டம் அனுபவிக்கும் காலம் வந்து விட்டது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது … பலநாள் திருடன் ஒருநாள் சிறையில் என்பது போல , தற்போது தாமாகவே வந்து பொறியில் சிக்கியுள்ளார்கள் … பாவம் … இனிமேலும் தப்பிக்க இயலாது … இந்த சுயநலத்திற்காக சொந்தத் தாய்நாட்டிற்கே எதிராக தேசவிரோதிகளாக மாறியுள்ள இந்த இழிபிறவிகள் மீது நமது உன்னத பாரத அரசின் நடவடிக்கையை அனைவரும் விரைவில் எதிர்பார்க்கலாம். நன்றி … ஜய் ஹிந்த்

    Like

Leave a reply to KUMARESAN SHUNMUGAVEL Cancel reply