திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -74

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எழுபத்து நான்காம் திருப்பதி...

தொண்டை நாட்டு திருப்பதிகள்

74. சத்திய வரத ஷேத்திரம் திருக்கச்சி

அடர்ந்த இருட்டினிலே விளக்கொளியாய் ஒளிர்ந்தவனே!
அஷ்டபுஜங்களால் அரக்கர்களை அழித்தவனே!
அத்திவரதனே ஆனந்தம் தருபவனே – உனை
பக்தியோடு காணவந்தேன் காத்தருள்வாயே!

சத்யவரத சேத்திரம் என்று பெயர்பெற்றது திருக்கச்சி எனப்படும் காஞ்சிபுரம். இங்கு என்ந்த புண்ணிய்ய் காரியம் செய்தாலும் ஒரு கோடி மடங்காக பல தரும் என்பது ஐதீகம். திரேதா யுகத்தில் கஜேந்திரனாலும், துவாபர யுகத்தில் பிரஹஸ்பதியாலும், கலியுகத்தில் அனந்தனாலும் ஆராதிக்கப்பட்டவர் வரதர்.

பிரமன் அஸ்வமேத யாகம் செய்தபோது, வேளிவியில் உதித்தவர் தேவப்பெருமாள்.யாகத்தின் ஹவிர் பாகம் பெற புண்ணியகோடி விமானத்துடன் மூலார் எழுந்தருளினார் என்கிறது தலபுராணம்.

அத்தி வரதர்

பிரமனால் ப்ரதிஷ்டை எய்யப்பட்ட அதிமரத்தாலான அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த சிலையை வெளியே எடுத்து கோலாகல வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக 2019இல் அத்திவரதர் உற்சவம் நடைபெற்றது.

வேதாந்ததேசிகர் இங்கு ஒருமுறை வந்தபோது ஏழை ஒருவனின் துயர் தீர்க்க படல் ஒன்றைப் பாடினார். அதுகேட்டு தங்க மழை பொழியச் செய்தார் பெருந்தேவி தாயார். எனவே இவர்  ‘தங்கத் தாயார்’ என்று அழைக்கப்படுகிறார். ஆச்சாரியர் ராமானுஜரின் வாழ்வில் பல திருப்பங்களை நிகழ்த்திய தலம் இது.

மூலவர்: பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், வரதராஜர் (நின்ற திருக்கோலம்-  மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்:  பெருந்தேவி தாயார்
விமானம்: புண்யகோடி விமானம்
தீர்த்தம்: வேகவதி, அனந்தசரஸ், சேஷ தீர்த்தம்
தல விருட்சம்: அரச மரம்
மங்களா சாசனம்: பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 08.30 மணி வரை

எப்படிச் செல்வது?

செங்கல்பட்டு – அரக்கோணம் ரயில் பாதையில் காஞ்சிபுரம் உள்ளது. சென்னை கடற்கரை – காஞ்சிபுரம் ரயிலிலும் சென்று அடையலாம். அனைத்து இடங்களிலிருந்தும் பேருந்து வசதி உண்டு.

சேவிப்பதன் பலன்கள்:

எல்லாப் பிரச்னைகளும் விலகும், இங்கு வந்து வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்தால்.  8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

ஆச்சாரியர் ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வான் இங்கு வழிபட்டு கண்பார்வை பெற்றார். எனவே கண் நோய் நீங்க இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.

$$$

Leave a comment