அக்காரக்கனியும் அமரகவியும்

கவிச் சக்கரவர்த்தி கம்பர் தமிழில் இராமாவதாரம் இயற்றினாலும், அதில் பல புதுமைகளைப் புகுத்தி இருந்தாலும், அது புதிய நூல் அல்ல. தான் இதை இயற்றுவதற்கு முன்னால் - மகரிஷி வால்மீகி, வசிஷ்ட மாமுனி, போதாயணர் என்ற - மூவர் வடமொழியில் ராம காவியத்தை இயற்றியுள்ளனர்; அவர்களுள் முன்னவரான வான்மீகி மகரிஷியின் நூலை ஒட்டியே தாம் இதை இயற்றியதாகக் கூறுகிறார்.மகரிஷி வால்மீகியைப் பின்பற்றியதாக மேலே கூறியவர் வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இரணியன் கதையைப் புகுத்திய புதுமை ஏன் என்பதை இங்கே காண்போம்.

நிகண்டு, அகராதி அளித்த பெருமக்கள்

மொழியின் வளர்ச்சியிலும் கட்டமைப்பிலும் பேரிடம் வகிக்கும் இந்த நிகண்டுகளும் அகராதிகளும் தமிழின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி உள்ளன. சொற்களை அழியாமல் காக்கும் கருவூலங்களாக இவை விளங்குகின்றன....

சித்திரக் கவியும் கவிஞர்களும்

சென்னையில் வாழும் பா.சு.ரமணன், எழுத்தாளர். பல ஆன்மிக நூல்களை எழுதி இருக்கிறார். தமிழ் மொழியில் உள்ள சிறப்பு இலக்கிய வகையான ‘சித்திரக்கவி’ குறித்த அன்னாரது இனிய கட்டுரை இங்கே…

தமிழ் வசன நடை

நூறாண்டுகளுக்கு முன்னர், தமிழில் உரைநடை உருவாகிவந்த காலத்தில் அதற்கு இலக்கணம் இயற்றுகிறார் மகாகவி பாரதி. ” “கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி” என்று கூறும் அவர், ”வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்க வேண்டும்” என்கிறார். “உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்” என்று நமக்கு வழிகாட்டுகிறார்....

மக்கள் அரசு எது?

“ஜனநாயக  வடிவிலான  அரசு நல்ல  பலனைக் கொடுக்குமா  என்பது,  சமூகத்தில்  உள்ள  தனி நபர்களின்  மனப்பான்மையைப்  பொறுத்தது.  சமூகத்தில்  உள்ள தனி நபர்களின்  மனப்பான்மை ஜனநாயகப்  பண்புள்ளதாக  இருந்தால்,  ஜனநாயக  வடிவிலான அரசு  நன்மையைத் தரும்  என்று  எதிர்பார்க்கலாம்” -டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்