சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்       

ம.பொ.சி. - இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்ப, தமிழ்நாட்டு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி, இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை.

தியாகராஜ சுவாமிகள் வரலாறு

திருவையாறு தியாராஜ சுவாமிகளின் இனிய சரிதத்தை ஆக்கிச் சென்றிருக்கிறார், தஞ்சை பாரதி இலக்கியப் பயிலரங்கின் நிறுவன இயக்குநரும், தேசிய சிந்தனைக் கழகத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவருமான அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா. அக்கட்டுரை இது....

வாழ்ந்து வழிகாட்டிய மகாத்மா புலே

1954-இல் டாக்டர் அம்பேத்கர், மகாத்மா புலேவின் வாழ்க்கை வரலாற்றை தான் எழுத விரும்புவதாக, தனஞ்செய் கீரிடம் தெரிவித்துள்ளார். தனஞ்செய் கீர் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். டாக்டர் அம்பேத்கர் அவ்வாறு கூறக் காரணம், மகாராஷ்டிர மாநிலத்தில் அரிஜனங்களுக்காகவும் பெண்களுக்காகவும் முதன்முதலில் பள்ளிக்கூடம் துவங்கி, சமூகப் புரட்சிக்கு, மாற்றத்துக்கு வித்திட்டவர் அவர்.

வீரமுரசு சுப்ரமணிய சிவா   

இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகள் வரிசையில் தமிழகத்தில் முதன்மை வகித்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார் ஆகியோர் காலத்தில் வ.உ.சி. அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடி, சிறை சென்று, தொழுநோயுடன் வெளிவந்து, அந்த நிலையிலும் கடைசி மூச்சு வரை தேசத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மகான் சுப்ரமணிய சிவா.

கோபாலகிருஷ்ண பாரதி – ஓர் அறிமுகம்

இளமையிலேயே தமிழில் மேதைமை மிகுந்தவர்களுக்கு ‘பாரதி’ பட்டம் அளிக்கப்படுவது தமிழகத்தில் நிலவி இருக்கிறது. அந்த வகையில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு முன்னதாகவே ‘பாரதி’ பட்டம் பெற்றவர் கோபாலகிருஷ்ண பாரதி. அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இது.

சர்தார் படேல்- சில தகவல்கள்

அனைவராலும் 'சர்தார்' படேல் என்று அன்போடு அழைக்கப்படும் வல்லபபாய் படேல் 1950 டிசம்பர் 15 நாள் மும்பையில் மாரடைப்பால் காலமானார். அவரைப் பற்றிய சில தகவல்கள்...

தமிழகத்தின் தியாகத் திலகம்!

தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றிவைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். தியாகம் என்ற சொல்லுக்குப் பொருளானவர் வ.உ.சி.

சாவர்க்கர்: அபாயமான போராளி மட்டுமல்ல, தீவிரமான சீர்திருத்தவாதி!

இந்திய விடுதலைக்கு உழைத்த தியாகியரில் திலகம் போன்றவர் வீர சாவர்க்கர் எனபடும் விநாயக தாமோதர சாவர்க்கர். மராட்டியரான இவரே அரசியலில் ஹிந்துத்துவம் என்ற சித்தாந்தம் உருவாக அடித்தளமிட்டவர். அதன் காரணமாகவே இன்று பலராலும் அர்த்தமின்றி விமர்சிக்கப்படுபவர். ஆனால், பலரும் அறியாத அவரது இன்னொரு முகம், இவர் ஒரு அதிதீவிர சமூகச் சீர்திருத்தவாதி என்பதே. அதைப் பற்றி, திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இக்கட்டுரை, ஜீரணிக்கக் கொஞ்சம் கஷ்டமான விஷயங்களுடன் நம்முடன் உரையாடுகிறது...

தமிழகத்தின் விவேகானந்தர்

திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேரா. இளங்கோ ராமானுஜம், சுவாமி சித்பவானந்தரின் வழியில் ஆன்மிக சிந்தனைகளைப் பரப்பி வருபவர். அன்னாரது இனிய ஒப்பீட்டுக் கட்டுரை இது…

புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா

வெளிநாட்டு உதவியுடன் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை பெறத் துடித்த புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா. அவரைப் பற்றிய அமரர் தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் கட்டுரை இது....

முன்னோடிப் போராளி கஸலு லட்சுமிநரசு செட்டி

தமிழக ஹிந்துத்துவ சிந்தனையரங்கில் முதன்மையான எழுத்தாளரான திரு. அரவிந்தன் நீலகண்டன், பாரதத்தின் முன்னோடி விடுதலைப் போராளியான கஸலு லட்சுமிநரசு செட்டி குறித்து எழுதியுள்ள அரிய கட்டுரை இது...

அபூர்வ மனிதர்  தரம்பால்

பண்டைய இந்தியாவின் கல்வி, அறிவியல் வளர்ச்சி ஆகியவை குறித்து அற்புதமான ஆய்வுநூல்களை அளித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் தரம்பால். அவரைப் பற்றி திரு. டி.எஸ்.தியாகராஜன் எழுதிய அறிமுகக் கட்டுரை இது....

ஸ்ரீநீவாசனுக்கு வைர கிரீடம் சூட்டிய ரங்கநாதன்

அரசியலில் தூய்மை, பொதுவாழ்வில் நேர்மை என்பது காண அரிதான தமிழகச் சூழ்நிலையில், ரங்கநாத முதலியாரின் நினைவு போற்றத்தக்கதாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது....

தமிழ்த்தாயைக் காத்த தனயன்

பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?

மகாகவிகள் வாழ்த்திய தமிழ்ப் பேராசான்

இன்று நாம் காணும் தொன்மையான தமிழ் இலக்கியங்களில் பலவற்றை கரையானுக்கு இரையாகாகாமல் பனையேடுகளிலிருந்து நூலாக மாற்றிக் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது கடும் முயற்சியும் உழைப்பும் இல்லாதிருப்பின், பல பழந்தமிழ் இலகியங்களை நாம் அறிந்திருக்கவே இயலாது. அவரது சிறப்பை அறிந்து அந்நாளிலேயே மகாகவிகள் இருவர் வாழ்த்துக் கவிதை பாடி மகிழ்ந்துள்ளனர். அது பற்றி இங்கே காண்போம்…