"சீமையில் சில குரங்குகளை சில ஸர்க்கஸ் கம்பெனியார் கால் சட்டை, கோட், தொப்பி, கண்ணாடி, பூட்ஸ் வகையறா மாட்டி, சாராயம் கொடுத்து, ஸிகரெட்டுப் பிடிக்கச் சொல்லி, உடுப்பு மாட்டி, உடுப்புக் கழற்றி, மேஜையிற் தீனி தின்று, அமளிப் படுத்தும்படி கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைக் காட்டி காசு வாங்கி மனிதன் பிழைத்திருக்கிறான். ..."
Tag: பாரதி உரைநடை
புனர்ஜன்மம் (1)
காலம் மாறமாற,பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதியபதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்க வேண்டும். அருமையான உள்ளக்காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை.
தைரியம்
பாரதவாசிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம் பெறுவதற்குக் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். நாம் 'துணிவு வேண்டும்' என்கிறோம். துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன.
நம்பிக்கை
பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்ப வேண்டும். இரவிலும் பகலிலும், இன்பத்திலும் துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம் தெய்வ அருளைப்பற்றி நினைக்க வேண்டும். நோய் வந்தால், அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணிய வேண்டும்.
உண்மை – ரத்தினக் களஞ்சியம்
...மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மை விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுகிறது. நமது பாட்டன்மாரும் பூட்டன்மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்ப வேண்டுமென்ற விஷயமானது, குழந்தையாக இருக்கும்போது தைத்த உடுப்புக்களையே பெரியவனான போதும் போட்டுக்கொள்ள வேண்டுமென்பதற்கு ஒப்பாகும்...
மிருகங்களும் பக்ஷிகளும்
... எளிய வகுப்பினருக்குச் சிறிதேனும் ஈரம் இரக்கமின்றிக் கொடுமைகள் செய்யும் மக்களின் மீது சில சமயங்களில் என்னையும் மீறி எனக்குக் கோபம் பிறந்து விடுகிறது. ஆனால், இந்தக் கோபத்தையும் கூடிய சீக்கிரத்தில் முயற்சி பண்ணி அடக்கி விடுகிறேன். நீங்கள் சொன்ன விதியையே எப்போதும் பரிபூரணமாக அனுஷ்டிக்க முயலுகின்றேன். ஏனென்றால், கோபச் சொற்கள் நமது நோக்கத்தின் நிறைவேறுதலுக்கே, நீங்கள் குறிப்பிட்டவாறு, தடையாகி முறிகின்றன. ...
அனந்த சக்தி
தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவே நாம் உயிர்தரிக்கின்றோம். “மாதா இந்த நாட்டு ஜனங்களுக்குச் சக்தி யதிகரிக்கும்படி செய்க; அக் காரியத்தை நிறைவேற்றுதற்குரிய சக்தியை எனக்கருள் புரிக”' என்று நம்மில் ஒவ்வொருவனும் தியானம் புரிய வேண்டும்.
வீரத்தாய்மார்கள்
அந் நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத்தன்மையையும், இந்நாளிலே ஆண்மக்கள் காட்டும் பேடித் தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, “ஆ! நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இத்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக் காட்டிலும் ஒரேயடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாயிருக்குமே” என்று மனம் குமுறுகின்றது.
பஞ்ச கோணக் கோட்டை
‘பஞ்சகோணக் கோட்டை’ என்ற தத்துவார்த்தமான இந்தக் கதை திரு. வ.ரா. புதுவையில் நடத்திவந்த ‘சுதந்திரம்’ என்ற மாதப் பத்திரிகையில் வெளிவந்தது; பிறகு, 1945 செப்டம்பர் 9-ஆம் தேதி இது சென்னை ‘ஹநுமான்’ வாரப் பதிப்பிலும் வெளியாயிற்று. உண்மையில், சமுதாயத்திற்கு அறிவுரை கூற வந்த மகாகவி பாரதியின் அற்புதமான கட்டுரை இது...
ரஸத் திரட்டு
எல்லா மனிதரும் சமமென்ற கொள்கையை ஸமூஹ வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும்வரை மானிடருள்ளே இகல், பொறாமை, வஞ்சனை, போர் முதலிய ஏற்பாடுகள் நீங்க மாட்டாவாதலால் அக்கொள்கையை எப்படியேனும் அனுஷ்டானத்துக்குக் கொணர்ந்து விடவேண்டுமென்று ஐரோப்பிய ஞானிகள் பேராவல் கொண்டிருக்கின்றனர். இந்தியா ராஜாங்க விடுதலை பெற்றுவிடுமானால் தன் அனுஷ்டானத்தாலே உலகத்தாருக்கு இக்கொள்கையின் நலங்களை விளக்கிக் காட்டி உலகமுழுவதும் இதனைப் பரவச் செய்தல் ஸாத்யப்படும்.
பறையரும் பஞ்சமரும்
என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா?
நமது கல்விமுறையில் ஒரு பெருங்குறை
தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்- மகாகவி பாரதி
தீண்டாமை என்னும் பாதகம்
சுதேசமித்திரனில் 1920-களில் மகாகவி பாரதி எழுதிய பதிவு இது... தீண்டாமை ஒழியாமல் தேச விடுதலை வசப்படாது என்ற தெளிவான பார்வையை பாரதி- காந்தி ஆகிய இரு மகான்களிடமும் கண்டு மகிழ்கிறோம்...
தமிழ் வசன நடை
நூறாண்டுகளுக்கு முன்னர், தமிழில் உரைநடை உருவாகிவந்த காலத்தில் அதற்கு இலக்கணம் இயற்றுகிறார் மகாகவி பாரதி. ” “கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி” என்று கூறும் அவர், ”வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக யிருக்க வேண்டும்” என்கிறார். “உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலைநிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ் நடை எழுதும்” என்று நமக்கு வழிகாட்டுகிறார்....
கவிதையின் இலக்கணம்
கவிதையின் இலக்கணம் குறித்த மகாகவி பாரதியின் இந்தக் கட்டுரையில் (சுதேசமித்திரன்) ‘ஹொக்கு’ என்று குறிப்பிடப்படுவது தான் இன்றய ஹைகூ கவிதை.நூறாண்டுகளுக்கு முன்னமே அதனை அறிந்திருந்தார் நமது மகாகவி. பாரதியின் வசன கவிதைகளே தமிழ்ப் புதுக்கவிதைக்குத் தோற்றுவாய். இக்கட்டுரையில் கூறியுள்ள பல அம்சங்களை தனது வசன கவிதைகளில் மகாகவி பாரதி பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.