மகாகவி பாரதியின் நினைவில்- மூன்று பதிவுகள்

இன்று மகாகவி பாரதியின் நினைவுநாள். அவரது நினைவைப் போற்றும் மூன்று பதிவுகள் (ச.சண்முகநாதன், மாலன், வ.மு.முரளி) இங்கே...

எனது பாட்டி

மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது...

பாரதி வழங்கிய படிப்பினை!

1956 செப்டம்பர் 11-இல் சென்னை பாரதி சங்கத்தின் சார்பில் சென்னை, தியாகராயநகர், வாணி மகாலில் நடைபெற்ற பாரதியார் விழாவில் தமிழ்நாடு அரசவைக் கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆற்றிய தலைமை உரை இது...

என் குருநாதர்

மகாகவி பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டு, காயத்ரி மந்திரம் உபதேசம் பெற்ற‌ ஹரிஜன இளைஞர் ரா.கனகலிங்கம், ‘என் குருநாதர்’ என்ற நூலில் எழுதியது இது.

‘சுப்ரமண்ய’ வேதம்

வர்ணம் வேறு ஜாதி முறை வேறு. வர்ணத்தை ஏற்றுக்கொள்ளும் பாரதி ஜாதி முறையை ஏற்க மறுக்கிறார். வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணத்தால் ஏற்படும் பிரிவுகளை அவர் வெறுக்கிறார்.

பாரதியின் பாஞ்சாலி

வியாச முனிவரின் மூலநூலான பாரதத்தை அடியொற்றி, அதன் ஒரு பகுதியான பாஞ்சாலியின் சபதத்தை மகாகவி பாரதி கவிதையில் வடித்துத் தந்திருக்கிறான். இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டது;  எழுபத்து மூன்று தலைப்புகளைக் கொண்டது; முன்னூற்றியெட்டு பாடல்களை உள்ளடக்கியது. பாஞ்சாலியைத் தன் கதையின் நாயகியாக பாரதி தேர்ந்தெடுத்தது ஏன்? அவளை அடிமைப்பட்ட பாரத தேசத்தின் உருவகமாக, பாரத தேவியாக பாவித்ததன் விளைவா? அல்லது அடிமைப் பட்டுக் கிடந்த பெண் இனத்தை விடுவிக்க வந்த எழுச்சிக் குரலா?

பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஒரு விளக்கம்

மகாகவி பாரதியாரின் ‘கண்ணன் பாட்டு’ தொகுதியில் ‘கண்ணம்மா என் குலதெய்வம்’ என்ற தலைப்பில் உள்ளது இந்தப் பாடல் (23-ஆவது பாடல்). 2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாரதி’ திரைப்படத்தில் இளையராஜாவின் சிலிர்ப்பூட்டும் இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீ & இளையராஜாவின் உள்ளத்தைத் தீண்டும் குரல்களின் வழியாக இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகி விட்டது. சரளமான வரிகளுடன் எளிமையாக உள்ள இந்தப் பாடலின் தத்துவ ஆழமும் ஆன்மிக உச்சமும் பிரமிப்பூட்டுபவை. ....

பாரதியின் தவம்

எழுத்துத்தான் பாரதி நமக்காக விட்டுச் சென்றிருக்கும் தவம். வெளியே இருந்து வியக்கும்போது அது நிழல்தரும் மரமாக இருக்கிறது. உள்ளே நுழைந்தாலோ அது நெருப்புக் குழம்பாகத் தகதகக்கிறது. இதுவே பாரதத்தின் அடிநாதம். இதுவே பாரதியின் இயல்பு.

மகாகவியின் மறுபக்கம்

பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி, ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது....

மகாகவி பாரதியின் இறுதி நாட்கள்

பாரதி ஆய்வாளரான ரா.அ.பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து,  ‘சித்திர பாரதி’ என்ற நூலை வெளியிட்டார். 1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்:

மக்கள் கவி பாரதி

தமிழக முன்னாள் முதல்வர் திரு. சி.என்.அண்ணாதுரை, பிற திராவிட அறிஞர்களைப் போல மகாகவி பாரதியை மூடி மறைக்க விரும்பாதவர். பாரதியை தேசியகவி என்று சொல்வதில் அவருக்கு சற்றே சங்கடம் இருந்தாலும், மக்களுக்கான கவிஞர் என்று அவரைக் கொண்டாடினார். இது திரு. அண்ணாதுரை அவர்களின் கட்டுரை.

பாரதியாரும் கோவில் யானையும்

பாரதியியல் ஆய்வாளரும், சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவருமான பேரா. திரு. ய.மணிகண்டன், ‘தினமணி’ நாளிதழில் எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. நன்றியுடன் மீள்பதிவாகிறது...

பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?

பாரதியாரின் தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் “நாத்திகர்” என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் கருத்துக் கூறும் திராவிட இயக்க அறியாமையை.

மகாகவி புதுவைக்குப் போன சூழ்நிலை

 மகாகவி பாரதியின் புகழ் பரப்பிய அமரர் தஞ்சை வெ.கோபாலன்  ‘தினமணி’யில் பத்தாண்டுகளுக்கு முன், பாரதி நினைவுநாளில் எழுதிய கட்டுரை இது. பாரதியின் பிறந்த நாளை ஒட்டி இன்று மீள்பதிவாகிறது…

என் தந்தை

மகாகவி பாரதியின் இளைய மகள் சகுந்தலா. இவரை மகாகவி  ‘பாப்பா’ என்றுதான் அழைப்பார். பாரதியாரின் அன்பு மகள் தன் தந்தையைப் பற்றி  ‘என் தந்தை’ எனும் தலைப்பில் ஒரு நூலை இயற்றி பாரதியார் பற்றிய பல அரிய செய்திகளைக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்து சில சுவையான பகுதிகளை, மகாகவி பாரதியின்  பிறந்த நாளை ஒட்டி, இங்கே காண்போம்.