தளும்பி வழியும் பிற்போக்குத்தனம், தில்லி தற்கொலை தாக்குதல்

பயங்கரவாதமானது, வறுமையின் பிள்ளை அல்ல, அது (மத) நம்பிக்கை பெற்று  வளர்த்த குழந்தை.... மிகவும் படித்த தனி மனிதன் எப்படி மிக தீவிரமான வன்முறையை ஏற்றுக் கொள்கிறான்? எது அந்த நம்பிக்கையை உறுதியாக்கியது? எந்தக் கருத்தியல் சூழல் வன்முறையை நியாயப்படுத்துகிறது, அல்லது வன்முறையை புனிதச் செயலாகக் கருதுகிறது?

ஆங்கிலத்தை அல்ல, மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி கரூர் ஐ.நா. சபை மேனாள் துணை செயலாளர்; காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் . திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். இந்தக் கட்டுரையில், ஆங்கில மொழி ஒரு கருவி. அது நமக்கு தேவை. ஆனால் ஆங்கிலேய உளநிலை தேவையில்லை. ஆங்கில இலக்கியங்களை, மரபுகளைத் தெரிந்து கொள்வதற்கு இணையாக நம் மண் சார்ந்த இலக்கியங்களை, புராணங்களை  நம் தாய்மொழியில் கற்க முடியாவிட்டால் ஆங்கில மொழியிலாவது கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

நீதிபதி பதவி நீக்கம் சாத்தியமா?

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவிநீக்கம் செய்யுமாறு கோரி நாடாளுமன்றத்தில் இண்டி கூட்டணி எம்.பி.க்கள் 107 பேர் அறிவிக்கை அளித்துள்ளது அனைவரும் அறிந்ததே. திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் அநீதியை நிலைநாட்டத் துடிக்கும் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்தவர் என்பதால்தான் திரு. ஜி.ஆர்.எஸ்.ஸை இண்டி கூட்டணி எதிர்க்கிறது. இந்நிலையில் நீதிபதி பதவிநீக்கம் எளிதல்ல என்கிறார் எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ்…

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை

ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைச் சார்ந்த அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறுவது தவறு. ஆனால் நெருடலாக இருக்கிறது என்பதற்காக உண்மையைப் போர்வையிட்டு மறைக்க முடியாது. இந்த இடத்தில்தான் முஸ்லிம் அறிஞர்கள், படித்தவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

என்.ஜி.ஓ.க்களின் பணத்தைப் பின்தொடர்வோம்!

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நிதியுதவி பல பிரச்னைகளுக்கு வித்திடுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. பல்பீர் புன்ச் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் வெளியாகிறது.

ஹிந்து ஒற்றுமையே இஸ்லாமியர்களையும் காக்கும்!

திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையின் பொருளாளர் திரு. சு.சத்தியநாராயணன். தில்லி கார் குண்டுவெடிப்பையும் அதன் பின்புலத்தில் உள்ள ஜிகாதி மனோபாவத்தையும் கண்டிப்பதுடன், இதற்கான தீர்வையும் குறிப்பிட்டுள்ள இவரது அற்புதமான கட்டுரை இது…

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி

அண்மையில் கேரளத்தின் கொச்சியில் இருந்து கர்நாடகத்தின் பெங்களூருக்கு வந்தேபாரத் ரயில் தொடங்கப்பட்டபோது, அந்த ரயிலில் பயணித்த கேரள மாணவிகள் குழு மலையாளத்தில் ஒரு தேசபக்திப் பாடலைப் பாடினர். அது ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பாடல் என்றும், அதை ரயிலில் மாணவிகள் பாடியிருக்கக் கூடாது என்றும், கேரள முதல்வர் பிணராயி விஜயன் கண்டித்திருந்தார். அது என்ன பாடல்? இதோ அப்பாடலின் தமிழ் வடிவம். இந்த அற்புதமான பாடல் தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிணராயிக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரச் சொல் 

‘கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் எழுதிய இக்கட்டுரை ‘தினமலர்’ நாளிதழில் வெளியானது. இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

‘வந்தே மாதரம்’:  தேசபக்தியின் ஆழமான பொருள்

‘வந்தே மாதரம்‘ என்ற இரு சொற்கள், அந்த ஆன்மிக சக்தியின் உயிர்மூச்சு போலத் திகழ்கின்றன. இந்தப் பாடல், இந்திய மக்களின் மனங்களில் சுதந்திரத்தின் விதையை விதைத்த ஒரு பரிசுத்தமான மந்திரம் ஆகும்.... ஈரோட்டைச் சார்ந்த கவிஞர் திரு. அரங்க .சுப்பிரமணியம் (எஸ்.ஆர்.எஸ்.) எழுதியுள்ள கட்டுரை இது...

தராசு முனையில் தர்மம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு, அதன் அகில பாரதத் தலைவர் திரு. மோகன் பாகவத், புதுதில்லி விஞ்ஞான் பவனில் கடந்த ஆக. 26, 27, 28 தேதிகளில் பலதுறை வல்லுநர்கள் முன்பு உரை நிகழ்த்தினார். அதுகுறித்து, எழுத்தாளர் திரு. இந்தோல் சென் குப்தா எழுதியுள்ள கட்டுரை இது...

இன்றைய இந்தியாவுக்கு ஔரங்கசீப் தேவையில்லை!

சில மாதங்களுக்கு முன், ‘ஔரங்கசீப் தற்கால இந்தியாவுக்குப் பொருத்தமானவர் அல்ல’ என்று ஆர்.எஸ்.எஸ். பிரசாரச் செயலாளர் திரு. சுனில் அம்பேக்கர் கூறியதை சர்ச்சையாக்க இடதுசாரிகள் முயன்றனர். அப்போது ‘தி டெலிகிராப்’ பத்திரிகையில் மூத்த இதழாளர் திரு. எம்.ஜே.அக்பர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது... தற்காலத்தின் வழிகாட்டலுக்கு இது போன்ற கட்டுரைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.

இந்தியாவின் ராஜதந்திரச் செயல்பாடுகள் விவேகமானவை!

ஆங்கில எழுத்தாளரும் மும்பையில் உள்ள விஸ்வாமித்திரா ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனருமான திருமதி பிரியம் காந்தி மோடி ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் தமிழில் பதிவாகிறது...

இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம் தான்!

மிக விரைவில் உலகின் 3ஆவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியாவை, ‘இறந்த பொருளாதாரம்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சிப்பதை வயிற்றெரிச்சல் என ஒதுக்கி விடலாம். ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவரை வழிமொழிவதையும், உண்மை எனப் பாராட்டுவதையும்,  என்னவென்று  சொல்ல?

தமிழ் தேசியமும் இந்திய தேசியமும்

‘தமிழ் மொழி நமது மூச்சாகும், பாரதம் எமது உடலாகும், தர்மம் என்றும் உயிராகும்' என்கிற கருத்துக்கள் வழி நின்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் தமிழையும் காத்து நின்று, பாரதத்தின் தலைவர்களாகவும் திகழ்ந்தனர். தமிழ்த் தேசியம் வேறு, இந்து தேசியம் வேறல்ல. இந்து தேசியம் என்பது தமிழ்த் தேசியத்தை உள்ளடக்கியது ஆகும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்து தேசியம் ஆகும்.

ஆபரேஷன் சிந்தூர் – இரு பதிவுகள்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவற்றில் இரு பதிவுகள் இங்கே…