பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பலவிதமான விவாதங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் அபத்தமான புகார்களுக்கு பதில் அளிக்கும் சில முகநூல் கட்டுரைகள் இங்கே நன்றியுடன் மீள்பதிவாகின்றன...
Tag: ஜடாயு
திருக்குறள் குறித்த ஓர் அபத்த வாதம்…
அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படைப் பகுப்பில் ஆரம்பித்து, திருக்குறளின் ஒவ்வொரு உபதேசமும் இந்து தர்மத்தின் சாரம் தான். பரிமேலழகர் தொடங்கி அந்த நூலுக்கு உரையழுதிய பத்துக்கும் மேற்பட்ட சான்றோர்கள் ஒட்டுமொத்த இந்து தர்ம சாஸ்திரத் தொகுதியின் ஒரு அங்கமாகவே அதைக் கண்டனர். திரு. ஜடாயுவின் இனிய கட்டுரை மீள்பதிவாகிறது...
ஹடயோக பிரதீபிகை – தமிழில்
பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த முக்கியமான நூல் இன்றளவும் யோக பயிற்சிகளுக்கான முதன்மையான வழிகாட்டியாக திகழ்கிறது. முனைவர் ம.ஜயராமன் அவர்களின் மொழியாக்கத்தில், தற்காலத் தமிழில், ஹடயோக பிரதீபிகை (2022) என்ற இந்த நூல் அருமையாக வெளிவந்திருக்கிறது.
இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 2
வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்தி வரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடி வருகிறது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் முகநூல் பதிவுகள் தொகுக்கப்பட்டு, நமது தளத்தில் பதிவாகின்றன… இது இரண்டாம் பகுதி…
வேதம் புதுமை செய்த பாரதி- நூல் மதிப்புரை
பாரதி ஆய்வாளர் திரு. ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதிய ‘வேதம் புதுமை செய்த பாரதி’ நூலுக்கான மிகவும் சிறந்த மதிப்புரை இது. ஆய்வாளரின் நுண்மான் நுழைபுலமும், எழுத்தாளர் ஜடாயுவின் தேர்ந்த ரசனை உணர்வும் இதில் வெளிப்படுகின்றன...
தைத்திரீய உபநிஷதமும் புறநானூற்றுப் பாடலும்
அன்னம் குறித்த தைத்திரீய உபநிஷத சுலோகத்தை தமிழாக்கி, அத்துடன் புற நானூற்றுப் பாடல் ஒன்றின் ஒப்புமையை விளக்குகிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு. இது அவரது முகநூல் பதிவு…
ஸ்மார்த்தர் : ஓர் அறிமுகம்
ஸ்மார்த்தர் என்பதைக் குறித்து தமிழ்ச் சூழலில், குறிப்பாக சைவ சமயம் சார்ந்தவர்களிடையில் ஒருவிதமான குழப்பம் நிலவுகிறது. அதனைத் தெளிவுபடுத்தவே இப்பதிவு. ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் திரு. ஜடாயு எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.
ஸ்ரீ ராமாநுஜரும் சமத்துவமும்: நூல் மதிப்புரை
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் எழுதியுள்ள ஸ்ரீராமானுஜரும் சமத்துவமும் (2023) பல விதங்களில் ஒரு முக்கியமான நூல். நூலாசிரியர் சிறந்த கவிஞர், சிந்தனையாளர். தத்துவம், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் ஆழ்ந்து சஞ்சரிப்பவர். இந்தப் புத்தகத்தை எழுதியதற்கான காரணமாக அவர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குரிய விஷயம்.
ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு
அமரர் ரகமி எழுதிய வீரவாஞ்சி நூல் குறித்த திரு. ஜடாயு அவர்களின் அறிமுகக் கட்டுரை இது...
முகநூலில் இரு நூல் பதிவுகள்
‘பொருள் புதிது’ தளத்தின் இனிய விளைவாக வெளியான இரு நூல்கள் குறித்து முகநூலில் அறிமுகம் செய்திருக்கிறார் அன்பு நண்பர் திரு. ஜடாயு. அவருக்கு நமது நன்றி!
பாரத சாவித்ரி
அற்புதமான சமஸ்கிருத சுலோகங்களை தமிழில் பதிவு செய்வதை ஒரு கடமையாகச் செய்து வருபவர் எழுத்தாளர் திரு. ஜடாயு. ‘பாரத சாவித்ரி’ என்ற தலைப்பிலான, மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஐந்து சுலோகங்கள் நாம் அறிய வேண்டியவை...
வாழும் சனாதனம்! – 7
அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன... இது பகுதி-4...
பிராமண வெறுப்பை உமிழும் திருந்தாத திராவிடம்!
தினமலர் (ஈரோடு, சேலம்) நாளிதழில் வெளியான தவறான, கண்டிக்கத்தக்க செய்தி ஒன்றிற்காக, தமிழகத்தின் பூர்வகுடிகளான பிராமண மக்களை நாக்கூசாமல் வசை பாடுகிறது ஒரு கும்பல். பிரிட்டீஷாரால் திணிக்கப்பட்ட ஆரிய- திராவிடக் கோட்பாட்டை இன்னமும் பற்றிக்கொண்டு அரசியல் நடத்துவோரின் எளிய இலக்குகளாக பிராமணர்கள் தாக்கப்படுவதை நம்மால் கண்டும் காணாமல் இருக்க இயலாது.
பாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஒரு விளக்கம்
மகாகவி பாரதியாரின் ‘கண்ணன் பாட்டு’ தொகுதியில் ‘கண்ணம்மா என் குலதெய்வம்’ என்ற தலைப்பில் உள்ளது இந்தப் பாடல் (23-ஆவது பாடல்). 2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாரதி’ திரைப்படத்தில் இளையராஜாவின் சிலிர்ப்பூட்டும் இசையமைப்பில் பாம்பே ஜெயஸ்ரீ & இளையராஜாவின் உள்ளத்தைத் தீண்டும் குரல்களின் வழியாக இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகி விட்டது. சரளமான வரிகளுடன் எளிமையாக உள்ள இந்தப் பாடலின் தத்துவ ஆழமும் ஆன்மிக உச்சமும் பிரமிப்பூட்டுபவை. ....
பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?
பாரதியாரின் தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் “நாத்திகர்” என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் கருத்துக் கூறும் திராவிட இயக்க அறியாமையை.