தன்னையே தண்டித்த தகைமையாளன்

அறிந்தே பல அரசியல் பிழைகளைச் செய்து, அவையெல்லாம் நியாயமே என்று சாதித்து, அதனை எதிர்த்துக் கேட்பவர்களின் உயிரைப் போக்கும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில், அறியாமல் செய்த அரசியல் பிழையை அறிந்ததுமே உயிர் துறந்த பாண்டியன் போற்றுதலுக்கு உரியவன் அல்லவா?

மூவர் முலையும் மூவாத் தமிழும்

தன் அரசனான கம்சனைக் கொல்லப் பிறந்தவன் கண்ணன் என்பதால் அவன் மீது கோபம் கொண்டவள் பூதனை. அதனால் கண்ணனைக் கொல்ல வேண்டும் என்ற வஞ்சனையை தன் உள்ளமெல்லாம் கொண்டவள். உடலெல்லாம் விஷத்தைப் பூசிக்கொண்டு, அழகிய தாயாக வடிவம் கொண்டு கோகுலம் வந்தாள். கண்ணனை அழைத்து முலையூட்டினாள். அவனும் பால் அருந்துவது போல் அவள் உயிரை உறிஞ்சி விட்டான்.

இருமையின் இறைவன்

இன்பமும் துன்பமும் இறைவன் தருவது. அவனது நினைவே அமைதி அளிக்கிறது. திருவாய்மொழியில் நம்மாழ்வார் கூறுவதும் இது தானே?

ஒருவன் வாளி

தியாகராஜர் “ஒக்க மாடமு ஒக்க பாணமு, ஓக்க பத்தினி வ்ரதுடே” என்ற ஹரி காம்போஜி  ராக கீர்த்தனையை அழகாக கம்பீரமாக பாடியிருக்கிறார். “ஒரு சொல், ஒரு வில், ஒரு பத்தினி என்ற கொள்கை கொண்டவன் ராமன், அவனை மறவாதே என்று”...

அன்பே தளிகையாய்…

தமிழை உருகி உருகிக் காதலிக்கிறார்கள் வைஷ்ணவர்கள். பொதுவாக தமிழை உயிர்ப்புடன் வைத்திருப்பது பக்தி இலக்கியங்களே என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம்.... எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதனின் அனுபவக் கட்டுரை...

நீர் இடு துகிலர்

துக்கத்தையும் ரசிக்க வைப்பது இலக்கியம். நாம் அசூயையாக நினைக்கும் ஒன்றையும் நகைச்சுவையாக மாற்றுவதும் இலக்கியம் தான். இதோ எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் அவர்களின் கம்ப ராமாயணக் கைவண்ணம்...

ஊடலின் உச்சத்தில்…

பழந்தமிழ் இலக்கியத்தின் பாடல்களை இளம் தலைமுறைக்குச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி சமகாலக் காட்சிகளுடன் விளக்கியாக வேண்டி இருக்கிறது. இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட தொழில் துறையில் பணிபுரிந்தாலும், மனதைப் பண்படுத்தும் இலக்கியத்தை மென்மையாக எடுத்துச் சொல்கிறார், எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன். இதோ அவரது குறுந்தொகை பற்றிய குறுங்கட்டுரை...

கபட கேஸரி

எந்த வகையிலும் தனக்கு மரணம் நேரக் கூடாதென்று, கடுந்தவமிருந்து கபடமாக வரம் வாங்கிவந்த அசுர வேந்தன் இரணியனை, அதே கபட வேடம் கொண்டு சம்ஹரித்தார் நரசிம்மர். இதனை வேதாந்த தேசிகரின் ‘காமாஸிகாஷ்டகம்’ சுலோகங்களைக் கொண்டு இங்கே விவரிக்கிறார் திருநின்றவூர் ரவிகுமார்...

அக்காரக்கனியும் அமரகவியும்

கவிச் சக்கரவர்த்தி கம்பர் தமிழில் இராமாவதாரம் இயற்றினாலும், அதில் பல புதுமைகளைப் புகுத்தி இருந்தாலும், அது புதிய நூல் அல்ல. தான் இதை இயற்றுவதற்கு முன்னால் - மகரிஷி வால்மீகி, வசிஷ்ட மாமுனி, போதாயணர் என்ற - மூவர் வடமொழியில் ராம காவியத்தை இயற்றியுள்ளனர்; அவர்களுள் முன்னவரான வான்மீகி மகரிஷியின் நூலை ஒட்டியே தாம் இதை இயற்றியதாகக் கூறுகிறார்.மகரிஷி வால்மீகியைப் பின்பற்றியதாக மேலே கூறியவர் வால்மீகி ராமாயணத்தில் இல்லாத இரணியன் கதையைப் புகுத்திய புதுமை ஏன் என்பதை இங்கே காண்போம்.

தோற் செருப்பு ஆர்த்த பேர் அடியன்

சனாதனத்தை ஒழிப்போம் என்று, அர்த்தம் புரியாமல் தமிழகத்தில் சிலர் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சனாதனம் என்பதன் உட்பொருளை வாழ்ந்து காட்டியவன் ஸ்ரீராமன். இதோ கம்பன் காட்டும் ராமகாதை...

காசில் கொற்றத்து ராமன்

தமிழ் இலக்கியத்தின் பொன்முடி கம்ப ராமாயணம். வால்மீகி ரமாயணத்தை முதல்நூலாகக் கொண்டு தமிழில் கம்பர் (பொ.யு. 1180- 1250) இயற்றிய ’ராமாவதாரம்’ தனது இலக்கிய வன்மையால் கம்ப ராமாயணம் என்று சிறப்புப் பெயர் பெற்றுவிட்டது. பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 113 படலங்களையும், 10569 பாடல்களையும் கொண்ட அற்புதமான இலக்கியம் இது. இந்நூலில் தேர்ந்த திரு. ச.சண்முகநாதன் எழுதியுள்ள இனிய கட்டுரை இது...

சங்க காலம் (எதிர்) சாராய காலம்

சங்கத் தமிழ்க் கவிதைகளை தற்கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி சிந்தனையைத் தூண்டுவதில் எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் சிறப்பிடம் வகிக்கிறார். தமிழறிஞர்கள் செய்ய வேண்டிய அரும்பணி இது...

கவியரசரின் தைப்பாவை

கவியரசருக்கு சமய இலக்கியங்களில் இருந்த திளைப்பு அவருக்குள் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்ததன் விளைவாக, திருப்பாவை,  திருவெம்பாவை ஆகியவற்றை அடியொற்றி அவர் படைத்ததே  தைப்பாவை. சங்க இலக்கிய சாரத்தையும் சமய இலக்கிய உத்தியையும் ஒருசேர  வெளிப்படுத்தும் தைப்பாவை, கவியரசு கண்ணதாசனின் முத்திரைப்  படைப்புகளில் முக்கியமானது.

மராமரப்  படலம்

பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு. ச.சண்முகநாதன், கம்ப ராமாயணத்தில் தன் மனதைப் பறிகொடுத்தவர்; தனது எழுத்துகளால் நம்மை வசீகரிப்பவர். இதோ அவரது இனிய கட்டுரை....

கம்பன் பாடிய ‘குறள்’

பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப நிபுணரான திரு. ஜடாயு, இலக்கிய ஆர்வலர்; ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்; கம்பனில் தோய்ந்தவர். வாமனாவதாரம் குறித்த கம்ப ராமாயணச் செய்யுள்களை விளக்கி, தமிழ் ஹிந்து இணையதளத்தில் இவர் எழுதிய அற்புதமான ஆய்வுக் கட்டுரை இங்கே...