நாத்திகப் பிரசாரம் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் (1950களில்) தமிழகத்தின் பாரம்பரியம் காக்க, திரு.ம.பொ.சிவஞான கிராமணியார், தனது எழுத்தாற்றலை ஆயுதமாக்கிப் போராடினர். அவரது எழுத்தாற்றலின் சீரிய திறனுக்கு 'இலக்கியத்தின் எதிரிகள்’ என்ற இந்த நூல் ஓர் உதாரணம். ‘தமிழ் முரசு’ இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் இவை.
சந்திரிகையின் கதை – பாரதி
மகாகவி பாரதியின் இறுதிப் படைப்பு ‘சந்திரிகையின் கதை’. ஆனால், இது முற்றுப்பெறுவதற்கு முன்னமே, பாரதியின் வாழ்வு முற்று பெற்றுவிட்டது. அதன் காரணமாக, தமிழ் மொழி ஓர் அற்புதமான இலக்கியத்தை இழந்துவிட்டது. சுதேசமித்திரன் வார இதழில் தொடராக வந்த இந்தப் புதினம், அவரது அகால மறைவால் முற்றுப் பெறாமல் போய்விட்டது. எனினும், மகாகவி பாரதியின் பன்முக தரிசனத்துக்கு அவரது முற்றுப் பெறாத இந்த இறுதிப் படைப்பு ஒளிவீசும் மகுடமாகத் திகழ்கிறது. தனது தத்துவ விசார நாட்டம், நையாண்டி செய்யும் நளினம், நகைச்சுவை உணர்வு, இலக்கியப் பரிச்சயம், மனிதநேய சிந்தனைகள் ஆகியவற்றின் கதம்பமாக இதனைப் படைத்திருக்கிறார் பாரதி.
அகமே புறம் – வ.உ.சி.
ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலனின் ‘Out from the heart’ என்ற சுய முன்னேற்ற நூலை, சுதேசி நாயகரும் சுதந்திரப் போராட்ட வீரருமான வ.உ.சி. ‘அகமே புறம்’ என்று 1916-ல் மொழிபெயர்த்தார். தமிழின் சுய முன்னேற்ற நூல்களில் இதுவே முன்னோடி. அந்த மொழியாக்கமே இங்கு 10 அத்தியாயங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது…
சிகாகோ பேருரைகள்- விவேகானந்தர்
அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893 செப்டம்பர் 11- 27 இல் நடைபெற்ற உலக சர்வ சமயப் பேரவை மாநாட்டில், ஆறு நாட்களில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகள் உலகப் புகழ் பெற்றவை. உலக அரங்கில் பாரதத்தின் பெருமையையும் ஹிந்து மதத்தின் சிறப்பையும் நிலைநாட்டியவை. அந்த உரைகள் இங்கே...
வாழ்க தமிழ் மொழி! – பாரதி
தமிழ்மொழி குறித்த மகாகவி பாரதியின் பெருமிதப் பாடல்கள் இவை. மகாகவி பாரதியின் கவிதைகளில், தேசபக்திப் பாடல்கள் தொகுப்பில், தமிழ்நாடு என்ற இரண்டாம் பகுப்பில் அடங்கியுள்ள 6 தமிழ் மொழி வாழ்த்துப் பாடல்கள் மட்டும் இங்கே தனித்து வழங்கப்பட்டுள்ளன....
இனிய அறிவிப்பு
உலகெலாம் பதிப்பகத்தின் மையத் தளமாக ‘பொருள் புதிது’ என்ற இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. தமிழில் நல்ல நூல்களை வெளியிட வேண்டும் என்ற இலக்குடன் திருப்பூரில் துவங்கப்பட்டுள்ள இப்பதிப்பகத்தின் தகவல்கள், செய்திகள், நூலாக வெளியாக உள்ள கட்டுரைகள், கவிதைகள், தமிழர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் விவரங்கள் உள்ளிட்டவை இத்தளத்தில் வெளியாகும்... ’சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற மகாகவி பாரதியின் ஆணையே எம்மை வழிநடத்தும் பெருமுழக்கம்.