மனிதன் தன்னைப் பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பது அவரது யோக நெறியின் முதல் படி. பக்தி, கர்ம, ஞான யோகம் என்கின்ற வழக்கமான யோக மார்க்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படும் இதைப் பற்றி, “எனது யோக நெறியில் குறுக்கு வழி இல்லை. ஆரம்ப நிலைகளைத் தவிர்த்து விட்டு கடைசியில் படியில் தாவி ஏற முடியாது. அது ஆபத்தானதும் கூட” என்று ஸ்ரீ அரவிந்தர் தனது ஒருங்கிணைந்த யோகத்தைப் பற்றி கூறியுள்ளார்.
Category: தொடர்
புதுவையில் பூத்த யோக மலர்- 12
“ஸ்ரீ கிருஷ்ணர் உடலில் இறங்கிய நாளிது. கிருஷ்ணரின் வருகை மீ - மனத்தின் இறக்கம். (அதிமனம் = சூப்பர் மைண்ட். மீ - மனம் = ஓவர் மைண்ட்) . இந்த மீ -மனம் அதிமனம் மற்றும் ஆனந்தத்திற்கு பாதை அமைக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஆனந்த மயமானவர். மீ மனத்தைக் கொண்டு அதிமனத்திற்கு அழைத்துச் செல்வார்” என்று ஸ்ரீ அரவிந்தர் ஸித்தி தினத்தைப் பற்றி எழுதியுள்ளார்....
புதுவையில் பூத்த யோக மலர்- 11
இந்தியா சுதந்திரம் பெற வேண்டும். அது அவளுக்காக, அவளது ஆன்மா விழிப்புக்காகப் பெற வேண்டும். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதை விடவும் மிக பரந்த நோக்கம் விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமாக இருக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசையும் அதன் செயல்பாடுகளையும் பார்ப்பதாகவே நம் கண்ணோட்டம் இருக்கிறது. நாம் நம்முடைய சொந்த தேசியத்தைக் கண்டடைய வேண்டும். அதை சுதந்திரம் பெறச் செய்ய வேண்டும்....
புதுவையில் பூத்த யோக மலர்- 10
நான் ஏன் அரசியலை விட்டு விலகினேன்? ஏனெனில் நம்முடைய அரசியல் உண்மையில் இந்தியத் தன்மையுடன் இல்லை. இது ஐரோப்பிய இறக்குமதி. ஐரோப்பிய வழிமுறைகளை போலி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் தேவை. நீயும் நானும் ஐரோப்பிய பாணி அரசியலில் தான் ஈடுபட்டிருந்தோம். நாம் அதைச் செய்யாவிட்டால் தேசம் எழுந்திருந்திருக்காது; வளர்ச்சி வந்திருக்காது. இன்னமும் அது தேவைப்படுகிறது, குறிப்பாக வங்காளத்தில். ஆனால் நிழலை விட்டு விட்டு சாரத்தைப் பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது....
புதுவையில் பூத்த யோக மலர்- 9
‘ஆர்யா’ தொடங்கப்பட்ட நேரமும் முதல் உலகப்போர் தொடங்கிய நேரமும் ஏறத்தாழ ஒரே நேரத்தில். இதை எதிர்பாராத நிகழ்வாகக் கருத முடியாது. உணர்வு தளத்தில் அழிவு சக்தியான போருக்கு எதிராக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஆன்மிக சக்தியின் பிரதிநிதியாக ‘ஆர்யா’ வெளிப்பட்டது.
புதுவையில் பூத்த யோக மலர்- 8
ஆச்சாரவாதிகள் எழுப்பியுள்ள புகை மூட்டத்தில் வேத உண்மைகள் மறைந்து விட்டன. புத்திசாலிகள் அந்த புகை மூட்டத்தில் உண்மையைத் தேடி மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளனர். யோக சாதனைகள் மூலம் அரவிந்தர் அந்த வேதக் கருத்துக்களைக் கண்டெடுத்து, புதிய கண்ணோட்டத்தில் - உண்மையில் அதுதான் சரியான கண்ணோட்டம் - வெளிப்படுத்த முனைந்தார்.
புதுவையில் பூத்த யோக மலர்- 7
“ஆர்யா என்ற சொல் இனத்தைக் குறிப்பது அல்ல; பண்பாட்டைக் குறிப்பதாகும். ஓர் உயர்ந்த லட்சியத்தை, வாழ்வியல் நோக்கத்தை மேற்கொண்டு அதை அடைய, அக, புற வாழ்க்கையில் சில பயிற்சிகளை, பழக்கங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருபவனே ஆரியன். சுய ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் கொண்டவன். சுருக்கமாகச் சொன்னால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் அக, புற தடைகளை மீறி மேலெழுந்து வருபவன். தன்னை வெல்வதே அவனது முதல் பணி” என்று அரவிந்தர் அந்தச் சொல்லை விளக்கி உள்ளார்.
புதுவையில் பூத்த யோக மலர்- 6
தனித்தனியாக ஓடிக் கொண்டிருந்த அலக்நந்தாவும் மந்தாகினியும் ருத்ரப் பிரயாகையில் ஒன்றாக இணைந்து கங்கையாக அகன்று பிரவகிப்பது போல, அரவிந்தரும் மிர்ரா அல்பாசாவும் இணைந்து யோக சாதனை கங்கையாக உருவெடுத்தார்கள். அரவிந்தரின் வாழ்க்கையைப் போலவே அன்னையின் வாழ்க்கையும் யாவருக்கும் தெரியும்படி மேம்போக்கான வாழ்க்கையாக இல்லை. அரவிந்தரைப் போலவே அவரது வாழ்க்கையும் ஆழமும் அகவுலகம் சார்ந்ததாகவும் இருந்தது. அதுபற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
புதுவையில் பூத்த யோக மலர்- 5
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-5...
புதுவையில் பூத்த யோகமலர்- 4
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-4...
புதுவையில் பூத்த யோகமலர் – 3
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-3...
புதுவையில் பூத்த யோக மலர் – 2
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-2...
புதுவையில் பூத்த யோகமலர் – 1
மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார்.
திருப்பரங்குன்றம்: வெற்றி வரலாறு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. அதனை எதிர்த்து மாநில அரசு செய்த மேல் முறையீட்டையும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. எனவே திருப்பரங்குன்றம் மலையுச்சியில் கார்த்திகை தீபத்தை இன்று கோயில் நிர்வாகம் ஏற்றியாக வேண்டும். இந்து மக்களின் தொடர் போராட்டம் வெல்லும் இந்த இனிய தருணத்தில், இதுதொடர்பாக நமது தளத்தில் வெளியான முருக பக்தர்கள் மாநாடு, நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த பிற பதிவுகளையும், திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலையும் இங்கே தொகுத்துள்ளோம்.
ஈசனான எந்தை – 7
பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-6 (இறுதிப் பகுதி)