சற்குருவை துதி மனமே – 2 

அதிவீரராம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பனையூர் சொக்கநாதர் கோயிலுக்கு நேர் எதிரே உள்ள சற்குரு நாதர்களின் ஒடுக்கம் ஆலயத்தில் அருள் பாலிக்கும் இரு மகான்களைப் பற்றி இக்கட்டுரையில் கூறுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்….

அமெரிக்க இந்திய வர்த்தகக் கூட்டறிக்கை: குற்றச்சாட்டுகளும் உண்மைகளும்

அமெரிக்க- இந்திய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறது திரு. வ.மு.முரளியின் இக்கட்டுரை....

…..அடுத்தவனுடையது தோழா!

நுகர்வுக் கலாச்சாரத்தால் தத்தளிக்கும் இன்றைய தலைமுறைக்கு ஓர் இதமான அறிவுரை கூறும் கட்டுரை இது. தேசிய சிந்தனைப் பேரவையின் சேலம் அமைப்பாளர்  முரளி சீதாராமன் எழுதியுள்ள இக்கட்டுரை, அவருக்கே உரிய அங்கதத்துடன் நிறைவு பெறுகிறது. படியுங்கள்.... மலரும் நினைவுகளில் திளையுங்கள்....

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: தன்னம்பிக்கையின் வெற்றி!

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்திய- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற உள்ளதாக, கடந்த 2026 பிப். 2ஆம் தேதி அமெரிக்கா அறிவித்திருக்கிறது. மிக விரைவில் இந்த ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக கையெழுத்தாக உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் பயன்கள் இப்போதே கிடைக்கத் தொடங்கிவிட்டன. இந்த ஒப்பந்தம் உருவானதன் பின்புலத்தில், அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் நிதானம் காத்த இந்தியாவின் ராஜதந்திர வியூகமும், பண்பட்ட அணுகுமுறைகளும், பொறுமையான செயல்பாடுகளும் காரணமாக இருந்துள்ளன.

இந்துக்களும் முஸ்லிம்களும் ஏன் அமைதியாக வாழ முடியவில்லை?

இஸ்லாத்தின் பெயரால் ஏன் இந்த அர்த்தமற்ற வன்முறைகள் நடக்கின்றன? இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் ஏன் மீண்டும் மீண்டும் இந்தியாவைத் தாக்கி, சோமநாதர் கோயில் உட்பட அதன் பிரம்மாண்டமான கோயில்களைத் தகர்த்து தூளாக்கினார்கள்? இவை எல்லாம் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காகத்தான் என்றும், இதில் மதக்கண்ணோட்டம் இல்லை என்றும், இடதுசாரி வரலாற்றாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

கசாப்புக் கடைக்காரனின் மனைவி

சில சமயம், எழுத்தே ஆயுதமாக மாறும் அபாயத்தைக் கண்டிருக்கிறீர்களா? அது அபாயம் தானா? அல்லது, எழுத்தை ஆயுதமாக்கியவரின் மனக்குமுறலா? காந்தியத்தை நாற்சந்தியில் நிறுத்தி தர்க்கரீதியான கேள்வி எழுப்புகிறார் திரு. பி.ஆர்.மகாதேவன்... படியுங்கள், வரலாற்றை நினைவுகூருங்கள்!

மத்திய அரசின் நலத்திட்டங்களால் தரம் உயரும் நடுத்தர வர்க்கம்!

மத்தியில் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பொருளாதாரத்தில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்து வந்துள்ளது. குறிப்பாக இதுவரை இருந்த அரசுகள் போல கவர்ச்சிகரமான மானியங்களில் கவனம் செலுத்தாமல், மக்கள் பயன் பெறும் வகையிலான அடிப்படைச் சீர்திருத்தங்களில் தான் அதிகமான கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஆண்டு செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் உச்சமானவை. வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பை உயர்த்தியதன் மூலமாக, வரிவிதிப்பு வலைக்குள் இருந்த பலகோடி நடுத்தர மக்கள் வெளிவந்தார்கள். அதன்மூலமாக, அவர்களின் சுகாதார, வீட்டுவசதி உள்ளிட்ட இதரச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

வஜ்ராயுதமும் பாசுபதாஸ்திரமும்

‘பொருள் புதிது’ தள ஆசிரியர் குழு உறுப்பினர்களுள் ஒருவரான திரு. கருவாபுரிச் சிறுவன், செண்பகவல்லி அணைக் கால்வாய் சீரமைப்பு குறித்து இத்தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். விரைவில் நடைபெறவுள்ள சட்ட்சபைத் தேர்தலில் இந்தக் கோரிக்கை பிரதான இடம் பெறுவது விவசாயிகளின் கனவை நனவாக்கும். இக்கட்டுரை, செண்பகவல்லி அணை கட்டுரைத் தொடரின் இறுதிப் பகுதி....

இந்தியக் குடியரசில் மக்கள்நல நிர்வாகத்திற்கே முதன்மை!

குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் எழுதிய இக்கட்டுரை பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அக்கட்டுரை இங்கே…

மூலப்பத்திரத்தின் மூலம்!

ஒரு குறிப்பிட்ட நிலம் பஞ்சமி நிலமா என்பதை வருவாய்த் துறை ஆவணங்கள் மூலம் கண்டறியலாம். பொதுவாகவே மூலம் என்பது இருவகைப்படும். ஒன்று உள்மூலம், இன்னொன்று வெளிமூலம். ஆனால், ஏ ரிஜிஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள. டி.சி. என்பதைத் தவிர, பஞ்சமி நிலங்களுக்கு எந்த மூலமும் இல்லை.

டிரம்ப் செய்தது குற்றம் தான்… ஆனால்…..

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசூலா அதிபரை சட்டவிரோதமாக கைது செய்தது இப்போது உலக தலைப்புச் செய்திகளில் மறைந்துவிட்டது. அமெரிக்காவின் ஆணவப் போக்கை உலகம் விரும்பாமல் இருந்தாலும் அமைதி காக்கிறது. அதன் காரணம் என்ன என்று அலசுகிறார், தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேசனின் தலைவர் திரு. ராம் மாதவ்…

நேதாஜி (கவிதை)

நேதாஜி பிறந்த நாள் கவிதை இது...

கம்யூனிஸ்டுகளால் கைவிடப்பட்ட கம்யூனிசம்

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் ஏன் கரைந்து வருகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை,  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில், பாஜகவின் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் ராகேஷ் சின்ஹா தனது கட்டுரையில் அளித்துள்ளார். இதோ அக்கட்டுரை…

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா

பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி அவர்கள், இந்தியப் பொருளாதாரம் வேகநடையிட்டு வருவதை இக்கட்டுரையில் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி இருக்கிறார்…

பொங்கலை மடை மாற்றாதீர்கள் துரோகிகளே!

உண்மையில் பெரும்பாலானவர்கள் கொண்டாடும் போது நாம் தனித்துவிடப்படும் வெறுமையை சோகத்தைப் போக்கிக் கொள்ள இந்து விரோத அரசியல் சக்திகள் உருவாக்கியிருக்கும் விபரீத விழாக்கள் தான்  ‘திராவிட’ பொங்கல், சமத்துவ’ பொங்கல், ஜல்லிக்கட்டு கேளிக்கை’ போன்றவையெல்லாம்.