திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுரைப்படுத்தாமல் மீறிய தமிழக அரசு அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செவ்வாய், புதன் கிழமைகளில் இரு திருப்பங்களைச் சந்தித்தது. செவ்வாய்க்கிழமை அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், புதன்கிழமை இவ்வழக்கு தனிநீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை என்று கூறிய நீதிபதி, வழக்கை தொடர்ந்து விசாரித்ததுட்டன் ஏப்ரல் 9ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
Day: March 19, 2026
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: குவியும் கண்டனங்கள்-4
திரைப்பாடலாசிரியரும் திராவிட மாடல் அரசின் ஆஸ்தான வித்வானுமான கவிஞர் வைரமுத்து இந்த ஆண்டுக்கான ஞானபீட விருதாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை உண்மையான தமிழ் ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர். அவற்றில் சில முகநூல் பதிவுகள் இங்கே… (தொகுப்பு- 4)