ராமன் ஹனுமனை நோக்கி, நெகிழ்ச்சியுடன், “உதவி செய்வதில் உனக்கு நிகர் யாருளர்? நீ எனக்குச் செய்த உதவிக்கு என்னால் எதுவும் ஈடு கொடுக்க முடியாது. என்னை ஆரத் தழுவிக்கொள்” என்று அந்த கருணைமாக் கடவுளும், தான் ஹனுமனுக்கு, கடன்பட்டதாய்ச் சொல்கிறான்.
Month: January 2024
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 2ஆ
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது இரண்டாம் பகுதியின் தொடர்ச்சி...
அயோத்தியாயணம்-4
கோயிலைக் காப்பதற்காக உயிரையும் கொடுத்த மன்னர்கள் பிறந்த நாடு பாரத நாடு. அதே வழியில், இன்று ஒரு கோயிலுக்கே உயிர் கொடுக்கும் மன்னன் ஆளுகின்ற நேரம் இது.
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 2அ
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது இரண்டாம் பகுதி...
அயோத்தியாயணம்-3
அங்கே அறம் பெரிது, தர்மம் பெரிது. பாசம் பெரிது, வீரம் பெரிது. அயோத்தியாவில் மதில்களும் பெரிது. அயோத்தியின் புகழ் பெரிது. அயோத்தியாவைச் சுற்றியுள்ள மதில், மலைகளைப் போல வலிமையாய், நகர மாந்தரைக் காக்கும் காவல் தெய்வமாய் இருந்தது; காத்து வந்தது.
ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 1
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன...
அயோத்தியாயணம்-2
ஸ்ரீமன் நாராயணன் அயோத்யாவைத் தேர்தெடுத்தான், அவதாரம் புரிய. அயோத்தியா போல தேவலோகத்திலும் ஒரு நகர் இல்லை “இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?”
அன்பைப் பொழிந்த ஆசிரியர்!
விஜயபாரதம் முன்னாள் ஆசிரியரும், ‘பொருள்புதிது’ இணையதளத்தின் தொடர்ந்த வாசகராக இருந்தவருமான அமரர் திரு. சுந்தர.ஜோதி அவர்கள் காலமாகி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. அவரைக் குறித்து, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி தனது தளத்தில் எழுதி இருக்கும் கட்டுரை இங்கு நினைவஞ்சலியாகப் பதிவாகிறது...
அயோத்தியாயணம்-1
“நிலமகளின் விலாசம் அயோத்தியோ” என்று ஆரம்பத்திலேயே அயோத்தியின் பெருமையை வானில் வைக்கிறான் கம்பன். பூமியின் திலகமோ? பூமியின் கண்ணோ? மங்கல சூத்திரமோ? நிலமகளின் மார்பில் அணிந்த இரத்தின மாலையோ? நிலமகளின் உயிரின் இருக்கையோ? லட்சுமி வசிக்கும் தாமரையோ? திருமால் மார்பில் அணிந்த ஆபரணங்கள் வைக்கப்பட்ட பெட்டியோ? தேவலோகத்திற்கும் மேலான இடமோ? இல்லை ஊழிக்காலத்தில் எல்லாமும் தங்கும் திருமாலின் வயிறோ?”
தன்னையே தண்டித்த தகைமையாளன்
அறிந்தே பல அரசியல் பிழைகளைச் செய்து, அவையெல்லாம் நியாயமே என்று சாதித்து, அதனை எதிர்த்துக் கேட்பவர்களின் உயிரைப் போக்கும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில், அறியாமல் செய்த அரசியல் பிழையை அறிந்ததுமே உயிர் துறந்த பாண்டியன் போற்றுதலுக்கு உரியவன் அல்லவா?
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 1
இதற்கு முந்தைய குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் குடியுரிமையின் வேறு பல சிக்கலான பரிணாமங்களை அணுகின. ஆயினும், நாட்டில் இதுவரை முழுமையாக குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் அகதிகளை என்ன செய்வது என்பதில் தெளிவான திசை காட்டப்படவில்லை. அந்தக் குறைபாட்டைப் போக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால் உருவானதே குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019.
குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்
விதமாக, எழுத்தாளர் திரு. சேக்கிழான் எழுதிய நூல், ‘குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்’ . இந்நூலின் பகுதிகள் இங்கே தொடராக வெளியாகின்றன...
இருக்கு ஆனா இல்லை
நாம் ஆன்மா, அதனைப் போர்த்தியிருக்கும் ஆடைதான் உடல் என்பதை உணர்வதுதான் ஞானம். இந்த ஆன்மா ‘ஏக இறைவனின் பிரதிபிம்பம்’ என்பதை அறிந்துகொள்வதுதான் பரிபூரண ஞானம்.
வாட்ராப்பும் வைத்தமாநிதியும்- 2
சரி பீடிகை போதும்… தலைப்பின் பொருளுக்கு (subject matter) வருவோம். ஆங்கிலேயனுக்கு வாட்ராப் watrap - உள்ளூருக்கு வத்திராப்பு - கற்றவனுக்கு வற்றாயிருப்பு. இப்படியாக ஒரு ஊருக்கு பல பெயர்கள் சொல் வழக்காக இருக்கலாம். பொருள் புரிந்து கொள்வோம். வாருங்கள்.
மூவர் முலையும் மூவாத் தமிழும்
தன் அரசனான கம்சனைக் கொல்லப் பிறந்தவன் கண்ணன் என்பதால் அவன் மீது கோபம் கொண்டவள் பூதனை. அதனால் கண்ணனைக் கொல்ல வேண்டும் என்ற வஞ்சனையை தன் உள்ளமெல்லாம் கொண்டவள். உடலெல்லாம் விஷத்தைப் பூசிக்கொண்டு, அழகிய தாயாக வடிவம் கொண்டு கோகுலம் வந்தாள். கண்ணனை அழைத்து முலையூட்டினாள். அவனும் பால் அருந்துவது போல் அவள் உயிரை உறிஞ்சி விட்டான்.