அந் நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத்தன்மையையும், இந்நாளிலே ஆண்மக்கள் காட்டும் பேடித் தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, “ஆ! நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இத்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக் காட்டிலும் ஒரேயடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாயிருக்குமே” என்று மனம் குமுறுகின்றது.
Tag: மகாகவி பாரதி
காவடிச்சிந்து
மகாகவி பாரதியின் காலத்தில் காவடிச்சிந்து மிகவும் போற்றப்பட்டது. எட்டயபுரம் அரண்மனையில் பாரதி பணியில் இருந்தபோது காவடிச்சிந்து பாட முடியுமா? என்ற புலவர்கள் கேட்க, பாரதியும் காவடிச்சிந்து மெட்டில் பாடலொன்று பாடியுள்ளார். அப்பாடலின் ஒரு கண்ணி மட்டுமே கிடைத்துள்ளது. இதோ அப்பாடல்…
பிரெஞ்சு தேசீய கீதம்
மகாகவி பாரதி தமிழில் குழந்தைகளுக்காக மொழிபெயர்த்துக் கொடுத்த பிரெஞ்சு தேசிய கீதத்தின் சில வரிகள் இவை...
அமெரிக்கப் பெண்ணின் ஆங்கிலக் கவிதையை தமிழில் தந்த மகாகவி
இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் செயல்பட்ட மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற பெண்மணியின் ஆங்கிலக் கவிதையை ‘இந்தியாவின் அழைப்பு’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார் மகாகவி பாரதி. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதுவே மகாகவியின் கடைசிக் கவிதையாக இருக்கலாம் என்பது தான்....
The ‘Ahana’ of Shri Aurobindo Ghose (Book Review)
மகாகவி பாரதி எழுதிய நூல் மதிப்புரை இது. The Commonweal (16.07.1915) பத்திரிகையில் C.S.Bharathi என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த மதிப்புரை, மகரிஷி அரவிந்தரின் ‘அஹானா’ என்ற நூல் குறித்தது.
குழந்தைக் கதை (எ) நித்திய கல்யாணி
கதை, கவிதை, கட்டுரை எதை எழுதினாலும், அதில் வாசகரின் அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், தேசிய சிந்தனையைச் சிறிதேனும் ஊட்டிவிட வேண்டுமென்ற தாகமும் கொண்டு இயங்கியவர் மகாகவி பாரதி. ஒரு சிறு குழந்தையுடனான கதாசிரியரின் வேடிக்கையான விளையாட்டு பதிவாகியுள்ள இக்கதையிலும் கூட, கர்ஸன் பிரபுவை கதையின் இறுதியில் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார் பாரதி…
ஆறில் ஒரு பங்கு – பாரதி
‘ஆறிலொரு பங்கு’ என்பது பாரதத்தின் ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கு கொண்ட ஹரிஜனங்கள், ஆதிதிராவிடர்கள். அதாவது பாரதி கணக்கிட்ட முப்பது கோடி மக்களின் ஐந்து கோடி மக்கள் தீண்டாத வகுப்பினர்களைக் குறிப்பது. அவர்களை இருபத்தைந்து கோடி மேல் வகுப்பினர் பாரதத்தின் பொது வாழ்விலிருந்து விலக்கி வைத்து, அவர்களை பிரஷ்டர்களாகக் கருதி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு சமூக மகா பாபத்தைக் குறிப்பதுதான் இந்தத் தலைப்பு. அவர்களை உயர்த்தும் பணியில், ஒரு மகத்தான நிமித்தத்துக்கு, சமூக சேவைக்கு இக்கதையின் நாயகன் - நாயகி இருவரும் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்... மகாகவி பாரதியின் அற்புதமான சமூக, தேசிய சிந்தனைக்கு இக்கதை உதாரணம்...
கதவு
அன்பே வழி என்ற கருத்துடைய ‘கதவு’ என்ற இக்கதை 1917-ஆம் ஆண்டு டிஸம்பர் 12-ஆம் தேதி வெளியான ‘சுதேசமித்திரன்’ வருஷ அனுபந்தத்தில், காளிதாசன் எழுதுவது என்ற குறிப்புடன் பிரசுரமாயிற்று. பின்னாளில், ‘கல்கி’ தீபாவளி மலரில் 1957-ஆம் ஆண்டு வெளியாயிற்று.
ஆவணி அவிட்டம்
வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் விஷயங்களைக் கதை போலே எழுதுவதில் மகாகவி பாரதி சமர்த்தர். நம் தமிழ்நாட்டுச் சமூகத்தின் உயர்வும் தாழ்வும் யாவும் இந்தக் கதைகளில் பளிச்செனத் தெரிகின்றன. ‘ஆவணி அவிட்டம்’ என்ற இக்கதை முதலில் சுதேசமித்திரனில் வெளியாகி, பிறகு மித்திரன் காரியாலயம் 1920-இல் வெளியிட்ட ‘கதாமாலிகா’ நூலில் பிரசுரமாயிற்று.
வேணு முதலி விசித்திரம்
வேணு முதலி என்ற ஒருவரைப் பற்றி முந்தைய கதையில் பாரதி குறிப்பிடுகிறார். இந்த வேணு முதலியின் ஞானானுபவங்களைப் பற்றியது இந்தக் கதையும். வேதபுரமென்பது புதுவையின் பெயர். இக் கதையும் முதலில் ௬தேசமித்திரனிலும், பிறகு 1920-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மித்திரன் காரியாலயம் வெளியிட்ட ‘கதாமாலிகா’ என்ற நூலிலும் பிரசுரமாயிற்று.
வேணு முதலி
வேதபுரம் என்று புதுவை நகரத்துக்கு ஒரு மாற்றுப் பெயர் உண்டு. பாரதியார் வேதபுரம் என்ற பெயரைப் பல இடங்களில் உபயோகித்துளளார். வேணு முதலி என்ற நபரைப் பற்றியும் பல கதை, கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். இக் கதை ‘சுதேசமித்திரனில்’ முதலில் வெளிவந்தது; ‘காளிதாசன் எழுதுகிறார்’ என்ற குறிப்புடன் இக்கதை வெளியாகி இருக்கிறது. பிறகு மித்திரன் அலுவலகம் 1920-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட ‘கதாமாலிகா’ என்ற நூலில் வெளியாயிற்று.
பாம்புக் கதை
மனிதனைப் பற்றி ஒரு பாம்புக்கும் காக்கைக்கும் பேச்சுப் போல அமைந்துள்ள இந்தக் குட்டிக் கதை, ‘சுதேசமித்திரன்’ தினசரியில், 1919-ஆம் ஆண்டு வெளியாயிற்று. திரு. ரா.அ.பத்மநாபன் தொகுத்த ‘பாரதி புதையல்- முதல் பாகம்’ நூலில் இக்கதை இடம் பெற்றிருக்கிறது.
பஞ்ச கோணக் கோட்டை
‘பஞ்சகோணக் கோட்டை’ என்ற தத்துவார்த்தமான இந்தக் கதை திரு. வ.ரா. புதுவையில் நடத்திவந்த ‘சுதந்திரம்’ என்ற மாதப் பத்திரிகையில் வெளிவந்தது; பிறகு, 1945 செப்டம்பர் 9-ஆம் தேதி இது சென்னை ‘ஹநுமான்’ வாரப் பதிப்பிலும் வெளியாயிற்று. உண்மையில், சமுதாயத்திற்கு அறிவுரை கூற வந்த மகாகவி பாரதியின் அற்புதமான கட்டுரை இது...
ரஸத் திரட்டு
எல்லா மனிதரும் சமமென்ற கொள்கையை ஸமூஹ வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும்வரை மானிடருள்ளே இகல், பொறாமை, வஞ்சனை, போர் முதலிய ஏற்பாடுகள் நீங்க மாட்டாவாதலால் அக்கொள்கையை எப்படியேனும் அனுஷ்டானத்துக்குக் கொணர்ந்து விடவேண்டுமென்று ஐரோப்பிய ஞானிகள் பேராவல் கொண்டிருக்கின்றனர். இந்தியா ராஜாங்க விடுதலை பெற்றுவிடுமானால் தன் அனுஷ்டானத்தாலே உலகத்தாருக்கு இக்கொள்கையின் நலங்களை விளக்கிக் காட்டி உலகமுழுவதும் இதனைப் பரவச் செய்தல் ஸாத்யப்படும்.
ஸ்வர்ண குமாரி
மகாகவி பாரதியின் இரண்டாம் சிறுகதை இது. - இந்தக் கதை ‘இந்தியா’ (2-2-1907) இதழில் பிரசுரமானது. இந்தக் கதை காதல்வயப்பட்ட ஸ்வர்ண குமாரி - மனோரஞ்ஜனன் ஆகிய இருவர் வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே, காதலைக் காட்டிலும் சுதேசாபிமானமே மாணப் பெரிது என்பதை மிக அழகாக- ஆழமாக எடுத்துச் சொல்கிறது. தேசபக்தி, திலகர் பக்தி - இந்த இரண்டையும் பாரதி இரு கண்களாகப் பாவித்தார் என்பதை இந்தக் கதை மூலம் நாம் அறிகிறோம்.