பாரதியின் ஞானப்பாடல் – 16

எளிய வரிகள்... அரிய அனுபவ ஞானப் பதிவுகள்... மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 16வது கவிதை இது...

பாரதியின் ஞானப்பாடல் – 15

பக்தியினால் இந்த உலகில் எய்தும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? சித்தம் தெளியும்; செய்கைகள் செம்மையாகும்; வித்தைகள் சேரும்; வீரர் உறவு வாய்க்கும்; நெஞ்சில் சஞ்சலம் நீங்கும்... தொடர்ந்து பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி... படியுங்கள்... பக்தியில் திளையுங்கள்!

பாரதியின் ஞானப்பாடல்- 14

மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 14வது கவிதை இது...தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது       தோற்ற முறுஞ் சுடராம்!

பாரதியின் ஞானப்பாடல் – 13

“நானெனும் பொய்யை நடத்துவோன் நான்”- மாயையான இந்த உலகை இதைவிட எளிதாக ஒரு வரியில் விளக்கிவிட முடியாது. மகாகவி பாரதியின் அறிவுச் சமநிலை இயைபின் (ஞானயோகம்) அற்புதமான வெளிப்பாடு இக்கவிதை....

பாரதியின் ஞானப்பாடல் – 12

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம் அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

பாரதியின் ஞானப்பாடல் – 11

ஈசனும் தானும் ஒன்று என்ற அத்வைதப் பேரனுபவத்தை வெளிப்படுத்தும் அற்புதமான கவிதை இது. சிவோஹம்- நானே சிவம் என்பதை உணர்ந்தவர் ஈசனை அறிகிறார். ஈசன் வேறு எங்கும் இல்லை. ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கிறார்.

பாரதியின் ஞானப்பாடல்- 10

இக்கவிதை நாத்திகக் கவிதை போல தோற்ற மயக்கம் தருவது; உண்மையில் வேதாந்தத்தின் தெள்ளிய விளக்கமாக அமைந்த அரும்பெரும் கவிதை இது. அறிவே தெய்வம் என்பது, பிரம்மவாதிகளின் கொள்கை. அது ஈசனை விலக்கவில்லை; ஞான வடிவானாவன் ஈசன் என்கிறது...

பாரதியின் ஞானப்பாடல்- 9

இக்கவிதையும் மாயையைப் பழிக்கும் வீரக் கவிதை!

உயிரின் ஒலி

ஸ்ரீமான் ஜகதீச சந்திரவஸு சொல்லுகிறார்:- “தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்ய நாகரீகமானது சேதப் படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. ஸர்வ நாசத்திலே கொண்டு சேர்ப்பதாகிய இந்த வெறி கொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொரு தர்மம் வேண்டும்; அதாவது, நம்முடைய ஹிந்து தர்மம். ஏனென்றால்,  ஆத்ம த்யாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால் உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர் நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை வேரறுப்பதால் விளையும்” என்கிறார்....

பாரதியின் ஞானப்பாடல்- 8

“நாமார்க்கும் குடியல்லோம்; நமனையஞ்சோம்” என்ற அப்பர் பெருமானின் வாக்கைப் பிரதிபலிக்கும் கவிதை இது..

பாரதியின் ஞானப்பாடல்- 7

யமபயமே அச்சங்களில் முதன்மையானது. அதனையே எள்ளி நகையாடும் கவிதை இது. மரண அச்சம் அற்றவர்களுக்கே விடுதலை சித்தியாகிறது. எனவே தான் நாட்டின் விடுதலையை நாடிய பாரதி காலனை இக்கவிதையில் மிரட்டுகிறார்...

பாரதியின் ஞானப்பாடல் – 6

“மண்ணில் தெரியுது வானம், அதுநம் வசப்பட லாகாதோ?” என்ற அற்புதமான மந்திரச் சொற்கள் அடங்கிய கவிதை இது...

பசு

பசுவையும், காளையையும் ஹிந்துக்கள் தெய்வமென்று கும்பிடுவதுபோல், கஷ்டப் படுத்தாமல் மரியாதையாக நமது முன்னோர் நடத்தியபடி இப்போது நடத்துவதில்லை. வண்டிக்காரன் மாட்டைக் கொல்லுகிறான். இடையன் பசுவுக்குப் பொய்க் கன்றுக்குட்டி காட்டி, அதன் சொந்தக் கன்றைக் கொல்லக் கொடுக்கிறான். ஹிந்துக்களாகிய நாம் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருக்கிறோம்? வெறுமே பூவைப் போட்டுக் கும்பிட்டால் மாத்திரம் போதுமா?...

தெலுங்க மஹா சபை

ஹிந்துக்களெல்லாம் ஒரே கூட்டம். வேதத்தை நம்புவோரெல்லாம் ஸஹோதரர். பாரத பூமியின் மக்களெல்லாம் ஒரே தாய்வயிற்றுக் குழந்தைகள். நமக்குள் ஜாதிபேதம் குலபேதம் பாஷைபேதம் ஒன்றுமே கிடையாது. இந்தக் கொள்கைதான் இந்தக் காலத்துக்கு யுக்தமானது. ஹிந்து மதத்தை உண்மையாக நம்புவோரெல்லாம் ஒரே ஆத்மா, ஒரே உயிர், ஒரே உடம்பு, ஒரே ரத்தம், ஒரே குடர், ஒன்று......

பாரதியின் ஞானப்பாடல்- 5

தமிழ்த் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்த கவிதை இது....