தர்மம் வெல்ல நீண்ட காலமாகலாம். ஏனெனில் அது கர்மா , காலம், சுதந்திரம், வளர்ச்சி ஆகியவற்றை அனுசரித்தாக வேண்டும். உடனடித் தீர்வு என்பது அதற்குக் கிடையாது … தர்மம் எப்போதும் தோற்பதில்லை. அதன் வலிமை வேகத்தில் இல்லை; உறுதியில் இருக்கிறது. எழும்போது அது நீதியை மட்டும் நிலை நாட்டுவதில்லை. மாறாக சமுதாயத்தின் ஆன்மாவை நிலை நிறுத்துகிறது....
Tag: பொதுவானவை
நனவான பெருங்கனவு!
கோவையைச் சார்ந்த அமரர் திரு. சி.கே.சுப்பிரமணிய முதலியார் சைவம் போற்றிய சான்றோர். அவர் 1953ஆம் ஆண்டு கண்ட ஓர் அருங்கனவு, இன்று மற்றோர் ஆன்மிகப் பெரியாரால் நனவாகி இருக்கிறது. அது குறித்த இனிய கட்டுரை இது....
ஆனைமுகத்தானே…. விநாயகா!
”இப்போதெல்லாம் யானைகளின் வழக்கங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. அவற்றுக்கு ஏகப்பட்ட மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் அவற்றின் குரலிலும் அந்த கடுமை எதிரொலிக்கிறது. இதற்குக் காரணம் மனிதர்கள். யானைக் குடும்பம் இடம்பெயரும்போது அவற்றின் குரல் கடுமையாகவும், மிகுந்த அழுத்தத்திற்கு உட்பட்டதை தெரிவிக்கும் விதமாகவும் இருக்கிறது. தங்களது வழக்கமான வசிப்பிடத்திற்கு வந்ததும் அவற்றின் குரல் மீண்டும் சகஜமாக, இயல்பாக மாறிவிடுகிறது.”
வறுமை ஒழிப்பு – அர்த்தமும் அனர்த்தமும்
இந்த இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகளில் இது பற்றிய விவாதம் தொடங்கியது. விளைவாக 2010இல் ஐ.நா.சபையில் வறுமைக் கோட்டை அளவிட புதிய, பல பரிமாணங்களைக் கொண்ட வறுமை கணக்கீட்டு முறை (Multi Dimensional Poverty Index) அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் அது நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சரின் உரையில் இந்த புதிய கணக்கெடுப்பின்படி சுமார் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு (Below Poverty Line- BPL) வெளியே வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
நிர்வாக மேலாண்மைத் திறனும் செயலின்மையும்…
பகவத் கீதை - நான்காம் அத்தியாயத்தின் (ஞான கர்ம சந்யாச யோகம்) அடிப்படையில் பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரை, செயலூக்கத்திலும் செயலின்மையிலும் ஒரே யோகநிலையின் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது...
கடமையைச் செய்! – நூல் பதிப்புரை
மகாகவி பாரதியின் பகவத் கீதை தமிழாக்கம் ‘கடமையைச் செய்!’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பிரசுரத்தால் நூலாக வெளியிடப்படுகிறது. இந்த நூலில் இடம் பெறும் பதிப்புரை இது....
இந்துவுடன் இணைந்திருப்போம்!
சந்திரனை ஆராய ‘சந்திரயான் - 3’ கிளம்பிவிட்டது. இது இந்தியர்களின் பெருமிதத் தருணம். இந்திய விஞ்ஞானிகளின் அரிய முயற்சிகள் வெல்ல நாமும் பிரார்த்திக்கிறோம். ...
நினைவு முடிச்சு
போருக்குச் செல்லும் வீரனின் கரங்களில் கட்டப்படும் காப்புக்கயிறு போல, நம் வாழ்விலும் சில நினைவு முடிச்சுகள் தேவைப்படுகின்றன. இதோ நமது வாழ்வை வளப்படுத்தும் இனிய வழிகாட்டுதல் கட்டுரை. இதனை வழங்கி இருப்பவர், பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள்...
அறிவுசார் சொத்துரிமை: தேவை விழிப்புணர்வு
இந்தப் போட்டி மிகுந்த, தாராளமய உலகில், இந்தியாவின் சிந்தனைச் செல்வாக்கும் வர்த்தகச் செல்வாக்கும் உயர வேண்டுமானால், நாமும், அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அது தொடர்பான விவரங்கள், சட்ட நெறிமுறைகளை பள்ளிக்கல்வியிலேயே நாம் அளிக்கத் துவங்க வேண்டும். நாம் ஒவ்வொருவருமேகூட, அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.
அண்டங்காக்கையும் அமாவாசையும்
நம் நாட்டில் பிரபலமான கேலிச்சித்திரக்காரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண். அவர் காக்கைகளை விதம்விதமாக வரைந்துள்ளார். அவரது மனைவி கமலா, “அவருக்கு என்னை விட காக்காயைதான் ரொம்பப் பிடிக்கும்” என்று கிண்டலாகச் சொல்லி உள்ளார். லஷ்மணனுக்கு காக்கையை மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். காக்கை இவருக்கு 'பொன்' குஞ்சு.
வள்ளுவரின் அறமும் தீனதயாளரின் தர்மமும்
பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் ’ஒருங்கிணைந்த மனிதநேயம்’ கூறுகின்ற தர்மம் குறித்த சிந்தனைகளையும், அரசு குறித்த பார்வைகளையும், அதற்கு முன்னதாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவரின் அறச் சிந்தனைகளோடு ஒப்பிட்டால், ஒரே சிந்தனைப் போக்கைக் காண முடிகிறது....இவ்விருவரும் வலியுறுத்துவது ஒன்றே. அறம் எனினும் தர்மம் எனினும் அவை எம்மக்களாலும் எம்மதத்தாலும் எல்லா நேரங்களிலும் போற்றப்பட வேண்டும். அத்தகைய அறம், தர்ம வழி நடக்கும் அரசனே, அரசே நிலைப்பேறுடையதாக இருக்கும்.... (பேரா.பூ.தர்மலிங்கத்தின் கட்டுரை)...