ஆங்கிலத்தை அல்ல, மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி கரூர் ஐ.நா. சபை மேனாள் துணை செயலாளர்; காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் . திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். இந்தக் கட்டுரையில், ஆங்கில மொழி ஒரு கருவி. அது நமக்கு தேவை. ஆனால் ஆங்கிலேய உளநிலை தேவையில்லை. ஆங்கில இலக்கியங்களை, மரபுகளைத் தெரிந்து கொள்வதற்கு இணையாக நம் மண் சார்ந்த இலக்கியங்களை, புராணங்களை  நம் தாய்மொழியில் கற்க முடியாவிட்டால் ஆங்கில மொழியிலாவது கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை

ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைச் சார்ந்த அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறுவது தவறு. ஆனால் நெருடலாக இருக்கிறது என்பதற்காக உண்மையைப் போர்வையிட்டு மறைக்க முடியாது. இந்த இடத்தில்தான் முஸ்லிம் அறிஞர்கள், படித்தவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள்: நூல் மதிப்புரை 

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ஹெட்கேவாரின்  72 கடிதங்கள்  இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய சுமார் 1000 கடிதங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தேர்ந்தெடுத்த கடிதங்களின் தொகுப்பானது 1964 இல் தமிழில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்  நூற்றாண்டுக் காலத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது.

மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏ.ஐ.யின் குறுக்கீடு ஓர் அபாயம்!

இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாகக் கருதப்படுவது, இவர் எழுதிய  ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று, உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. இது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்.

என்.ஜி.ஓ.க்களின் பணத்தைப் பின்தொடர்வோம்!

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நிதியுதவி பல பிரச்னைகளுக்கு வித்திடுகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் திரு. பல்பீர் புன்ச் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் வெளியாகிறது.

ஏ .ஐ. தொழில்நுட்பத்திற்கு மோடி காட்டும் வழி

பிரதமர் மோடி ஏ.ஐ. பயன்பாட்டில் தார்மிகத்தை வலியுறுத்தியது மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சையை எதிரொலிக்கிறது. ஏ.ஐ.  தொழில்நுட்பத்தைப் பற்றிய இந்தியாவின் செயல்திட்டம் பொறுப்புணர்வு , பாதுகாப்பு , மனித மாண்பு என்ற மூன்றையும் அடித்தளமாகக் கொண்டது.

முஸ்லிம்  ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா?

முஸ்லிம் ஒருவர் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியுமா? ஹிந்துவா, முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்தப் பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் என்கிறார் ராம் மாதவ் . இவர், பாஜகவின் தேசிய செயலாளராக இருந்தவர். ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர்  ‘அவுட்லுக்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது…. பொருள் புதிது தீபாவளி மலரின் ஏழாவது இதழ் இது...

நூற்றாண்டு காணும் சிந்தனை

மற்ற அமைப்புகளிலிருந்து ஆர்.எஸ்.எஸ். வேறுபடுவதற்கு காரணம் அதன் மற்றொரு பரிமாணமான சுயநலமற்ற சேவை . இது ஆறு தலைமுறைகளாக தொடர்ந்து அதன் தொண்டர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. பணம், பதவி, அங்கீகாரம் எதையும் தேடாமல் பல தலைமுறைகளாக குடும்பம் குடும்பமாக சேவை செய்வதை உலகில் வேறு எங்கேயாவது பார்த்ததுண்டா? திரு. அகிலேஷ் மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெற்றியை அலசுகிறார்....

விடுதலைக்கான பயணப் பாதை

சங்கம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது. அதில் முதன்மையானது அதன் நேரம் தவறாமை. அது இந்தியர்களின் தளர்வான நேரத்தைப் பின்பற்றுவதில்லை. இங்கு நேரம் வீணடிக்கப்படுவதில்லை. எப்போது எந்த நிகழ்ச்சி தொடங்க வேண்டும், எப்போது முடிய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இப்போது என்னால் அவர்களைப் பின்பற்ற முடிகிறது. ஆனால் முதல் முறை எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது.... ஆங்கில புதின எழுத்தாளர் அத்வைத கலாவின் அனுபவம் இங்கே....

மோடியின் புதிய இந்தியா: விவேகமான அயலுறவுக் கொள்கை

ஓரத்தில் நின்று கொண்டிருந்த இந்தியா அவர் தலைமையில் முக்கிய உலக ஆட்டக்காரராக மாறியது. கடினமான உலக சவால்களையும் ஆதிக்க வல்லரசுகளின் அழுத்தத்தையும் எதிர்கொண்டது மட்டுமன்றி, இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை விவேகத்துடன் கூடிய சுதந்திரமான  (Strategic Autonomy) அயலுறவுக் கொள்கையால் சிறப்பாக வழி நடத்துகிறார்.

ஷாகாவுக்கு வெளியே சங்கம்

முன்பெல்லாம் சங்கத்தை 'சங்க யானி ஷாகா; ஷாகா யானி கார்யக்கிரமா ' (சங்கம் என்றால் ஷாகா ; ஷாகா என்றால் அங்கு நடக்கும் செயல்கள்) என்று வரையறுப்பார்கள் . ஆனால் இப்போது 'சங்க யானி ஸ்வயம்சேவக்; ஸ்வயம்சேவக் யானி பிரகல்ப் ' (சங்கம் என்றால் ஸ்வயம்சேவகர்கள்; ஸ்வயம்சேவகர்கள்  என்றால் அவர்கள் நடத்தும் செயல் திட்டங்கள்) என்று சொல்வது பொருத்தமாகும்.

அறம் வெல்ல தாமதமாகிறதே, அது ஏன்?

தர்மம் வெல்ல நீண்ட காலமாகலாம். ஏனெனில் அது கர்மா , காலம், சுதந்திரம், வளர்ச்சி ஆகியவற்றை அனுசரித்தாக வேண்டும். உடனடித் தீர்வு என்பது அதற்குக் கிடையாது … தர்மம் எப்போதும் தோற்பதில்லை. அதன் வலிமை வேகத்தில் இல்லை; உறுதியில் இருக்கிறது. எழும்போது அது நீதியை மட்டும் நிலை நாட்டுவதில்லை. மாறாக சமுதாயத்தின் ஆன்மாவை நிலை நிறுத்துகிறது....

வாழைப்பழக் குடியரசாகி வரும் அமெரிக்கா  

உலகில் கம்யூனிசம் விழுந்துவிட்டது. அதன் மறுபக்கமாக இருக்கும் முதலாளித்துவமும் வீழ்வது தவிர்க்க முடியாதது. அந்த வீழ்ச்சியை  ட்ரம்ப் துரிதப்படுத்தி வருகிறார் என்று பொருளாதார நோக்கர்கள் கருதுகிறார்கள் . போகப் போக அது உறுதியாகத் தெரிய வரும்.

இன்றைய இந்தியாவுக்கு ஔரங்கசீப் தேவையில்லை!

சில மாதங்களுக்கு முன், ‘ஔரங்கசீப் தற்கால இந்தியாவுக்குப் பொருத்தமானவர் அல்ல’ என்று ஆர்.எஸ்.எஸ். பிரசாரச் செயலாளர் திரு. சுனில் அம்பேக்கர் கூறியதை சர்ச்சையாக்க இடதுசாரிகள் முயன்றனர். அப்போது ‘தி டெலிகிராப்’ பத்திரிகையில் மூத்த இதழாளர் திரு. எம்.ஜே.அக்பர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது... தற்காலத்தின் வழிகாட்டலுக்கு இது போன்ற கட்டுரைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.

இந்தியாவின் ராஜதந்திரச் செயல்பாடுகள் விவேகமானவை!

ஆங்கில எழுத்தாளரும் மும்பையில் உள்ள விஸ்வாமித்திரா ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனருமான திருமதி பிரியம் காந்தி மோடி ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் தமிழில் பதிவாகிறது...