ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் நூற்றி இருபத்தைந்தாவது சூக்தமாக உள்ளது எட்டு பாடல்கள் கொண்ட தேவி சூக்தம். இதனை இயற்றியவர் அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளாகிய வாக் என்ற ரிஷிகா (பெண் ரிஷி). தனது மெய்யுணர்வின் உச்சத்தில் பிரபஞ்ச மகா சக்தியான தேவியுடன் தன்னை ஒன்றிணைத்துக் காணும் அத்வைத உயர்நிலையை அடைந்தவர். அந்த நிலையில் இருந்தே இதனைப் பாடுகிறார். இதனை தமிழில் வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு.
Tag: இலக்கியம்
சீரான வாழ்விற்கு…
சீர் என்ற சொல்லுக்கு பல பொருள் இருக்குமாயின், இவ்விடத்தில் ‘சீர்’ என்றால் ஒழுங்கு. எந்த ஒரு செயலையும் நேர்மையாவும், நேர்த்தியாகவும், வழக்கமாகவும், அனைவருக்கும் புரியும் படியாகவும், அதையே மற்றவர்கள் அதன் சிறப்புக் கருதி தன்னிச்சையாக பின்பற்றும்படியாவும் செய்வதற்கு சீர் என்று பெயர். ...
சமூகப் போராளிகள் இவர்களே!
தராதரமற்ற எவர் எவரையோ சமூகப் போராளிகள் என்று போற்றி பின்சென்று வர்ந்தும் உலகம் இது. அவர்களைத் திருத்த, உண்மையான சமூகப் போராளிகள் யார் என்று கட்டுடைக்கிறார், திரு. கருவாபுரிச் சிறுவன்...
ஷட்பதீ ஸ்தோத்திரம் – விளக்கம்
ஆதி சங்கரர் எனப்படுகின்ற பகவத்பாதர் தக்ஷிண பாரதத்தில் திராவிட தேசத்தில் உள்ள காலடியில் (அன்றைய தமிழகம், இன்றைய கேரள மாநிலத்தில்) பிறந்தவர். அத்வைத வேதாந்தத்தை முன்னிறுத்திய சங்கர பகவத்பாதர் எழுதிய ‘ஷட்பதீ ஸ்தோத்திரம்’ என்கின்ற பக்தி நூலைப் பற்றி இங்கு பார்ப்போம்.
வந்தே மாதர மந்திரச் செய்யுள்கள்
தெய்வத்திற்கும் தமிழுக்கும் செய்யுள் இயற்றி தொண்டு செய்வது மட்டுமல்ல... இந்த தேசத்தின் விடுதலைக்கும் எங்களது பங்கு உண்டு என்கிறார்கள் பெரும் புலவர்கள் சேற்றுார் முகவூர் கந்தசாமிக் கவிராயரும், மதுரை சோழவந்தான் அரசஞ்சண்முகனாரும். இக்கவிராயர்களின் ‘வந்தே மாதரம்’ பாடல்களை பெருமையுடன் வெளியிடுகிறது ‘பொருள் புதிது’ இணையதளம்….
கடன் பெற்றார் நெஞ்சம் வேண்டாம்!
‘கடன்பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ராவணனின் வீழ்ச்சியைப் பற்றுப் பாடுவார் கம்பர். எனவே, கடன் ஒரு பெரும் சுமை. அதுகுறித்த இலக்கியச் சிந்தனை இது…
கவிதை எனது கர்மா
“உள்ளத்துள்ளது கவிதை- இன்பம் உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில்- உண்மை தெரிந்துரைப்பது கவிதை” என்று பாடுவார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. ஆனால், கவிதை என்றாலே சிலருக்கு ஒவ்வாமை. இதுபற்றி தனது சுய பிரகடனத்துடன் அலசுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்….
நமனை அஞ்சோம்!
மரண பயம் போக்கும் அமிழ்தான பாடல்கள் நிறைந்தது நம் தமிழ் மொழி. அவற்றை சுட்டிக் காட்டும் இனிய கட்டுரை இது...
என்கடன் பணிசெய்து கிடப்பதே – 3
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: சங்கரன்கோவில் டி.மாரியப்பன்.
நீலகண்ட சிவம் போற்றிய கோமதியம்பிகை
அருணகிரிநாதரும், தமிழிசை மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும் இசை வழிபாடு செய்தனர். இந்தத் திருநெறியை 19ஆம் நூற்றாண்டில் மக்களிடம் பரப்பியவர்களில் முக்கியமான பிரம்மஸ்ரீ நீலகண்ட சிவன் என்னும் மகானைப்பற்றி கோடிட்டுக் கட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.
ஆரியம் – திராவிடம்: சில இலக்கிய ஆதாரங்கள்
‘திராவிடமாயை’ என்ற நூலின் மூலம், நூறாண்டு காலமாக தமிழ்ச் சூழலில் புகுத்தப்பட்ட இனவாத மாயையை சுக்குநூறாக்கியவர் திரு சுப்பு. வரும் நவ. 21இல் அவரது 75 ஆம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, 2012-இல் அவர் ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...
மாமனும் மருமகனும்
ஸ்ரீராமர் திருமாலின் அவதாரம். முருகப் பெருமான் சிவனின் புதல்வன். இவர்கள் இருவரிடையிலான ஒப்புமையை இருபெரும் இலக்கிய நூல்களைக் கொண்டு இங்கு தொகுத்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்…
வரமுதவச்சடையான்
திரு. கருவாபுரிச் சிறுவன், கருவலம்வந்த நல்லூரின் சிறப்புகளை எழுதுவதில் மகிழ்பவர். அவரது திருக்கருவை தல புராணம் குறித்த இன்னொரு கட்டுரை இது...
சிபியைப் போற்றும் புறநானூறு
தஞ்சமடைந்த புறாவைக் காக்க தனது உடலின் தசையை அரிந்து தரத் துணிந்தவர் சிபி சக்கரவர்த்தி. புராணங்கள் பாராட்டும் இவரை ‘சிபி சோழன்’ என்று போற்றும் மரபு தமிழகத்தில் உண்டு. இவரைப் பற்றிய இலக்கிய குறிப்பு இங்கே…
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
‘இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்ற வரிகளை மையக்கருத்தாக வைத்து பல அருளாளர்கள் பாடல்கள் பல புனைந்து நம் பரம்பொருளின் திருவடிக்கு சாற்றி மகிழ்ந்துள்ளார்கள். அத்தகைய பாடல்கள் ஒரு சிலவற்றை கோடிட்டுக் காட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.