விழிப்புடன் இருப்போம்! தேசம் காப்போம்!

நாடு என்பது நாம் அனைவருமே தான். மத அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் போன்றோர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்யும் விஷமப் பிரசாரம் வென்றுவிட நாம் அனுமதிக்கக் கூடாது. தேசம் காப்பது விழிப்புணர்வுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும் கூட.

இரு ஆண்டுகள் நிறைவு: ஒரு மீள்பார்வை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2022 மார்ச் 1) பொருள் புதிது இணையதளம் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்பணியை மீள் பார்வை செய்ய வேண்டியது நமது கடமை. கடந்த இரு ஆண்டுகளில், ஒருநாள் கூட இடைவெளியின்றி, புதிய பதிவுகளை வலையேற்றி உள்ளோம் என்பதே மிகவும் திருப்தி அளிக்கிறது. இது வரையிலான 730 நாட்களில் 1,673 பதிவுகளை (கட்டுரைகள், கவிதைகள், மொழியாக்கங்கள்) நமது தளத்தில் பதிவேற்றியுள்ளோம்.

வள்ளுவரின் அறமும் தீனதயாளரின் தர்மமும்

பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் ’ஒருங்கிணைந்த மனிதநேயம்’ கூறுகின்ற தர்மம் குறித்த சிந்தனைகளையும், அரசு குறித்த பார்வைகளையும், அதற்கு முன்னதாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவரின் அறச் சிந்தனைகளோடு ஒப்பிட்டால், ஒரே சிந்தனைப் போக்கைக் காண முடிகிறது....இவ்விருவரும் வலியுறுத்துவது ஒன்றே. அறம் எனினும் தர்மம் எனினும் அவை எம்மக்களாலும் எம்மதத்தாலும் எல்லா நேரங்களிலும் போற்றப்பட வேண்டும். அத்தகைய அறம், தர்ம வழி நடக்கும் அரசனே, அரசே நிலைப்பேறுடையதாக இருக்கும்.... (பேரா.பூ.தர்மலிங்கத்தின் கட்டுரை)...