மகாகவி புதுவைக்குப் போனது ஏன்?

மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, அவர் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த நிகழ்ச்சி. அங்குதான் அவருக்கு அரவிந்தர், வ.வெ.சு.ஐயர் போன்ற பெரியோர்களின் தொடர்பு கிடைத்தது. அங்குதான் அவருடைய முப்பெரும் பாடல்கள் உள்ளிட்ட பல அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் உருவாயின. அங்குதான் பாரதியின் பெருமை உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது. அவர் உயிர் காத்த குவளைக் கண்ணனின் தொடர்பும் அங்குதான் கிடைத்தது.

பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி

 ‘இலக்கிய வட்டம்’ இதழ்த் தொகுப்பில் மகாகவி பாரதி குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும்,  மறைந்த இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான திரு. க.நா.சு. எழுதிய கட்டுரை இது. அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்…

மாலை-2

கூடிய வரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.                    

மலையாளம்- 2

“தமிழ்நாட்டிலேயும் இதுபோலவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக” என்று சாஸ்திரி சொன்னார்.

மலையாளம்-1

ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச் சிறு விரலை நீட்டிக்கொண்டு, ‘பெயரென்ன?’  என்று கேட்டார்.  ‘என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்’ என்று நாராயணஸ்வாமி சொன்னார். ’தீயர்களுக்குக் கோயில் கட்டிக்கொடுக்கும் ஸந்யாஸி நீர் தானோ?’  என்று நம்பூரி கேட்டார்.  ‘ஆம்’ என்று ஸ்வாமி சொன்னார்.  ‘பிரமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?’ என்று நம்பூரி கேட்டார். அதற்கு நாராயணஸ்வாமி:-   ‘பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப்பட வேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை’ என்றார்.    

ராகவ சாஸ்திரியின் கதை

அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:-  “நான், மலையாளி என்று குப்பு சாஸ்திரியிடம் சொன்னேன். ஸம்ஸ்கிருதம் பேசுவதிலிருந்து நம்பூரி பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்று குப்பு சாஸ்திரி தாமாகவே ஊகித்துக் கொண்டார் போலும். நான் ஜாதியில் தீயன். மலையாளத்தில் தீயரென்றால் தமிழ் நாட்டில் பள்ளர் பறையரைப் போலேயாம். தீயன் சமீபத்தில் வந்தால் பிராமணர் அங்கே ஸ்நாநம் செய்து பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்” என்றார்.      

தியானங்களும் மந்திரங்களும் (விடுதலைக்கு வழி)

நான் கடவுள், ஆதலால் சாக மாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது, நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.

நெல்லிக்காய்க் கதை    

ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசார்யாருக்கு ஸமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக் குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியன் முதுகிலே சுமந்து கொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.  

பாரதியின் தேசியம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற கருத்துரை  (2020) நிகழ்வில் ‘பாரதியின் தேசியம்’ என்ற தலைப்பில், அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் ஐயா ஆற்றிய உரையின் (அவரே தொகுத்தளித்த) கட்டுரை வடிவம் இது…

இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)

மகாகவி பாரதி ‘கலைகள்’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையைக் கீழே கொடுத்திருக்கிறோம். நாம் பல யாகசாலைகளுக்குச் சென்றிருக்கிறோம். அங்கு நடக்கும் யாகங்களைக் கண்டிருக்கின்றோம். அங்கு தீயில் ஆஹூதியிட்டு மந்திரங்கள் சொல்லி, பூர்ணாஹூதி செய்து தீபாராதனை முடியும் வரை இருந்து கண்டு மனம் மகிழ்ந்து வருகின்றோம். இங்கு பாரதி ஒரு யாகத்தைச் செய்கிறார். கண்களை மூடி அவர் இங்கு செய்யும் யாகமொன்றை மனக்கண்ணால் காண்கிறீர்கள். யாக குண்டம் வைத்து, அதில் அக்னியை மூட்டி, கணபதியை வணங்கிப் பின்னர் பஞ்ச பூதங்களை வேண்டி, அந்தத் தீயில் தேன் முதலான பண்டங்களை இட்டு மந்திரங்களைச் சொல்லி நடைபெறும் அந்த யாகத்தில் என்ன வேண்டப்படுகிறது. அந்த மந்திரங்களின் பொருள் என்ன? சிந்தனையை ஓட்டுங்கள். பாரதியின் வாசகங்கள் மட்டும் காதில் விழுந்து கொண்டிருக்கட்டும். யாகத்தின் வேண்டுதல் என்ன? நமக்குப் புரியும் பைந்தமிழில்தான் அவனது வேண்டுதல்கள் இருக்கின்றன. அவற்றைப் படியுங்கள். இது குறித்து ஓர் அரிய செய்தி. பாரதி, மகான் அரவிந்தரிடம் ‘ரிக் வேதத்தில்’ பல ஸ்லோகங்களுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டவர் என்றும், ‘ரிக் வேதம்’ பழமையான வேதம் மட்டுமல்லாமல், இயற்கையை வணங்கும் பல ஸ்லோகங்களைக் கொண்டது என்றும் பெரியோர் சொல்வார்கள். ஆனால் கீழ்வரும் வசனங்கள் அந்த ரிக் வேத மந்திரங்களின் கருப்பொருளா என்பது நமக்குத் தெரியவில்லை. - இது பாரதி இலக்கிய பயிலரங்கின் நிறுவனர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் முன்னுரை....

சித்தக் கடல்

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆத்மா நீ! உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா? … தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் -  உன்னை எப்படிப் பாடுவேன்?

கவி, போத்தன்னா என்ற தெலுங்கக் கவிராயர், கம்பர், திருவள்ளுவர், இளங்கோ

பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும், அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடிய வரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்?        

ரத்னமாலை

“பல தேசத்து ஞானிகளின் வசனங்களை  ‘ஆர்ய’  பத்திரிகையில்  ‘போல் ரிஷார்’   ‘Paul Richard’  என்ற பிரான்ஸ் நாட்டு வித்வான் தொகுத்தெழுதிவரும் கோவையிலிருந்து  ‘காளிதாஸன்’ மொழி பெயர்த்தது” - என்ற குறிப்புடன் சுதேசமித்திரனில் வெளியான பொன்மொழிகள் இவை....

டிண்டிம சாஸ்திரியின் கதை

கதை சொல்வது போல சரித்திர நிகழ்வுகளையும் சமூக அவலங்களையும் வாசகர் மனதில் பதிய வைப்பது மகாகவி பாரதிக்கு கைவந்த கலை. அவரது தராசுக் கடை, வேதபுரத்து அனுபவங்கள் போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்கள். இதோ, வேதபுரக் கதையாக ஒரு செய்தி அனுபவம்...

மகாகவியும் ஆன்மிகமும்

அரவிந்தரைப் பெரிதும் ஆன்மிகவாதியாக மட்டுமே பலரும் அறிந்துள்ளார்கள். பாரதியைப் பெரிதும் இலக்கியவாதியாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள்.  ஆனால் ஸ்ரீஅரவிந்தருக்கு இணையான ஆன்மிகவாதி மகாகவி பாரதி என்பதை பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளும் அவரது கவிதைகளும் நமக்கு உணர்த்துகின்றன.