துணைக்கண்ட முஸ்லிம்கள்: கடன் வாங்கிய அடையாளம்

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா?  அல்லது உம்மா -  இஸ்லாமிய அகிலம் - என்ற கானல் கனவைப் பின்தொடரும் காலனிய மனப்பான்மையினால் முட்டுச்சந்தில் மோதி நிற்பதா? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.