இந்த வியாதிக்கு இதுவே மருந்து!

இலங்கையில் தமிழர்களுக்கு அரசு வேலையில் அதிக பிரதிநிதித்துவம் முன்பு இருந்தது சரி என்று சொல்லும் அதே நபர்கள் தான், இங்கு (பிரிட்டிஷ் ஆட்சியில்) பிராமணர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இருந்தது அநீதி என்றார்கள்... தமிழகத்தின் பிரத்யேகமான வியாதிக்கு சரியான மருத்து எதுவென்று சொல்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்...

பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள்: நூல் மதிப்புரை 

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ஹெட்கேவாரின்  72 கடிதங்கள்  இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய சுமார் 1000 கடிதங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தேர்ந்தெடுத்த கடிதங்களின் தொகுப்பானது 1964 இல் தமிழில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்எஸ்எஸ்  நூற்றாண்டுக் காலத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது.

கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்: நூல் வெளியீட்டு விழா

வரலாற்று ஆசிரியரும், கல்வெட்டு நிபுணருமான டாக்டர் எம்.எல்.ராஜா எழுதிய, 'கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்' என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவ. 25 ஆம் தேதி நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி நூலை வெளியிட்டார். அதுகுறித்த செய்தி இது…

கவிதை எனது கர்மா

“உள்ளத்துள்ளது கவிதை- இன்பம் உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில்- உண்மை தெரிந்துரைப்பது கவிதை” என்று பாடுவார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. ஆனால், கவிதை என்றாலே சிலருக்கு ஒவ்வாமை. இதுபற்றி தனது சுய பிரகடனத்துடன் அலசுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்….

உருவகங்களின் ஊர்வலம் – 81

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #81..

நமனை அஞ்சோம்!

மரண பயம் போக்கும் அமிழ்தான பாடல்கள் நிறைந்தது நம் தமிழ் மொழி. அவற்றை சுட்டிக் காட்டும் இனிய கட்டுரை இது...

புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு: கொடுமணல்

கீழடி குறித்து அளவுக்கு அதிகமாகவே பேசப்பட்டுவிட்டது. ஆனால், மிகவும் பேசப்பட வேண்டிய, ஆனால் கவனம் பெறாமல் உள்ள ஒரு தொல்லியல் தலம் ‘கொடுமணல்’. அதுகுறித்த முக்கியமான கட்டுரை இது...

நீதிக் கட்சி திமுகவின் தாய் அமைப்பா?

அண்மையில் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்,  “நீதிக்கட்சி திமுகவின் தாய் அமைப்பு” என்று பேசி இருக்கிறார். அவருக்காகவே, இந்தக் கேள்விக் கட்டுரையை எழுதி இருக்கிறார் திரு. முரளி சீதாராமன்.

என்கடன் பணிசெய்து கிடப்பதே – 3 

அப்பர் சுவாமிகள் கூறியபடி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: சங்கரன்கோவில் டி.மாரியப்பன்.

ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது

'சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வழக்கில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது (நாள்: 20.11.2025); அதே சமயம், 'மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நீண்ட காலம் கிடப்பில் போடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான ஓர் ஆவணத் தொகுப்பு….

சமஸ்கிருதம் செத்துப் போன மொழியா?

துணை முதல்வர் உதயநிதி, ஒரு நிகழ்ச்சியில், சமஸ்கிருதம் செத்த மொழி என்று போக்கிற போக்கில் பேசி இருக்கிறார். அவருக்கான பதிலடியை மிகவும் நாகரிகமாக (இதுவும் சமஸ்கிருதச் சொல் தான்) அளித்திருக்கிறார் திரு. முரளி சீதாராமன்...

வருவாள்  செண்பகவல்லித்தாய்   – 4  

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது...

மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏ.ஐ.யின் குறுக்கீடு ஓர் அபாயம்!

இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர் பிரிட்ஜோப் காப்ரா (86). மேற்கத்திய அறிவியலையும் கீழையஞானத்தையும் இணைக்கும் பாலமாகக் கருதப்படுவது, இவர் எழுதிய  ‘தாவோ ஆஃப் பிசிக்ஸ்’ (இயற்பியலின் வழி). அது மிக அதிக விற்பனையான நூல் மாத்திரமன்று, உலகின் பார்வையை மாற்றிய நூல்களில் ஒன்று. இது வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இன்றைய எண்ம உலகில் தொன்மையான ஆசிய ஞானத்தின் பொருத்தம் பற்றி இந்த நேர்காணலில் அவர் விவாதிக்கிறார். நேர்காணல் செய்த கார்லோ பிஸ்ஸாட்டி பிரபல எழுத்தாளர்.

நீலகண்ட சிவம் போற்றிய கோமதியம்பிகை 

அருணகிரிநாதரும், தமிழிசை மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும் இசை வழிபாடு செய்தனர். இந்தத் திருநெறியை 19ஆம் நூற்றாண்டில் மக்களிடம்  பரப்பியவர்களில் முக்கியமான பிரம்மஸ்ரீ  நீலகண்ட சிவன் என்னும் மகானைப்பற்றி  கோடிட்டுக் கட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.

ஆரியம் – திராவிடம்: சில இலக்கிய ஆதாரங்கள்

‘திராவிடமாயை’ என்ற நூலின் மூலம், நூறாண்டு காலமாக தமிழ்ச் சூழலில் புகுத்தப்பட்ட இனவாத மாயையை சுக்குநூறாக்கியவர் திரு சுப்பு. வரும் நவ. 21இல் அவரது 75 ஆம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, 2012-இல் அவர் ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...