மகாபாரதம் – மாபெரும் உரையாடல்: நூல் அறிமுகம்

மஹாபாரதத்தில் இல்லாததே இல்லை என்று பொதுவாய்ச் சொன்னாலும், அதன் மையக் கருத்து எதுவென்று பார்த்தால், தர்மம் என்றால் என்ன, மாறிவரும் காலத்தில், தர்மத்தை மனிதன் எவ்விதம் கடைபிடிக்க வேண்டும் என்பதை விரித்தும், அக்கறையோடும் சொல்வதைப் போலத்தான் தெரிகிறது. இந்த மாபெரும் கதையைப் பற்றி எல்லா மொழிகளிலும் நிறைய நூல்கள் வெளிவந்து விட்டன. இன்னும் நிறைய வரும். அந்த நூல்களில், ஹரி கிருஷ்ணன் எழுதியுள்ள ‘மகாபாரதம் - மாபெரும் உரையாடல்’ என்னும் நூல் தொடர்ந்து மின்னும்.

விவேகானந்தர் கனவு கண்ட புதுமைப் பெண்!

பெண்மையை தெய்வீகத்துக்கு ஒப்பிட்டால், அதை இயற்கையோடும் ஒப்பிடலாம். தவறில்லை. இயற்கையின் சுழற்சியை வலுக்கட்டாயமாக சிதைப்பதால், இயற்கையே சிதைந்து சின்னாபின்னமாவதைப் போல, பல்வேறு காரணங்களினால் பெண்மை அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிதைக்கப்படும் போது பெண்மை வெடித்துச் சிதறுவதையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

பகவத் கீதை – இரண்டாம் அத்தியாயம்

போர்க்களத்தே சஞ்சலமுடையவனாகத் தளர்ந்து அமர்ந்த தோழன் அர்ஜுனனுக்கு சாரதியாக வந்த இறைவன் அறிவுரை கூறி, அவனை போருக்கு ஆயத்தப்படுத்துகிறான். இதுவே கீதையின் தோற்ற விளக்கம். இதில் மனித இயல்பின் போராட்டங்களை விளக்கும் கண்ணனின் உபதேசம், இந்நூலை ஞான இலக்கியமாக்குகிறது. கீதையின் இரண்டாவது அத்தியாயம் ஞானம் தொடர்பான சாங்கிய யோகமாக (சாங்கியம் = ஞானம்) இயல்கிறது. மகாகவி பாரதி தனது கீதை உரைக்கு முன்னதாக சுருக்கமான விளக்கம் அளித்திருப்பதும் கவனித்தற்பாலது…

இரக்கமற்ற இளஞ்சிவப்புப் புரட்சி!

‘கோமாதா எங்க குலமாதா’ என்று பாடினால் போதாது. வயதான காலத்தில் அதைப் பேணுவதும் நமது கடமை. உழவனின் தோழனான காளையையும் அவ்வாறே நாம் காக்க வேண்டும். இந்த நன்றி உணர்ச்சியை மறக்க மறக்க, நாம் மரத்துப் போன சமுதாயம் ஆவோம். அதன் தொடர் விளைவுகளாக முதியோர் இல்லங்கள் பெருகும். பிறகு நமக்கு என்றும் மீட்பில்லை.