ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளி

அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று. அதையொட்டி பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

ஈவெராவின் ஜாதி ஒழிப்பு ஒரு நாடகம்

1957 ஆம் வருடம், டிசம்பர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு. ப.ஜீவானந்தம் நிகழ்த்திய சொற்பொழிவின் சில பகுதிகள் இங்கே… நினைவில் கொள்ளுங்கள் அவர் அந்தக் கால நியாயமான கம்யூனிஸ்ட்!

காரல் மார்க்ஸும் விஷ்ணு பாவாவும்

பொருளியல் முதல்வாதம் என்ற கருத்தியலில் அமைந்தது, காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூல். அவருக்கு முன்னதாகவே, இதனை ஒத்த பொருளியல் சிந்தனையை பாரதப் பாரம்பரிய நோக்குடன் ஒருவர் இந்தியாவில் எழுதி இருக்கிறார். அவரைப் பற்றி இங்கே அறிவோமா?

காஷ்மீரில் ஒழியுமா பயங்கரவாதம்?

இன்னும் சில தினங்களில் (அக். 8) யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு- காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இத்தருணத்தில், ஜம்மு காஷ்மீரில் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்கிறது, திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இந்தக் கட்டுரை….

மூக்கு சீர் ஒட்டறுவைச் சிகிச்சை- ஒரு தகவல்

நடிகை ஸ்ரீதேவிக்கு குண்டு மூக்கு. தமிழ் சினிமாவை விட்டு பாலிவுட் சினிமாவுக்குப் போக விரும்பிய அவர்  ‘ரெயினோ பிளாஸ்டிக்’ எனப்படும் ஒட்டறுவைச் சிகிச்சையை செய்து கொண்டார். அது மூக்கை சீராக்கி அழகு படுத்துவதாகும்....

கார்கில் போர்: வெற்றியும் அனுபவங்களும்

84 நாட்கள் நடந்த கார்கில் போர் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தான் அரசின் நிலையான கொள்கை என்பது உலக நாடுகளுக்குப் புரிந்தது; இந்திய - ரஷ்ய உறவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதரவு என்ற மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டிலும் மாற்றம் வந்தது.

மகாகவி பாரதியின் வாழ்வில்…

மகாகவி பாரதியின் நினைவுதினத்தை ஒட்டி, அவரது வாழ்க்கைச் சுருக்கம் காலவரிசையில் இங்கே சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளது...

காங்கிரஸ் கொள்கைகளை வடிவமைத்த தமிழர்!

செய்யாத தவறுக்குத் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து ஆங்கிலேய அரசிடம் வாதிட்டு நஷ்டஈடு பெற்றவர், ‘சேலத்து நாயகன்’ எனவும் ‘தென்னிந்தியாவின் சிங்கம்’ எனவும் பாராட்டப்பட்ட விடுதலை வீரர், சேலம் சி.விஜயராகவாச்சாரியார் என்றழைக்கப்படும் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார். இவர் தான் காங்கிரஸ் அமைப்பின் ஆரம்பகால கொள்கைகளை வடிவமைத்தவர்!

சமரசமில்லாத தேசபக்தர் சியாம பிரசாத் முகர்ஜி

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. சியாம பிரசாத் முகர்ஜி குறித்து, புதுதில்லியில் உள்ள டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் அறங்காவலரும், பாஜக தமிழக துணைத் தலைவருமான பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி எழுதியுள்ள கட்டுரை இது…

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சுடர்விட்ட சுதேசிய எழுச்சியின் அடையாளம் தான் நெல்லைக் கலகம். அந்த வழக்கில் விடுதலைவீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனைத் தீர்ப்பு (07/07/1908)  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது குறித்து சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் நூலகர் திரு. ரெங்கையா முருகன் முகநூலில் எழுதிய பதிவு இது…

ஆயிரம் ஆண்டுகள் கடந்த கங்கை கொண்ட சோழபுரம்

தமிழகத்தின் பாரம்பரியச் சின்னமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட  ‘கங்கை கொண்ட சோழபுரம்’ அமைக்கப்பட்டு (1023) ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்கோயில் நகரம் குறித்து அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் தனது ’பாரதி பயிலகம்’ வலைப்பூவில் எழுதிய கட்டுரை இது…

வீர சாவர்க்கரின் தியாகத்தைப் போற்றிய மகாத்மா காந்தி

கம்யூனிஸ்டுகளைப் பொருத்த வரையில், வரலாறு என்பது அவர்களது கருத்தியலுக்கு வசதியான விஷயங்களை வெளிப்படுத்தப் பயன்படும் கருவி மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக உள்ள கசப்பான உண்மைகளை மறைப்பதற்கும் உதவும் கருவி. ஆனால் இந்த அறிவுசார் அழிச்சாட்சியங்கள் எல்லாம் இனிமேலும் எடுபடாது.

தொழிற்சங்க இயக்கத்தின் முன்னத்தி ஏர்

“தனித்து நிகழ்ந்த ஒரு தொழிலாளர் புரட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தூத்துக்குடி வேலைநிறுத்தம் ஒரு முழுமையான எடுத்துக்காட்டாகும். ஈடு இணையற்ற திறமையுடனும் தைரியத்துடனும் போராடிய தூத்துக்குடி தலைவர்களையே அனைத்துப் பெருமையே சாரும்” என்று அரவிந்தரால் பாராட்டப்பட்ட போராட்டம் கோரல் மில் வேலைநிறுத்தம்...

புரட்சியாளர் வீர சாவர்க்கர்

விநாயக தாமோதர சாவர்க்கர் ஒரு புரட்சிகர தியாகி; இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். அவரது வாழ்க்கையே தொடர் போராட்டத்தின் அடையாளம். அந்தப் போராட்டங்களில் முதலாவதாக இருப்பது இந்த நாட்டின் பண்பாட்டுக்கும் பாரம்பரியத்திற்கும் புத்துயிரூட்ட அவர் நடத்திய போராட்டம். அடுத்ததாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற நடத்திய போராட்டம். மூன்றாவதாக, சுயநல அரசியலுக்காக தனது சக இந்தியர்கள் செய்த கேலியையும் எதிர்ப்பையும் தாங்கி நின்றது.

ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு!

பலரும் ஜெகதீசரைப் பற்றி அறியாதபோது அவரைப் பற்றி வெளிநாடுகளிலும் பாரதத்தின் சென்னை, மும்பை, தில்லி, காசி போன்ற பகுதிகளிலும் சகோதரி நிவேதிதை அவரைப் பற்றி உரை நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டும், செய்திதாள்களில் எழுதியும் அவரை முன்னிலைப்படுத்தினார்.