பாரதீய சிந்தனை

1982 ஆம் ஆண்டு விஜயதசமி (27.10.1982) நன்னாளில், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில், பாரதீய விசார் கேந்திரம் (பாரத சிந்தனை மையம்) தொடங்கப்பட்டது. அந்த விழாவில் பாரதீய மஸ்தூர் சங்க நிறுவனர் திரு. தத்தோபந்த் தெங்கடி அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கமான தொகுப்பு இது.

அனந்தாழ்வாரும் முத்துத் தாண்டவரும்

அனந்தாழ்வான் திருமலைக்கு வந்தார்; பூந்தோட்டம் அமைத்தார்; தண்ணீர்த் தேவைக்காக அவர் வெட்டிய ஏரி  ‘அனந்தன் ஏரி’ என்று இன்றும் திருமலையில் உள்ளது. அதற்கு அவர் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் கடப்பாரை கோயில் நுழைவாயிலில் இன்றும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது....

பாணபத்திரரும்  சியாமா சாஸ்திரியும் 

திருவிளையாடல் புராணத்தில் ஏமநாதன் என்ற வடநாட்டு பாடகன் மதுரை வந்து, 'எனக்கிணையாக பாடக் கூடியவர் பாண்டிய நாட்டில் உண்டா? ' என சவால் விட்ட கதை உண்டு. அதே போன்றதொரு சம்பவம் சியாமா சாஸ்திரிகள் வரலாற்றிலும் உண்டு.

புடவையும் சல்வார் கமீஸும் 

என் உடை, என் உரிமை - என்றெல்லாம் முழங்கும் பெண்ணியக் கூட்டம் ஒன்று நம்மூரில் உண்டு. அவர்களுக்காகவே, நமது நாட்டின் கலாச்சார உடையான புடவைக்கு சகோதர நாட்டில் ஏற்பட்ட சோதனையை இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார், எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார். நம் ஊரிலும் காட்சிகள் மாறி இருக்கின்றன; ஆனால் புடவை மீதான வெறுப்பாக இல்லாமல், மேற்கத்திய ஆடை மோகம் அதற்குக் காரணமாக இருக்கிறது. நாகரிகம் என்பதே சுழற்சி தானே?