கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்: நூல் வெளியீட்டு விழா

வரலாற்று ஆசிரியரும், கல்வெட்டு நிபுணருமான டாக்டர் எம்.எல்.ராஜா எழுதிய, 'கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்' என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவ. 25 ஆம் தேதி நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி நூலை வெளியிட்டார். அதுகுறித்த செய்தி இது…

ஹரன் விருது பெற்றார் வ.மு.முரளி

வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையமும் ஸ்ரீ டிவியும் இணைந்து நடத்திய வீரவணக்க நாள் மற்றும் சபதமேற்பு நாள் விழா கடந்த சனிக்கிழமையன்று (14.08.2025) மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளிக்கு பி.ஆர்.ஹரன் நினைவு விருது வழங்கப்பட்டது.

வ.மு.முரளிக்கு ஹரன் நினைவு விருது!

ஸ்ரீ டி.வி.யின் பி.ஆர்.ஹரன் நினைவு விருது வழங்கும் விழா அழைப்பிதழ் தொடர்பான செய்தி இது...

சில பயணங்கள், சில பதிவுகள்: நூல் அறிமுக விழா

கோவை புத்தகத் திருவிழாவில் படைப்பாளர்கள் சங்கமம் அமைத்திருந்த அரங்கில், திரு. திராவிடமாயை சுப்பு அவர்களின் ‘சில பயணங்கள், சில பதிவுகள்’ நூல் விற்பனையானது. அதுதொடர்பான அறிமுகக் கூட்டம் 20.07.2025, ஞாயிற்றுக்கிழமை, புத்தகத் திருவிழா அரங்கில் நடைபெற்றது. அதன் முழுமையான கானொலிப் பதிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன....

சென்னை படைப்பாளர்கள் சங்கமம்: ஆர்கனைசர் செய்தி

ஆங்கில வார இதழான ‘ஆர்கனைசர்’ (18.06.2025) இல், சென்னையில் ஜூன் 15இல் நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. செய்தியாளர்: திரு. டி.எஸ்.வெங்கடேசன். அச்செய்தி இங்கே...

மாவீரன் பலிதானமான மண்ணில்….

ஆஷ் கொலை ஆங்கிலேய அரசை அதிர வைத்தது. வஉ.சி, திலகர், பாரதி, அரவிந்தர் போன்ற தீவிர தேசியவாதிகளை இம்சித்துவந்த ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் வாஞ்சி. அவர் உயிர்நீத்த ரயில் நிலையத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தேசிய சிந்தனைப் பேரவை களம் இறங்கியுள்ளது....

தேசியத்தின் உரத்த குரல்- கோவை படைப்பாளர்கள் சங்கமம்!

கோவையில் ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கமே என்பதை நிலைநாட்டும் வகையில் சிறப்புற அமைந்திருந்தது. கோவையின் முன்னணி எழுத்தாளர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, பஹல்காம் படுகொலையிலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் பலியான நமது சகோதரர்களுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதுடன், தேசியத்தின் உரத்த குரலாக ஒலித்தது.

படைவீரர்களைப் பாராட்டும் கோவை படைப்பாளர்கள் சங்கமம்!

கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள்  ‘கோவை படைப்பாளர்களின் சங்கமம்’ என்ற பெயரில் 25.05.2025 அன்று கோவையில் கூடி, ஒருமித்த குரலில் வெளியிட்ட தீர்மானம் இது…

கோவையில் படைப்பாளர்கள் சங்கமம்

‘ஆபரேஷன் சிந்தூர்’ யுத்த நடவடிக்கையில் வெற்றி சாகசம் படைத்த நமது படைவீரர்களைப் பாராட்டும் விதமாக, கோவையில் இன்று மாலை படைப்பாளர்கள் சங்கமத்தின் சார்பில் நன்றி நவிலும் விழா நடை பெறுகிறது. அது தொடர்பான அழைப்பிதழ் இங்கே...

காரிருள் அகன்று கிழக்கு வெளுக்கிறது!

தேசிய சிந்தனையுடன் கூடிய நூல்களை வெளியிட்டு வரும் விஜயபாரதம் பிரசுரத்தின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையில் ஏப். 13-ஆம் தேதி மாலை நடைபெற்றது. சென்னை, நாரதகான சபாவின் சிற்றரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், உவேசா, பாரதி விருதுகள் நால்வருக்கு வழங்கப்பட்டன. அந்த விழாவின் செய்தித் தொகுப்பு இங்கே...

எழுத்தாளர்கள் பத்மன், அருட்செல்வப்பேரரசனுக்கு பாரதி விருது!

சென்னையில் நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரத்தின் ஆண்டு விழாவில், தமிழ் எழுத்தாளர்கள் பத்மன் (எ) நா.அனந்தபதமநாபன், செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்பட்டது.

இரு எழுத்தாளர்களுக்கு பாரதி விருது

பொருள் புதிது தளத்தின் தோழமை அமைப்பான ‘விஜயபாரதம் பிரசுரம்’ நிறுவனம், இந்த ஆண்டுமுதல் பாரதி விருதுகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. நமது தளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்கள் திரு. நா.அனந்தபத்மநாபன் (பத்மன்), திரு. செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோர் முறையே இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

ஓர் அழைப்பிதழ்…

நமது ‘பொருள் புதிது’ இணையதளத்தில் வெளியான இரு தொடர்கள் நூல் வடிவம் பெற்று, விஜயதசமி அன்று வெளியாவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்த நூல்களின் வெளியீட்டு விழாவை திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளை அமைப்பினர் விஜயதசமியன்று (24.10.2023) சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதன் அழைப்பிதழ் இங்கே இணைக்கப்பட்டுள்ளது...

PM Modiji’s Speech at Sri Ramkrishna Math, Chennai

PM’s address at 125th Anniversary celebrations of Shri Ramakrishna Math in Mylapore, today (08.04.2023)...