மகாகவி பாரதியின் வாழ்வில்…

மகாகவி பாரதியின் நினைவுதினத்தை ஒட்டி, அவரது வாழ்க்கைச் சுருக்கம் காலவரிசையில் இங்கே சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளது...

அந்த 15 நாட்கள் – நூல் அறிமுகம்

திரு. பிரசாந்த் போலே எழுதிய அந்த 15 நாட்கள் என்னும் இந்த நூல், நாடு விடுதலை அடைவதற்கு முந்தைய 15 நாட்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை தொகுத்திருக்கிறது.இந்நூலின் முன்னுரை இங்கு நூல் அறிமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது...

காங்கிரஸ் கொள்கைகளை வடிவமைத்த தமிழர்!

செய்யாத தவறுக்குத் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து ஆங்கிலேய அரசிடம் வாதிட்டு நஷ்டஈடு பெற்றவர், ‘சேலத்து நாயகன்’ எனவும் ‘தென்னிந்தியாவின் சிங்கம்’ எனவும் பாராட்டப்பட்ட விடுதலை வீரர், சேலம் சி.விஜயராகவாச்சாரியார் என்றழைக்கப்படும் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார். இவர் தான் காங்கிரஸ் அமைப்பின் ஆரம்பகால கொள்கைகளை வடிவமைத்தவர்!

பற்றி எரிகிறது பங்களாதேஷ்!

மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்படுவதால், பங்களாதேஷிலிருந்து ஹிந்துக்கள் அகதிகளாக வந்தால் அவர்களை நம்நாடு அரவணைக்க வேண்டும். ஏனெனில் ஹிந்துக்களுக்கு ஒரே தாயகம் பாரதம் தான். இந்தக் கண்னோட்டத்துடன் தான் இந்திய குடியுரிமை திருத்த சட்டம்-2019 கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

திராவிட கேள்வியும் தேசிய பதிலும் – நூல் மதிப்புரை

தமிழகத்தில் வெகுஜன ஊடகங்களில் பணிபுரிவோர் பலரும் திராவிட அரசியல் கருத்தாக்கங்களுக்கு தங்களை அடியாட்களாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் ஊடகவெளியில் விதைக்கும் பலவிதமான நச்சுக் கருத்துகளுக்கு தனது நூலில் எளிய பதில்களை தர்க்கரீதியாகவும், சில இடங்களில் புரிய வேண்டியவர்களுக்குப் புரியவைக்கும் விதமாக குதர்க்கரீதியாகவும் கூறுகிறார் இந்நூலாசிரியர் திரு. பா.பிரபாகரன்....

எதிர்கட்சிகளின் பகல் கனவும் பாஜகவின் நிதானமும்…

தேர்தலுக்குப் பிந்தைய நாடாளுமன்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெளிப்படுத்தி வரும் அநாகரிக நடத்தைகளைக் காணும்போது, ஜனநாயகம் மீது அக்கறை கொண்டவர்களுக்கு வேதனை ஏற்படுவது இயல்பே. மூன்றாவது முறையாக தோல்வியைத் தழுவியதை எதிர்க்கட்சிகளால் இன்னமும் கூட நம்ப முடியவில்லை.

தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர் – நூல் அறிமுகம்

ஒவ்வொரு பாடலுக்கும், பதவுரை, விளக்கவுரை ஆகியவற்றுடன், ஆழ்வார்கள் வாக்கு என்ற ஒப்பீடுப் பகுதியையும் இணைத்து, முப்பரிமாணத்தில் நூலைத் தொகுத்திருப்பது மிகவும் சிறப்பு. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நூலாசிரியரின் தேர்ச்சி ஒப்பீடுகளில் வெளிப்படுகிறது. அந்த வகையில்,  ‘தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர்’ என்ற இந்நூல், ஆழ்வார்களின் பாசுரங்களின் துணையுடன் மிளிர்கிறது.

சங்கரநயினார் கோயில் தலபுராணம் – நூல் மதிப்புரை

இந்த நூல் இதுவரை பல பதிப்புகள் கண்டிருந்தாலும் செம்மையான பதிப்புக் காணவில்லை என்ற குறையை நீக்கி இருக்கிறது குகபதி பதிப்பகம். கீழவயலி அம்பிகைதாசன் அளித்த உரையுடன் சங்கரநயினார் கோயில் புராணத்தை மீளாக்கம் செய்திருக்கும் நண்பர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுபோலவே ஒவ்வொரு தலபுராணமும் முழுமையாக அச்சிடப்பட்டால், நமது தமிழ் மொழி, மாநில வரலாறு செழுமையுறும் என்பதில் ஐயமில்லை.

கோமதி சதரத்ன மாலை- நூல் அறிமுகம்

சங்கரன்கோவில் திருத்தலத்தில் உறையும் தேவி  கோமதி அம்மன். சைவ - வைணவ ஒற்றுமைக்குப் பாலமாகத் திகழும் இத்தலத்து அம்மையை தமது செந்தமிழால் பாடிப் பரவுகிறார், சென்ற நூற்றாண்டின் மையத்தில் சைவத்தமிழ் வளர்த்த சைவ சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளையவர்கள். கோமதி அம்மனின் பெருமைகளை விவரிக்கும் இந்த நூறு பாடல்களும் ரத்தினம் போல மிளிர்கின்றன.

பேராபுரி மஹாத்ம்யம்- நூல் அறிமுகம்

தென்திருப்பேரை தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்த தலம். இத்தலத்து இறைவனான மகரநெடுங்குழைக்காதரை அவர்கள் பலரும் பாடி மகிழ்ந்திருக்கின்றனர். அவ்வாறு  எழுதப்பட்ட பல தமிழ் இலக்கியங்களையும் மிகவும் கடினமாக உழைத்து, ஒன்றுசேர்த்து, அரிய, புனிதமான படையலாக அளித்திருக்கிறார் திருவாளர் மகர சடகோபன்.

சங்க செயல்முறையின் வளர்ச்சி – நூல் அறிமுகம்

சங்கம்- அமைப்பு; ஸ்வயம்சேவகர் - உறுப்பினர்; ஷாகா - அடிப்படை செயல்முறை. இந்த சங்க திட்டம் படிப்படியாக வளர்ந்து கொண்டே செல்வதை இந்நூலில் காணும் போது மகிழ்கிறோம். ஒரு மொட்டு  பூவாக மலர்வது போல,  ஒரு சிசு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வது போல, சங்க செயல்முறை இயல்பாக வளர்ந்தது. இதனை விவரிக்கிறது இந்நூல். ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில், இந்த நூல் வெளிவருவது மிகவும் சிறப்பு.

நூற்றெட்டு திருப்பதி களஞ்சியம்- நூல் அறிமுகம்

வைணவர்கள் போற்றி வழிபடும் தலங்களில் பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டவை (மங்களா சாசனம் செய்யப்பட்டவை) 108 திவ்ய தேசங்களாகும். இந்த 108 திருப்பதிகளுக்கும் சென்று வழிபடுவது ஒவ்வொரு வைணவரின் லட்சியக் கனவாகும். இந்த தலங்கள் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நூல், அவற்றிலிருந்து வேறுபட்டது. 108 திவ்ய தேசங்கள் குறித்த இலக்கியப் பதிவுகள் அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்திருக்கும் அற்புத முயற்சி இது.

அர்ச்சகக்குடி காத்த ஆசானின் வரலாறு

ஆலய வழிபாட்டின் அருமை பெருமை உணர்ந்தவர்களுக்கு அர்ச்சகக் குடியின் சிரமங்கள் தெரியும்; அர்ச்சகர்களுக்கு அவர்களும் உடனிருந்து உதவுவார்கள். அதற்கு பழனி ஈசான சிவாசாரியார் போன்றவர்களின் சரிதங்கள் இன்றைய தலைமுறைக்கு சொல்லப்பட  வேண்டும். இவரைப் போன்றவர்களின் அரும் முயற்சியால்தான் அர்ச்சகக் குடிகளுக்குத் தேவையான சிவாகமப் பயிற்சியும் அதற்குத் தேவையான அச்சிட்ட நூல்களும் வாழையடி வாழையாகத் தொடர்கின்றன.

பாரதியின் கருத்துப்படங்கள்- அற்புதமான அரிய ஆவணம்

மகாகவி பாரதியின் படைப்புகளில் மிகவும் முக்கியமான தொகுப்பு, பாரதியின் கருத்துப் படங்கள் என்ற இந்த அற்புதமான தொகுப்பாகும். ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி அறிமுகம் செய்த கருத்துப்படங்கள் குறித்த விவரங்களுடன், அரிதின் முயன்று சேகரித்த கருத்துப்படங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.

கருணைமிகு திருக்கருவையம்பதி- இனிய தொகுப்பு

கரிவலம்வந்தநல்லூரின் தலப்பெருமைகள், இத்தலம் குறித்து எழுதப்பட்ட இலக்கியங்கள் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ள இனிய நூல், ‘கருணைமிகு திருக்கருவையம்பதி’. திருக்கருவையம்பதி என்பது கரிவலம்வந்தநல்லூரின் இலக்கியப் பெயர். தங்கள் ஊர் சிவன் கோயிலின் பாரம்பரிய வரலாற்றையும் தற்போதைய நடைமுறைகளையும் சீராகத் தொகுத்து அளித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.