திருப்பரங்குன்றம்: சில குமுறல்கள்- 2

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் பக்தர்களின் கோரிக்கையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்துமாறு தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை, தமிழக அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் அப்பட்டமாக மீறியுள்ளன. அராஜகமான செயல்பாட்டின் மூலமாக திமுக அரசு தான் என்றும் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சில கண்டனங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்... இது பகுதி - 2

கம்பன் விழாவில் வம்பனின் பேச்சு- பகுதி: 3

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது மூன்றாம் பகுதி…

வங்கத்தின் குரல்கள்

அண்டைநாடான பங்களாதேஷில் அரசியல் நிலையற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறை வடிவெடுத்ததால் அவர் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். அங்கு ஆட்சி மாற்றம் ராணுவ உதவியுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அங்குள்ள ஹிந்து மக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதுதொடர்பாக தமது வேதனையைப் பதிவு செய்யும் இரு முகநூல் பதிவுகள் இங்கே தொகுக்கப்படுகின்றன...

சர்க்கரை இல்லாத பொங்கலா?

பச்சரிசியை மட்டும் பானையிலிட்டுக் கிண்டினால் பொங்கலாகி விடுமா? சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை, ஏலம் இல்லாமல் பொங்கலா? அப்படித்தான் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக திராவிட மாடல் ஆட்சியை நடத்துபவரின் ஆதரவாளர்களும், அவரை ஆட்சியில் அமர்த்திய மாற்று மதத்தவர்களும் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அதாவது தைப் பொங்கல் இந்துக்களின் பண்டிகை அல்லவாம்… தமிழர்களின் பண்டிகையாம்… அதற்காக பொங்கலின் வடிவத்தை மாற்ற - அதன்  ஆன்மிக உணர்வையே மழுங்கடிக்க - முயல்கிறார்கள் மடையர்கள். அவர்களுக்கான பதிலே இக் கட்டுரைகள்…

காந்தாரா: வனக் கடவுளின் முழக்கம்

அண்டை மாநிலத்தில் கன்னடத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம், மிகக் குறுகிய நாட்களில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பாராட்டப்பட்டு பேசுபொருளாகி இருக்கிறது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது போல, எந்த விளம்பரமும் இல்லாமலே, அதீத ஊடக வெளிச்சம் இல்லாமலே, இதைச் சாதித்திருக்கிறது, ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காந்தாரா’. தமிழ்த் திரையுலகின் ‘புள்ளிங்கோ’க்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்; பொன்னியின் செல்வன் எடுப்பதற்கு முன் இயக்குநர் மணிரத்னம் பார்த்திருக்க வேண்டிய திரைப்படம் இது. சமகாலத் திரையுலகில் ஒரு பெரும் திசைமாற்றத்தை வெளிப்படுத்தும் கருவியாக உள்ளதால், இப்படம் குறித்த விமர்சனங்கள் இங்கு வெளியாகின்றன.