எனது முற்றத்தில் – 5

மதுரை வட்டாரத்தில் மக்களின் குல சாமி மதுரைவீரன். மதுரையை  அடுத்த மேலூரில் உள்ள மதுரைவீரன் கோயில்,  சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஊர் மக்கள் ஒன்றுகூடி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்கள். கோயிலைத் தொடாமல் சாலை விரிவாக்கம் நிறைவேற வேண்டுமானால் நூறு வீடுகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.  மக்கள் துளிக்கூட தயங்காமல் தங்கள் வீடுகளை இடித்து சாலைக்கு வழி விடுவதாக அறிவித்ததோடு நில்லாமல் தங்கள் வீடுகளை இடிக்கவும் தொடங்கினார்கள். தங்களுடைய குல சாமி கோயில் மீது யாரும் கைவைக்கக் கூடாது என்பது அந்த தியாக மூர்த்திகளின் திட உறுதி....

எனது முற்றத்தில்… 4

எல்.கே.அத்வானி மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சராக இருந்தபோது இந்தோனேஷியாவில் இருந்து வந்த ஒரு கலாச்சாரக்  குழுவினர் அவரைச் சந்தித்தார்கள். அனைவரும் முஸ்லிம்கள். அதெப்படி ராமாயண நாட்டிய நாடகம் எல்லாம் நடத்துகிறீர்கள் என்று அத்வானி கேட்டபோது "நாங்கள் மதம் மாறியிருக்கலாம்; ஆனால் எங்கள்  மூதாதையர்களை மாற்றிக் கொள்ளவில்லை. ராமர் எங்கள்  மூதாதை" என்று விளக்கினார்கள்.  இந்தோனேசிய அரசே  கரன்சி நோட்டில் கணபதி படம் அச்சிட்டு வருகிறது; கருடா ஏர்வேஸ் என்று தனது விமானக் கம்பெனிக்குப் பெயர் என ஹிந்து அடையாளங்களை விருப்பத்தோடு ஏற்கிறது. அந்த நாட்டு மக்கள் மனதில் ஹிந்து என்றால் முகத்தை திருப்பிக் கொள்ளும்படி சொல்லும் விஷம் எப்படி பரவும்?... 

எனது  முற்றத்தில்…  3

‘எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’ என்று பாரதி பாடிவிட்டுப் போயிருக்கலாம்.  பாரதி சொல்வது சரி என்று  அத்தாட்சி தருபவர் யார் தெரியுமா,  தமிழக சலவைத் தொழிலாளர்.  பல்வேறு தொழில்கள் செய்வோர் ஆயுத பூஜை அன்று தங்கள் தொழில் கருவியை பூஜித்து வருகிறார்கள்.  சலவைத் தொழில் செய்பவர்?  ஆற்றங்கரை படித்துறை தான் அவரது தொழில் கருவி. எனவே  அவர் வைக்கும் பொங்கல் ’துறைப் பொங்கல்’ என்கிறது தமிழ் லெக்சிகன் என்ற பேரகராதி...

எனது முற்றத்தில்… 2

எல்லா மரம் செடி கொடிகளையும் எல்லோருக்கும் அடையாளம் காண முடிகிறதா என்ன?  ராமாயணத்தில் அனுமனுக்கும்தான் தெரியவில்லை. அதனால்தானே சஞ்சீவி பர்வதத்தையே தூக்கிக்கொண்டு போனார்? ஊர்ப்புறங்களில் தடுக்கி விழுந்தால் எருக்கஞ்செடி,  தும்பை,  குப்பைமேனி தலைகாட்டும். எல்லாம்  மருந்துக்கு ஆகும்.  மருந்துக்கு ஆகாதது என்று ஏதாவது உண்டா என்ன?  இல்லை என்கிறது "நாஸ்தி மூலம்  அனவ்ஷதம்" (ஔடதத்துக்கு ஆகாத  வேர் இல்லை) என்ற பழைய சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று. தகுதி இல்லாதவர் என்று யாரும் கிடையாது என்ற கருத்தை வலியுறுத்த வந்த ஸ்லோகம் அது....

எனது முற்றத்தில்…. 1

திரு. எஸ்.எஸ்.மகாதேவன், தமிழ் இதழியல் உலகின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தியாகபூமி, இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ், விஜயபாரதம் பத்திரிகைகளில் பணியாற்றியவர்; நமது இணையதளத்தின் வழிகாட்டி. அவரது வாழ்வனுபவங்கள் இத்தளத்தில் தொடராக வெளிவருகின்றன…