பஹல்காம் படுகொலையை நிகழ்த்திய பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசும் ராணுவமும் மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாடே ஒன்றுபட்டு நிற்கும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அபஸ்வரமாக ‘எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் ஈனக்கும்பல் ஒன்று ஒரு வெறுப்பறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதற்கு ஆதரவும் தெரிவித்திருக்கின்றனர், எழுத்தாளர் என்று சொல்லித் திரிவோர். ‘தமுஎகச’ என்ற இடதுசாரி அமைப்பின் முன்னெடுப்பில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையை நாம் ஏற்கவில்லை. எனினும், இத்தகைய புல்லுருவிகள் நம்முடன் இருப்பதை பதிவு செய்து வைக்க வேண்டும் என்பதற்காக, அந்த அறிக்கையை இங்கு வெளியிடுகிறோம். இதற்கு எதிரான கண்டனங்கள் தொடர்ந்து நமது தளத்தில் வெளிவரும்….
Tag: ஆசிரியர் குழு
விழிப்புடன் இருப்போம்! தேசம் காப்போம்!
நாடு என்பது நாம் அனைவருமே தான். மத அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் போன்றோர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்யும் விஷமப் பிரசாரம் வென்றுவிட நாம் அனுமதிக்கக் கூடாது. தேசம் காப்பது விழிப்புணர்வுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும் கூட.
நமது படைப்பிரிவுகளின் முழக்கங்கள்
அண்மையில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தில் ”ஜெய் பஜ்ரங் பலி” என்று ராணுவ வீரர்கள் கோஷமிடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதற்கு சில சிக்யூலர்கள் எதிர்ப்பு தெரிவித்து புலம்பி இருந்தனர். அவர்களுக்காகவே இந்தப் பதிவு...
அந்த 15 நாட்கள் – நூல் அறிமுகம்
திரு. பிரசாந்த் போலே எழுதிய அந்த 15 நாட்கள் என்னும் இந்த நூல், நாடு விடுதலை அடைவதற்கு முந்தைய 15 நாட்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை தொகுத்திருக்கிறது.இந்நூலின் முன்னுரை இங்கு நூல் அறிமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது...
எழுத்தாளர்கள் பத்மன், அருட்செல்வப்பேரரசனுக்கு பாரதி விருது!
சென்னையில் நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரத்தின் ஆண்டு விழாவில், தமிழ் எழுத்தாளர்கள் பத்மன் (எ) நா.அனந்தபதமநாபன், செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்பட்டது.
இரு எழுத்தாளர்களுக்கு பாரதி விருது
பொருள் புதிது தளத்தின் தோழமை அமைப்பான ‘விஜயபாரதம் பிரசுரம்’ நிறுவனம், இந்த ஆண்டுமுதல் பாரதி விருதுகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. நமது தளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்கள் திரு. நா.அனந்தபத்மநாபன் (பத்மன்), திரு. செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோர் முறையே இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
கழிசடைக்கு விருதா? கலைஞர்கள் கண்டனம்
கர்நாடக சங்கீத கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‛சங்கீத கலாநிதி' விருது வழங்குவதற்கு இசைக் கலைஞர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என உறுதியுடன் அறிவித்துள்ளனர். அவருக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இசைக்கலைஞர்கள் பலரும் துணிவுடன் முன்வந்து, ‘இந்த ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’ என்று அறிவித்துள்ளனர். வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, ஹரிகதா சொற்பொழிவாளர்கள் துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி, பாடகர்களான திருச்சூர் சகோதரர்கள் (கிருஷ்ண மோகன், ராம்குமார் மோகன்), சித்திரவீணைக் கலைஞர் ரவிகிரண், பாலக்காடு மணி ஐயர் குடும்பம், பெங்களூர் மிருதங்க இசைக் கலைஞர் அர்ஜுன் குமார் ஆகியோர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இப்பட்டியலில் மேலும் பலர் இணைந்து வருகின்றனர்.
சி.ஏ.ஏ.: மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை
சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது மற்றும் அதன்மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் தஞ்சமடைந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பே இல்லை.
நடைமுறைக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்!
குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 நாடு முழுவதும் 2024 மார்ச் 11ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலமாக, மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு அகதிகளாக இந்தியா வந்தபோதும், பல்லாண்டுகளாக இந்தியக் குடியுரிமை பெற முடியாமல் ஏங்கித் தவித்த லட்சக் கணக்கான மக்கள் பயன் பெற வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சநாதன தர்மம் வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு- மேலும் இரு செய்திகள்
சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக உளறிய திமுகவின் இளவரசர் உதயநிதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இது தொடர்பான மேலும் இரு செய்திகள் இங்கே…
சநாதன விவகாரம்: உதயநிதிக்கு நீதிமன்றங்கள் குட்டு
சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக உளறிய திமுகவின் இளவரசர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் குட்டு வைத்துள்ளன. இது தொடர்பான இரு செய்திகள் இங்கே…
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: நூல் அறிமுகம்
தமிழர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அற்புதமான தமிழ் இலக்கிய ஞானக் கருவூலங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்து, இனிய மாலை போலத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சேக்கிழான். இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், இடையறாத வன்மையையும், பரந்து விரிந்த தன்மையையும், செங்கோலின் நன்மையையும் வெளிப்படுத்துகிறது.
என்றும் வாழும் சநாதன தர்மம்: நூல் அறிமுகம்
சநாதனம் சர்ச்சையை ஒட்டி விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள அற்புதமான நூல் இது. இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறப்பு மிக்க 37 பதிவுகள், சநாதனத்தின் பன்முகத்தையும் அதன் ஒருங்கிணைந்த தன்மையையும் காட்டுகின்றன. தமிழ் கூறும் சநாதனம், சநாதனம் குறித்த சான்றோரின் அமுதமொழிகள் ஆகியவை ‘என்றும் வாழும் சநாதன தர்மம்’ நூலின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. நமது இணையதளத்தில் வெளியான கட்டுரைகள் அழகிய நூல் வடிவம் பெறுவது மிகவும் பெருமை அளிக்கிறது....
வாழும் சனாதனம்!- 15
தற்போதைய அவசர உலகில், எந்த ஒரு விஷயமானாலும் உடனடியாக அறிவதற்கான தளமாக விக்கிபீடியா உள்ளது. இந்த விக்கிபீடியாவில் ‘சனாதனம்’ குறித்து என்ன கூறப்பட்டிருகிறது? உலக அளவிலான ஞானக் களஞ்சியமான விக்கிபீடியா இந்து மதமே சனாதனம் என்று கூறுகிறது. தமிழகத்தில் சனாதனம் குறித்து சில தற்குறிகள் செய்யும் இழிந்த பிரசாரத்திற்கு விக்கிபீடியாவே பதில் கூறுகிறது. இனியேனும் அரைகுறை மேதாவிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
வாழும் சனாதனம்!- 14
சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு கும்பல் தமிழகத்தில் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், அவர்களே நம்புகிற ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’ கலைக் களஞ்சியத்தில் ‘சனாதனம்’ குறித்து என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை இங்கே எடுத்துக் காட்டுகிறோம். இனியேனும் அரைகுறை மேதாவிகள் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்....