அரவிந்தர் கிறிஸ்தவரான கதை

அரவிந்தர் யோக மார்க்கத்தில் பயணித்தபோது இறைவழிபாட்டில் ஈடுபட்டவர் அல்லர். துர்க்கை துதியை அவர் எழுதியிருந்தாலும், அது இறைவியைத்  துதிப்பதற்காக  எழுதப்பட்டதல்ல; பாரத தேசம் விடுதலை பெற வேண்டும்,  அதற்கான சக்தியை பாரத மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக  எழுதினார். அவர் வழிபடுவதற்காக கோயிலுக்குச் சென்றதில்லை; சடங்குகளைச் செய்தவர் அல்ல; மாறாக பகட்டான இறை பக்தியை கிண்டல் செய்தவர்.

அன்பு மனைவிக்கு அரவிந்தர் எழுதியது…

பாரதம் வந்த உடனேயே அவருக்கு இங்குள்ள அரசியல் நிலை முழுமையாகப் புரிந்தது. காங்கிரஸ் சில மிதவாத தலைவர்களின் பிடியில் இருந்தது. பெரிய, பரந்த பாரத சமுதாயத்திற்கு காங்கிரஸ் என்ற சிறு அமைப்பின் வழிகாட்டுதலும் பங்களிப்பும் போதுமானதாக இல்லை. ஆங்கில அரசுக்கு எதிராக அது எழுப்பிய குரல் வலிமையற்றதாகவும் அற்பமானதாகவும் இருந்தது. எனவே புதிய தலைமையை உருவாக்கவும், சமுதாயம் முழுமையையும் ஒருங்கிணைத்து போராடவும் தயார்ப்படுத்த வேண்டி இருந்தது. அப்போது பம்பாயில் இருந்து வெளிவந்த ‘ஹிந்து பிரகாஷ்’ (ஹிந்து பேரொளி) என்ற பத்திரிகையில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற தலைப்பில் அரவிந்தர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அதில் காங்கிரசை கடுமையாகத் தாக்கி எழுதினார்....

அரவிந்தர் ஐ.சி.எஸ். ஆகாதது ஏன்?

ஐ.சி.எஸ். தேர்வில் இரண்டு விஷயங்களில் அரவிந்த கோஷுக்கு பிரச்னை ஏற்பட்டது. ஒன்று உடல் ஆரோக்கியம்; மற்றது குதிரை சவாரி. உடல் ஆரோக்கியம் பிரச்னையில் பின்னர் அவர் தேர்வு பெற்றார். ஆனால் குதிரை சவாரியில்? அதுபற்றி பிற்காலத்தில் அவரே கூறியுள்ளார்...

கவி அரவிந்தரும் பத்திரிகையாளர் அரவிந்தரும்

லண்டனில் அவர் இருந்தபோது உலகெங்கும் எழுந்த விடுதலை வேட்கை, புரட்சிகள் பற்றி செய்திகள் வந்தபோது, தானும் அதில் பங்காற்ற வேண்டியுள்ளதை அரவிந்தர் புரிந்து கொண்டார். பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரிட வேண்டும் என அவர் ஆழமாகவும் உறுதியாகவும் நம்பி இருந்தார். இது ஐரிஸ் விடுதலை போராளியான சார்லஸ் ஸ்டீவர்ட் பார்னெல் என்பவரின் நினைவாஞ்சலியாக அரவிந்தர் எழுதிய கவிதையே சாட்சி கூறுகிறது.....

‘விஜயா’வில் அரவிந்தர்

பாரதியாரின் பத்திரிகைப் பணி என்றதும் ‘இந்தியா’ வாரஇதழும்  ‘சுதேசமித்திர’னும் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அவர் ஆசிரியராக இருந்தது ‘விஜயா’ என்ற நாளேட்டிற்குத் தான். சுமார் எட்டு மாதங்கள் பாரதியார் அதன் ஆசிரியராக இருந்துள்ளார். அரவிந்தர் மீது பெரும் மதிப்பு கொண்ட பாரதியார் ‘விஜயா’ பத்திரிகை சார்பாக அவரை நேர்காணல் செய்ய ஒருவரை கொல்கத்தாவுக்கு அனுப்பினார். விஜயா பத்திரிகையில் அது வெளிவந்தது. அரவிந்தரின் கூரிய அறிவு, தீவிர தேசபக்தி, ஆழ்ந்த இறை நம்பிக்கை ஆகியவை அதில் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. பேட்டி காண்பவரின் அவநம்பிக்கை, அது பற்றிய பாரதியாரின் கேலி எல்லாம் அதில் வெளிப்படுகின்றன. அந்த நேர்காணல் இங்கு முழுமையாக:

உத்தர்பாரா பேருரை உரைப்பது என்ன?

1909லேயே இந்தியா சுதந்திரம் பெறும் என்றும் உறுதியாக ஸ்ரீஅரவிந்தர் கூறியுள்ளார். அது, பிளவுபட்ட, அரசியல் சுதந்திரமாக இல்லாமல் பரிபூரண சுதந்திரமாக அமைய வேண்டும்; அந்த சுதந்திரம் இந்தியாவுக்காக அல்லாமல் மனிதகுல மேன்மைக்காக, உலகம் முழுமையாக்காக இருக்க வேண்டும்; அதற்காகத் தான் பாடுபட வேண்டும் என்பது இறைவன் தனக்கிட்ட ஆணை என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்....

போரும் அமைதியும் அரவிந்தரும் 

பூமி என்ற கோளின் பரிணாம வரலாற்றுப் பின்புலத்தில் மனித வரலாற்றைக் கண்ட தீர்க்கதரிசி ஸ்ரீ அரவிந்தர். சமூகப் பரிணாமம் பற்றிப் பேசும் டார்வின் அல்லது மார்க்ஸின் கொள்கைகளின் அடிப்படையில் பரிணாம தத்துவத்தை முன்வைத்த பல தத்துவவாதிகள் மேற்கத்திய நாடுகளில் தோன்றியுள்ளனர். என்றபோதிலும் (விழிப்பு) உணர்வு என்ற ரீதியில் பரிணாம வளர்ச்சியை அணுகியவர்  ஸ்ரீ அரவிந்தர்.... ஸ்ரீ அரவிந்தர் போருக்கான உளவியல் காரணங்களைப் பற்றி எழுதி உள்ளவை இப்போது நடக்கும் ரஷ்ய - உக்ரைன் யுத்தம் பற்றி நமக்கு சரியான புரிதலை அளிக்குமா?