ராமாயண சாரம் (9-10)

அயோத்தி நீங்கிய ராமனை இளவல் பரதன் சந்திக்கும் காட்சி மிகவும் உணர்ச்சிகரமானது. அப்போது பரதனுக்கும் ராமனுக்கும் ஒரு அழகான உரையாடல் நடக்கிறது. கம்பனின், மிகச் சிறந்த, உரையாடல்களில் இதுவும் ஒன்று.

ராமாயண சாரம் (6-8)

ராமன்  “அது அரக்கர் வாழும் காடு; மலைகளைக் கடக்க வேண்டி வரும். உன் மலர்ப்பாதங்கள் அதைத் தாங்காது. உன் பாதங்கள் குளிர்ந்த அரக்குண்ட செம்பஞ்சு போன்றது. வனத்தில் நடப்பது உனக்கு கடினம்” என்கிறான். சீதையோ மனம் வெதும்பி  “நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?” என்று குமுறுகிறாள்.

ராமாயண சாரம் (4-5)

ராமச்சந்திரனே புவி ஆளத் தகும் என்றெண்ணி அழைத்து அவன் மார்பு இந்த பூபாரத்தை தாங்குமா என்று தன் மார்போடு அணைப்பது போல ராமனின் மார்பை அளந்து பார்க்கிறான் தசரத சக்கரவர்த்தி. 56 இன்ச் இருக்குமா என்று அளந்து பார்த்திருப்பானோ தசரதன்! அளந்ததில் சரியாக இருந்தது.... எழுத்தாளர் திரு. சண்முகநாதனின் ‘ராமாயண சாரம்’ தொடர்...

ராமாயண சாரம் (1-3)

எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவரும் இனிய தொடர் இது. ஆடிமாதம் முழுவதும் வெளியாகவுள்ள இத்தொடரின் பகுதிகள் நமது தளத்திலும் அவ்வப்போது வெளியாகும்…

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 21

காலந்தோறும் நமது தாய்மொழி எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கான நிகழ் சாட்சியமாகவே, நமது ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ என்ற தேடலைக் கூற முடியும். நாட்டு மக்கள் நலம் பெற உதவும் மன்னரின் செங்கோலுக்கு நமது இலக்கியங்கள் சுமார் 2,500 ஆண்டுகளாக அளித்த முக்கியத்துவம் கடந்துபோன அத்தியாயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் நிறைவாக, நல்லாட்சி, செங்கோல் குறித்து, தமிழ்த்தாயின் தவப்புதல்வர் மகாகவி பாரதியின் கருத்து என்னவாக இருந்தது என்று அறிவோம்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 20

தமிழ் இலக்கிய- இலக்கணங்களில் செங்கோலைத் தேடும் நமது இலக்கிய யாத்திரையின் நிறைவுப் பகுதி மகாகவி பாரதியே. எனினும் அவருக்கு முன்னோடியாக விளங்கியவர், தமிழகத்தின் தவச்செம்மல், சநாதனம் காக்க உதித்த அறச்செம்மலான வள்ளலாரே.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 19

நமது நாட்டில், நல்லரசன் ஆளும் நாட்டில் மாதம் மும்மாரி பொழியும் என்ற நம்பிக்கை பாரம்பரியமாக நிலவுகிறது. செங்கோலாட்சியின் அடையாளமே மாதம் மும்மாரி மழை தான் என்கிறது ‘விவேக சிந்தாமணி’ என்னும் பிற்கால நீதிநூல்....

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 18

தமிழ் இலக்கியத்தின் என்றுமுள சீரிளமைக்கு அடையாளமான இனிய பாசுரங்கள் வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் காணப்படுகின்றன. அவற்றில் செங்கோல் ஏந்தி வரும் பாசுரங்கள் சிலவற்றை இங்கே நாம் காணலாம்...

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் -17

நமது தமிழ் மொழியின் வனப்பை மெருகேற்றிய இனிய பாடல்களை சைவர்களின் பன்னிரு திருமுறையும், வைணவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தமும் அளித்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் இறைவனைப் போற்றுவதுடன், அக்கால மக்களின் வாழ்க்கை நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கொண்டுள்ளன. இவற்றில் பன்னிரு திருமுறைகள் குறித்தும், அதில் செங்கோல், நல்லாட்சி தொடர்பான செய்திகள் பயிலும் சில பாடல்களையும் முதலில் காண்போம்.  

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 16

அகப்பாடல்களிலும் கூட செங்கோலையும், செங்கோன்மையையும் வலியுறுத்தும் தமிழ்ப் புலவர்களின் பாங்கு எண்ணி மகிழத் தக்கதாகும். மூவேந்தரைப் புகழும் வகையில் அமைந்த, இலக்கியச் சுவை மிகுந்த சில முத்தொள்ளாயிரம் அகப்பாடல்கள் இங்கே...

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 15

பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகையில் அடங்கிய 11 நீதிநூல்களில் அரசு அறநெறிச் செய்திகள் 9 நூல்களிற் காணப்படுகின்றன. இவற்றில் திருக்குறள் தொடர்பான விரிவான செய்திகளை முதல் இரு அத்தியாயங்களில் பார்த்தோம். பிற 8 நீதி நூல்களின் செங்கோன்மைக் கருத்துகளை இங்கே காண்போம்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 14

மன்னரின் அணிகலன்களான மணிமகுடமும், கூர்மையான வாளும், வெண்கொற்றக்குடையும், செங்கோலும் பொருள் பெறுவது அவர்களின் நடுநிலைமை தவறாத, கோல் கோணாத, மக்களைப் புரக்கும் அருளாட்சியால் தான். இதனை அவர்களின் கரத்தில் ஏந்தி இருக்கும் செங்கோல் அவர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 13

இந்த பரந்த பாரத தேசத்தின் நில எல்லையைத் தீர்மானமாகக் கூறும் புறநானூற்றின் 17ஆம் பாடல், மிகவும் கவனத்திற்குரியது. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நம் நாடு ஒன்றுபட்டு இருந்ததன் அடையாளம் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளதன் ஆதாரம் இது.

பாரதியின் தராசு – உரையாடும் உற்ற நண்பன்

பத்தி எழுதுபவர் எதைப் பற்றி வேண்டுமாயினும், விரிவாகவும், ஆழமாகவும் ஆய்ந்து எழுதுவார்; சில நேரங்களில் நாட்டு நடப்பை போகிற போக்கில் சொல்லிச் செல்வார்; சில நேரங்களில் நகைச்சுவைத் தோரணமாகவும் அந்தப் பத்தி எழுத்து இருப்பதுண்டு. இவை அனைத்திற்கும் முன்னோடியாக பாரதியின் ‘தராசு’ கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- 12

தமிழ் இலக்கியங்களில் அக்கால வரலாற்றை மன்னர் கொடிவழியுடன் பதிவு செய்துள்ள ஒரே நூல், பதிற்றுப்பத்து. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பாடல் இலக்கியமான இந்நூல், சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி, பத்து புலவர்கள் பாடிய பத்துப் பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலில் நல்லாட்சி, செங்கோல் குறித்துப் பயின்றுவரும் பாடல்களைக் காண்போம்...