பாராட்டுக்குரிய புதிய வேலையுறுதி திட்டம்

நூறு நாள் வேலைத் திட்டம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுவந்த, கடந்த டிசம்பர் மாதம் வரை நடைமுறையில் இருந்த  ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம்’ (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.) நிறுத்தப்பட்டு, அதற்கு மாற்றாக, 125 நாட்கள் பயனளிக்கும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம்’ (விபி -ஜி- ராம்-ஜி) என்ற புதிய வேலையுறுதித் திட்டத்தை, 2025, டிச. 16ஆம் தேதியில் இருந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

சீர்திருத்தங்களின் ஆண்டான 2025!

கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியாவைப் பொருத்த மட்டிலும்  சீர்திருத்தங்களின் ஆண்டு என்றே சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, சென்ற ஆண்டில் பல துறைகளில் சத்தமின்றி முக்கியமான சீர்திருத்தங்களை நிகழ்த்தி இருக்கிறது. அதன்மூலமாக, இந்தியப் பொருளாதாரம், சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு, ஆட்சிமுறை ஆகியவற்றில் வலுவான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.