கற்பகம் சந்திரனைப்போல் அவ்வளவு நுட்பமான அறிவுடையவள் அல்ல; அதனால் எந்தப் பாடத்திலும் முதன்மையாக வரவில்லை. ஆனால் செய்வன திருந்தச் செய்யும் பழக்கம் அவளிடம் இருந்தது. என் தங்கையை விட அழகான கையெழுத்து எழுதினாள். புத்தகங்களை மிக ஒழுங்காக வைத்துப் போற்றினாள். சில நாட்களில் என்னுடைய அலமாரியும் மேசையும் இருக்கும் நிலையைப் பார்த்து, “இதென்ன இப்படிக் கன்னா பின்னா என்று வைத்திருக்கிறீர்களே! மணிமேகலை! நீயாவது உன் அண்ணாவுக்காக அடுக்கி ஒழுங்காக வைக்கக் கூடாதா? பலசரக்குக் கடைகூட நன்றாக வைத்திருக்கிறார்களே” என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவாள். மு.வ.வின் அகல்விளக்கு- 8ஆம் அத்தியாயம்....
Category: கருவூலம்
அகல் விளக்கு- 6
கிராமத்து மக்களின் கபடமற்ற வெள்ளை உள்ளத்தை இந்த அத்தியாயத்தில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் மு.வ. அது மட்டுமல்ல, சந்திரனுக்குள் இருக்கும் சிறு களங்கத்தையும் லேசாக சுட்டிக்காட்டுகிறார். அவன் தானே இக்கதையில் திசை மாறும் நாயகன்?
அகல் விளக்கு- 5
ஊர்த் திருவிழாவை மு.வ. வர்ணிக்கும் பாங்கு எத்துணை இனியது! நவநாகரிகத்தில் நாம் எத்தனை எத்தனை இனியவற்றைத் தொலைத்திருக்கிறோம்? அகல் விளக்கு- பகுதி- 5...
அகல் விளக்கு- 4
இந்த அத்தியாயத்தில் சிறுவன் வேலுவின் வளர்ச்சியை இனிய சொற்களில், மனோவியல் ரீதியில் வர்ணிக்கிறார் மு.வ. அகல் விளக்கின் நான்காம் அத்தியாயம்....
அகல் விளக்கு- 2
கிராமத்திலிருந்து படிப்புக்காக நகருக்குச் செல்கிறான், பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்த சிறுவன் சந்திரன்.... மு.வ.வின் அகல் விளக்கு- இரண்டாம் அத்தியாயம்...
அகல் விளக்கு- 1
மு.வ. எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட பேராசிரியர் மு.வரதராசன் (1912 ஏப். 25 - 1974 அக். 10) புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமின்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இனிய தமிழ் நடையும் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கும் ஆற்றலும் கொண்டவை இவரது படைப்புகள். சாஹித்ய அகாதெமி (1961) விருது பெற்ற, இவர் எழுதிய ‘அகல் விளக்கு’ புதினம் நமது தள வாசகர்களுக்காக இங்கே... இது அகல் விளக்கின் சுடர்-1....
அகல் விளக்கு – அறிமுகம்
மு.வரதராசன் (1912 ஏப். 25 - 1974 அக். 10) புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இனிய தமிழ் நடையும் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கும் ஆற்றலும் கொண்டவை இவரது படைப்புகள். நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை எழுதியவர். இவர் எழுதிய ‘அகல் விளக்கு’ புதினம், சாஹித்ய அகாதெமி (1961) விருது பெற்றதாகும். இப்புதினம் நமது தள வாசகர்களுக்காக இங்கே தொடராக இடம்பெறுகிறது…
மனுமுறை கண்ட வாசகம்- 5
தனது மகன் தேரில் செல்கையில் அறியாமல் நேரிட்ட விபத்தில் பசுவின் கன்று இறந்ததனால் ஏற்பட்ட தோஷத்துக்குத் தண்டனையாக தனது மகனையே அதேபோல தேர்க்காலில் இட்டு நசுக்கிக் கொன்றவன் மனுநீதி சோழன்; அதுவே மனு நீதி சாத்திரம் சொல்லும் அறமென்று கூறியவன். உலக உயிர்கள் அனைத்தையும் சமமாக பாவிக்கும் இந்தக் குணமே தமிழக சரித்திரத்தில் அவனுக்கு நிலையான இடம் அளித்திருக்கிறது. இதுவே அருளாளர் வள்ளலாரால் ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலாகப் பாடவும் பெற்றது. அந்த நூலின் நிறைவுப்பகுதி இது…
மனுமுறை கண்ட வாசகம்- 4
மகனால் நேரிட்ட பசுக்கொலைக்கு பிராயச்சித்தம் செய்து விடலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் மனுஸ்மிருதியில் கூறி இருப்பதாகவும் கூறும் அமைச்சர்களின் சமாதானத்திற்கு மனுநீதி சோழன் கூறும் பதில் அற்புதமானது. பசுவை வள்ளலார் எங்ஙனம் மதித்தார் என்பதற்கான சான்று ‘மனுமுறை கண்ட வாசகம்’... இதோ பகுதி -4...
Storming the World’s Parliament of Religions
Dr.R.Ilango Ramaujam is the Vice Pricipal (Retd), Vivekananda College, Thiruvedagam, Madurai. His article on Swami Vivekananda's Chicago Address, follows...
மனுமுறை கண்ட வாசகம்- 3
“மனுநூலில் சொல்லிய நீதியின்படி நடத்துகின்றபடியால் மனுச்சோழன் மனுச்சோழனென்று நெடுந்தூரம் நீண்ட பெயரைச் சுமந்த நான், என் புத்திரனுக்காக அமைச்சர்களாகிய நீங்கள் சொல்வது போல நடந்தால் உலகம் என்னைப் பழிக்காதா?” என்று கேட்கிறார் மனுநீதி சோழன். வள்ளலார் மனுநீதி நூலைப் போற்றியதற்கான ஆதாரம் ‘மனுமுறை கண்ட வாசகம்’ அல்லவா? இதோ பகுதி-3...
மனுமுறை கண்ட வாசகம் -2
தமிழின் ஆரம்பகால உரைநடை என்பதால் சற்று நிதானமாகப் படிக்க வேண்டிய, நெடும் வாக்கியங்கள் கொண்ட நூல் வள்ளலாரின் ‘மனுமுறை கண்ட வாசகம்’. செய்யுள் உரைநூல்களுக்கு அடுத்தபடியாக, தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழின் எழுத்துநடையை ஆற்றொழுக்கான உரைநடைக்கு மாற்றும் முயற்சியில் இந்நூல் முக்கியமான ஒரு மைல்கல். மனுநீதி சொல்லும் அறங்களையே வள்ளலார் இந்நூலில் சுட்டிக்காட்டுகிறார்… இது இரண்டாம் பகுதி...
மனுமுறை கண்ட வாசகம் -1
மனுநீதி சாஸ்திரம், சனாதனம் ஆகிய சொற்களைக் கேட்டாலே தமிழகத்தில் ஒரு சிலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. இந்தக் கும்பல் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருளாளர் திருவருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளை திராவிட இயக்கத்தின் கருத்தியல் முன்னோடியாகக் கொண்டாடுகிறது. இதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. உண்மையில் திராவிடக் கருத்தியலுக்கு நேர்மாறானவர் மட்டுமல்ல, சனாதனத்தின் காவலராக அவதரித்தவர் வள்ளலார். அவர் மாணவர்களுக்கு பாடம் புகட்ட 1854-இல் எழுதிய ‘மனுமுறை கண்ட வாசகம்’ உரைநடை நூலே இதற்கு ஆதாரம். “தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ?” என்று மனுநீதி சோழன் புலம்புவதாக இந்நூலில் ஒரு காட்சி வருகிறது. தெய்வத்தை இகழ்ந்து ஆணவமாகத் திரியும் எத்தர்களுக்கு வள்ளலார் என்ற பெயரைச் சொல்லவே தகுதியில்லை.
ஜே.டி.சாலிங்கர், லியோ டால்ஸ்டாய் மற்றும் சுவாமிஜி
தில்லியில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு. சௌமிக், சுவாமி விவேகானந்தரின் வெளிநாட்டு அன்பர்கள் குறித்து 2013-இல் எழுதிய கட்டுரை இது...
இரண்டு உலகங்கள்
‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது பழமொழி. அதுபோலவே தான், மனித உணர்வுகள் அற்ற அறிவியலும் இலக்கியமும் வாழ்வின் இனிமைக்கு உதவாது என்கிறாரோ புதுமைப்பித்தன்?