சமஸ்கிருதம் செத்துப் போன மொழியா?

துணை முதல்வர் உதயநிதி, ஒரு நிகழ்ச்சியில், சமஸ்கிருதம் செத்த மொழி என்று போக்கிற போக்கில் பேசி இருக்கிறார். அவருக்கான பதிலடியை மிகவும் நாகரிகமாக (இதுவும் சமஸ்கிருதச் சொல் தான்) அளித்திருக்கிறார் திரு. முரளி சீதாராமன்...

வருவாள்  செண்பகவல்லித்தாய்   – 4  

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது...

ஷாகாவுக்கு வெளியே சங்கம்

முன்பெல்லாம் சங்கத்தை 'சங்க யானி ஷாகா; ஷாகா யானி கார்யக்கிரமா ' (சங்கம் என்றால் ஷாகா ; ஷாகா என்றால் அங்கு நடக்கும் செயல்கள்) என்று வரையறுப்பார்கள் . ஆனால் இப்போது 'சங்க யானி ஸ்வயம்சேவக்; ஸ்வயம்சேவக் யானி பிரகல்ப் ' (சங்கம் என்றால் ஸ்வயம்சேவகர்கள்; ஸ்வயம்சேவகர்கள்  என்றால் அவர்கள் நடத்தும் செயல் திட்டங்கள்) என்று சொல்வது பொருத்தமாகும்.

வ.மு.முரளிக்கு ஹரன் நினைவு விருது!

ஸ்ரீ டி.வி.யின் பி.ஆர்.ஹரன் நினைவு விருது வழங்கும் விழா அழைப்பிதழ் தொடர்பான செய்தி இது...

நாவாய்- புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்!

சுதந்திர வேள்வியில் தமிழகத்தின் ஆன்மாவாகச் சுடர்விட்ட தியாகதீபம் வ.உ.சி. அவர்கள். அவரைப் பற்றிய வரலாற்றுத் திரைப்படத்தை (நாவாய்) தோழர் திரு. பார்கவன் சோழன் இயக்கி, உருவாக்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு ‘பொருள் புதிது’ இணையதளத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அவரது முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

விழிப்புடன் இருப்போம்! தேசம் காப்போம்!

நாடு என்பது நாம் அனைவருமே தான். மத அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் போன்றோர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்யும் விஷமப் பிரசாரம் வென்றுவிட நாம் அனுமதிக்கக் கூடாது. தேசம் காப்பது விழிப்புணர்வுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும் கூட.

இரு ஆண்டுகள் நிறைவு: ஒரு மீள்பார்வை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2022 மார்ச் 1) பொருள் புதிது இணையதளம் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்பணியை மீள் பார்வை செய்ய வேண்டியது நமது கடமை. கடந்த இரு ஆண்டுகளில், ஒருநாள் கூட இடைவெளியின்றி, புதிய பதிவுகளை வலையேற்றி உள்ளோம் என்பதே மிகவும் திருப்தி அளிக்கிறது. இது வரையிலான 730 நாட்களில் 1,673 பதிவுகளை (கட்டுரைகள், கவிதைகள், மொழியாக்கங்கள்) நமது தளத்தில் பதிவேற்றியுள்ளோம்.

நூல்கள் அறிமுக விழா- செய்திகள்

என்றும் வாழும் சநாதன தர்மம், தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா தொடர்பான செய்திகள், தினமலர் நாளிதழின் திருப்பூர் பதிப்பில் (25.10.2023) வெளியாகி உள்ளன. அந்த செய்திகளின் பதிவுகள் இங்கே...

ஓர் அழைப்பிதழ்…

நமது ‘பொருள் புதிது’ இணையதளத்தில் வெளியான இரு தொடர்கள் நூல் வடிவம் பெற்று, விஜயதசமி அன்று வெளியாவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இந்த நூல்களின் வெளியீட்டு விழாவை திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளை அமைப்பினர் விஜயதசமியன்று (24.10.2023) சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அதன் அழைப்பிதழ் இங்கே இணைக்கப்பட்டுள்ளது...

ராமாயண சாரம் (26-27)

வில் வித்தையில் பேராற்றல் கொண்ட ராமன், தன் ஒரு அம்பினால் ராவணனின் வில் முறிந்து போகச் செய்கிறான். ஒரே ஒரு அம்புதான்! ராவணன் வில் முறிந்தது. ராவணன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஈரேழு உலகிலும் தனை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புக் கொண்டிருந்தவனை, ஒரே அம்பில் நிலைகுலையச் செய்கிறான் ராமன்.

ராமாயண சாரம் (24-25)

அன்றைய இரவு, மனித குலத்தின் ஓரு பெரும்போரை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. இலங்கையின் இரண்டு முனைகளில் இரண்டு மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இரண்டு வீரர்கள் ஒருவரோடு ஒருவர் பொருதற்குக் காத்திருந்தனர். அடிபட்ட புலிபோல, தர்மத்தை நிலைநாட்ட வேண்டி ராமன் ஒரு முனையில். அதர்மியாக, அதீத ஆசை கொண்டு, யார் பேச்சையும் மதிக்காமல் திமிர் பிடித்த ராவணன் மறுமுனையில்.

ராமாயண சாரம் (19-20)

தன் உயிரைத் துச்சமென மதித்து கடல் கடந்து தனியனாக வந்து அரக்கர் மாளிகையின் உட்புகுந்து சீதையைத் தேடி தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிய அனுமனுக்கு கோவில் வைத்து கும்பிட்டு நன்றி சொல்வது நம் கடமை.

ராமாயண சாரம் (6-8)

ராமன்  “அது அரக்கர் வாழும் காடு; மலைகளைக் கடக்க வேண்டி வரும். உன் மலர்ப்பாதங்கள் அதைத் தாங்காது. உன் பாதங்கள் குளிர்ந்த அரக்குண்ட செம்பஞ்சு போன்றது. வனத்தில் நடப்பது உனக்கு கடினம்” என்கிறான். சீதையோ மனம் வெதும்பி  “நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?” என்று குமுறுகிறாள்.

அகல் விளக்கு- 7

மகாகவி பாரதி தனது சுயசரிதையான ‘கனவு’ கவிதையில் ’பிள்ளைக்காதல்’ குறித்துப் பாடுகிறார். அதேபோல, இப்புதினத்தில் வேலு - கற்பகம் என்ற இரு மழலை உள்ளங்களை நமக்கு அழகாகக் காட்சிப்படுத்துகிறார் மு.வ...

அகல் விளக்கு- 3

படிக்க வந்த வாலாசா நகரில், வேலுவுடன் நண்பனாகிறான் சந்திரன்.... எளிய எழுத்து நடை, இனிய சொற்கள்.... மு.வ.வின் அகல் விளக்கு - மூன்றாம் அத்தியாயம்...